எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Saturday, April 18, 2020

லக்கினம்



ஒரு குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்தை தான் லக்கினம் என்பர். அதாவது ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப் பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம் என்பர்.
சூரியன் முன்பு பூமி சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு இலக்கினம் எனப்படும்.

லக்கினம் எப்படி கணிப்பது என்பது பெரிய கணிதம். நமது ஜாதகத்தை எடுத்தல் "ல" என்று போட்டு இருப்பதுதான் லக்கினம். லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால் ஒவ்வொரு ராசியும் 2, 3, 4 ,5 ,6, 7, 8, 9, 10, 11, 12 என்று வரிசைப்படி வரும். லக்கினத்தை வைத்துதான் ஜாதகம் கணிக்கப் படுகிறது


ஸ்தானபலன்கள்

லக்கினம் முதல் 12 ஸ்தானங்களில் அறிய வேண்டிய பலன்கள்

இலக்கினம் தான் (ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான்)முதல் வீடு எனப் படும். உதாரணத்திற்கு ஜாதகத்தில் கும்பம் தான் லக்கினம் என்றால் அதுதான் முதல் வீடு ஆகும் .. அடுத்த வீடு மீனம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் மகரம் தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு.அதைப்பற்றி இப்போது பார்ப்போம்

முதல் வீடு (லக்கினம்):
    • உடல் பகுதி : தலைப் பகுதி
    • உயிர் (ஆயுள்)
    • உடல்வாகு - நிறம், உருவம், உயரம், உடல் தோற்றம்
    • குணாதிசயங்கள்
    • குழந்தைப் பருவம்
    • உடல்நலம்
    • சுற்றுச்சூழல் (ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும்)
    • மன வலிமை,வெற்றி, புகழ் & அவதூறு, ஆளுமை

இரண்டாவது வீடு:
    • உடல் பகுதி: முகம், ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், வாய், நாக்கு,
    • குடும்பஸ்தானம் (குடும்பத்தைக் குறிக்கிறது).
    • தனஸ்தானம் (பொருளாதாரம் - பணவரவு, செலவு போன்றவை ,அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் , வங்கியில் உள்ள பண நிலைமை போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.)
    • வாக்குஸ்தானம் (ஒருவர் கனிவாக அல்லது கடினமாகப் பேசுவாரா, நன்றாகஅல்லது திக்கிதிக்கிப் பேசுவாரா என்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். )
    • கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். (ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம்.)
மூன்றாம் வீடு :
    • உடல் பகுதி: காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய், தொண்டை, நரம்பு மண்டலம்
    • சகோதர ஸ்தானம் (இளைய உடன்பிறப்புகள்)
    • தைரியஸ்தானம் (தைரியம் , எதிரியை வெற்றி கொள்ளும் திறமை)
    • ஆள் அடிமைகள், அணிகலன் போகம்
      (அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்து பலன் கூறலாம்.)
நான்காம் வீடு:
    • உடல் பகுதி: நுரையீரல், இதயம்
    • தாயார் ஸ்தானம் (மாத்ரு ஸ்தானம்)
    • சுகஸ்தானம்
    • கல்வி ஸ்தானம்
    • பந்துகள், வித்தை, வியாபாரம்
    • அசையா சொத்து மற்றும் வாகனம் (Immovable property and vehicle) (ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் )
      (சில ஜோதிட நூல்கள் பெண்களின் கற்பு )மற்றும் தாயின் ஒழுக்கம் பற்றியும் இந்த ஸ்தானத்தை வைத்து சொல்லாம் என்பர்.)
ஐந்தாம் வீடு :
    • உடல் பகுதி: இரைப்பை, கணையம் (Liver)
    • புத்திர ஸ்தானம் (குழந்தை பாக்கியம் )
    • பூர்வ புண்ணிய ஸ்தானம் (சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அரிதல் )
    • புகழ், அம்மான் (அம்மா வலி மாமன்மார்கள்)
    • ஆன்மீக வாழ்க்கையையும் மற்றும் கலை துறையில் நாட்டம் , காதல் திருமணம், மேல்படிப்பு .
ஆறாம்வீடு:
    • ரோகஸ்தானம்
    • பகைஸ்தானம் (சத்ருஸ்தானம்)
    • கடன், வியாதி, உண்ணும் உணவு, வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள், கவலைகள், துக்கங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்கள்.
ஏழாம்வீடு :
    • உடல் பகுதி: சிறுகுடல் (Small Intestine)
    • களத்திர ஸ்தானம்
    • மாரக ஸ்தானம்
    • கூட்டாளிகள்
      (திருமணம், வியாபாரம் மரணம் மற்றும் பிரயாணம் ஆகியவற்றை( குறிக்கும் )
எட்டாம் வீடு :
    • உடல் பகுதி: வெளி பிறப்பு உறுப்புக்கள்(ஆண் பெண் குறிகள் ), குதம் , பெருங்குடல் (External Sexual Organs, Large Intestine, Anus)
    • துஸ்தானம்
    • ஆயுள் ஸ்தானம் ( மரண வழி : மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம்).
    • அவமானம், கண்டம், கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம், பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ், துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான்.
ஒன்பதாம் வீடு:
    • உடல் பகுதி: இடுப்பு, அனைத்து இடுப்பு இணைப்புக்கள்
    • பித்ருஸ்தானம் அல்லது தகப்பனர் ஸ்தானம்
    • பாக்கியஸ்தானம்
    • போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம் (பிரயாணம்), தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், தர்மம் போன்றவற்றைஅறிய இந்த வீடு உதவும்
பத்தாம் வீடு:
    • உடல் பகுதி: தொடைகள், கால்களின் மேற்பகுதி
    • தொழில் ஸ்தானம் (அ ) ஜீவன ஸ்தானம்.
    • ஒருவரின் ஜீவனம் (தொழில்), கெளரவம், ராஜயாதிபத்யம், கர்மம் , ஞானம் சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல முடியும்
    • மேலும் இந்த வீட்டை கர்மஸ்தானம் என்பர் (தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும்)
    • ஒருவரின் எஜமானர், அரசாங்கம் நிலை(அரசியல் நல்லபடியாக இருக்குமா?) இந்த வீட்டை வைத்துதான் சொல்வர்கள் .
பதின்னென்றாம் வீடு :
    • உடல் பகுதி: கால்களின் கீழ்ப்பகுதி, முழங்கால் முதல் பாதத்திற்கு முன் பகுதிவரை
    • லாபஸ்தானம் (நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் பற்றி அறிய உதவும் வீடு .)
    • முத்த சகோதர ஸ்தானம் (மூத்த சகோதரத்தைப் பற்றி இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்
பத்திரண்டாம் வீடு :
    • உடல் பகுதி: பாதம், ஆண்களுக்கு இடது கண், பெண்களூக்கு வலது கண்
    • மோட்ச ஸ்தானம்
    • விரய ஸ்தானம் (நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும்.)
    • துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், , மறைமுக எதிரிகளையும் , ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.
    • கடனைத் திருப்பிக் கொடுப்பதையும், முதலீடு செய்வதையும், சயனத்தையும் இந்த வீட்டை சொல்ல வேண்டும்.
நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும்.



ராசிகள்





ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம் தான் ராசி, அதாவது பிறந்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதுதான் ராசி என்பர். சில ஜோதிடர்கள் அதை சந்திர ராசி எனபர் .

ராசியின்பெயர் ராசியின் அதிபதி தூர அளவு
மேஷம் (Aries) செவ்வாய் (Mars) 0” to 30”
ரிஷபம் (Taurus) சுக்கிரன்(Venus) 30” to 60”
மிதுனம் (Jemini)புதன்(Mercury) 60” to 90”
கடகம் (Cancer) சந்திரன்(Moon) 90” to 120”
சிம்மம் (Leo) சூரியன் (sun) 120” to 150”
கன்னி (Vigro) புதன்(Mercury) 150” to 180”
துலாம்(Libro) சுக்கிரன்(Venus) 180” to 210”
விருச்சிகம்(Scorpio) செவ்வாய் (Mars) 210” to 240”
தனுசு(Sagittarius) குரு(Jupiter) 240” to 270”
மகரம்(Capricorn) சனி(Saturn) 270” to 300”
கும்பம்(Aquarius) சனி(Saturn) 300” to 330”
மீனம்(Pisces) குரு(Jupiter) 330” to 360”

ராகு, கேதுக்கு தனி வீடுகள் கிடையாது. அவர்கள் இருக்கும் இடையே அவர்கள் வீடு ஆகும் .

12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் பங்கு இட்டுக் கொள்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு நான்கு பாதங்கள் உண்டு. எனவே ஒவ்வொரு ராசியிலும் 9 பாதங்கள் அல்லது 2 ½ நட்சத்திரங்கள் உண்டு

12 ராசிகளையும் அதில் அடங்கிய 27 நட்சத்திரங்களையும் கீழ்க் கண்ட சக்கரத்தில் காணலாம்


ஒரு கிரகம் சொந்த வீட்டில் இருந்தால் அது அதிக பலம் உள்ளதாகக் கருதப் படுகிறது. அதிக பலம் உள்ள கிரகம் தன் சொந்த தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்யும்
உச்ச, மூலத் திரிகோண, மற்றும் நீச்ச வீடுகள் :


ஒரு கிரகம் (Planet) எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெறுகிறார். உதாரணமாக சூரியன் (Sun)மேஷத்தில் (Mesham) உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார்.

ராசியின் தன்மைகள்


மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்குப் பல குணங்கள் உண்டு. இவை ஜாதகத்தின் பலன் சொல்ல உதவும்


ஆண், பெண் ராசிகள் :


ஆண் ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்
பெண்ராசிகள்: ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்

ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம். அதாவது ஆண் ராசியில் பெண் பிறந்து இருந்தாலும் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். அதேபோல் ஒரு பெண்ரசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம்.

ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண்சந்ததியையும் கொடுக்கும் என்பர்

ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்றும் . 5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் என்றும் கொள்ளலாம். எனவே ராசிகளை ஆண் , பெண் எனப் பிரிப்பது அவசியமாகிறது


நெருப்பு ராசி :

நெருப்பு ராசி ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள்.

நிலராசி:

நிலராசியை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.

காற்று ராசி:

நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள்.

ஜலராசிகள்:

ஜல ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவர்கள். ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்ட தொழில் கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகிய வற்றில் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்கள் கற்பனை வளம்மிக்கவர்கள்

(மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப்படும்.)

சர, ஸ்திர, ராசி :சரம், ஸ்திரம், உபயம் ராசிகள்:


சர ராசி :
    • சரம் என்பது நகரும் குறிக்கும்
    • இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள்.
    • மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள்.
    • எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள்.
    • சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.
ஸ்திர ராசி :
    • ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும்
    • மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள்.
உபய ராசி :
    • உபயம் என்பது இரு தன்மைகளையும் குறிக்கும்
    • உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள்.
    • சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள்.
    • கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள்.
சர லக்கினத்திற்கு - 11ம் வீடும்
ஸ்திர லக்கினத்திற்கு - 9ம் வீடும்
உபய லக்கினத்திற்கு - 7 ம் வீடும் பாதகஸ்தானம். ஆகும்

பஞ்சபூதங்கள்:

ராசி மண்டலம் முழுவதும் ஆகாயத்தில் இருப்பதால் ராசிகளை பஞ்சபூதங்களான நெருப்பு, பூமி, காற்று மற்றும் நீர் என்ற 4ல் மட்டும் அடங்குவர். பஞ்சபூத தன்மையையும் தொழில், வானிலை அறிதல் போன்ற விஷயங்களுக்கு பயன்படுவர் .


நன்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs) :

ரிஷபம், துலாம், தனுசு, மகரம் ஆகியவை ஆகும் (எல்லா ஜல ராசிகளும் நன்மை பயக்கும் ராசிகளே )

வறண்ட ரசிகள் (Barren Signs) :

மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகியவை வறண்ட ராசிகள் ஆகும் . (இ.ந்த ராசியிலுள்ள கிரகங்கள் நன்மையான பலன்களைக் கொடுக்காது. நன்மை பயக்கும் ராசிகளுக்கு எதிர் மறையான ராசிகள் )

ஊமை ராசிகள் :

கடகம், விருச்சிகம், மீனம் (எல்லா ஜல ராசிகளும்)ஊமை ராசிகள் ஆகும் .
(ஒருவரின் ஜாதகத்தில் 2-ம் வீடு பேச்சு, நாக்கு வன்மையைக் குறிக்கிறது. குழந்தைகள் நன்றகப் பேசுவார்களா அல்லது பேசமாட்டார்களா என்று 2-ம் வீட்டையும், இந்த ஊமை ராசிகளயும் வைத்துக் கொண்டு சொல்லிவிடலாம். அதற்குத்தான் இந்த ராசிகள் பயன் படுகின்றன.)

நான்கு கால் ராசிகள் :

மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம் ஆகியவை நான்குகால் ராசிகள் எனப்படும்.
ஆடு (மேஷம்), காளை (ரிஷபம்), சிங்கம் (சிம்மம்), ஆடு (மகரம்), ஆகியவை 4-காலுள்ள உயிரினங்கள் எனவே இந்த ராசிகளை நாலுகால் ராசிகள் என்று அழைக்கின்றனர் . (வண்டி வாகனங்கள் வாங்குவதற்கு உதவும் .

இரட்டை ராசிகள் :

மிதுனம், தனுசு, மீனம் ஆகியவை இரட்டை ராசிகள் எனப்படும். (இது ஒருவருக்கு இரண்டு மனைவிகளா? குழந்தை இரட்டையாகப் பிறக்குமா? இரட்டை வருமானம் ஒருவருக்கு வருமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த ராசியை வைத்துக் கொண்டு பதில் முடியும்)

முரட்டு ராசிகள்:

மேஷமும், விருச்சிகமும் முரட்டு ராசிகள் ஆகும் . இந்த ராசிகளின் அதிபதி செவ்வாய் . செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் ஆகும். அதனால் அந்த ராசிகளுக்கு முரட்டு ராசிகள் கூறப்படுகின்றன

மலட்டு ராசிகள்:

மேஷம், மிதுனம்,சிம்மம், கன்னி ராசிகள் மலட்டு ராசிகள் எனபர் . (குழந்தை பிறக்கும் தன்மை கண்டு அறிய உதவும்)