எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Monday, May 18, 2020

மாந்தி 12 வீடுகளில் இருந்தால் பலன்


மாந்தியை குளிகன் என்றும் அழைப்பார்கள். இது ஒரு துணை கிரகமாக செயல்படுகிறது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் பிறந்தால் மாந்தி என்றும் சொல்லப் படுகிறது. சனி புத்திரன் மாந்தி. எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும் என்பார்கள். ஜாதகத்தில் “மா” என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ராமாயணத்தில் மாந்தி பிறந்த கதை உண்டு. இராவணன் தான் மகன் பிறக்கும் போது சனி 11ல் இருக்கும்படி கட்டளை இட்டார். (சனி 11ல் இருந்தால் நல்லது என்பது நமக்கு தெரியும்) கர்மாவை தராசாக கொண்டு நடக்கும் நித்மான் ஆகிய சனி சரி என்று ஒப்புக் கொண்டாலும் அவரது ஒரு கால் 12ம் வீட்டை நோக்கி சென்றதாம் . அதை பார்த்த இராவணன் சனியின் அந்த காலை வெட்டி விழுத்த அதிலுள்ள சதை பகுதி லக்கினத்தில் விழுந்து மாந்தியாக உருவெடுத்து, இராவணன் மகன் இந்திரஜித்க்கு அற்ப ஆயுளை தந்து என்று கதை சொல்வார்கள் (பல நுல்களின் பல கதைகள் உள்ளது). சரி மாத்தி 12 ஸ்தான பலன்களை பார்ப்போம்
1-ம் வீட்டில் இருந்தால் :
குண்டான உடலமைப்பு (நன்றாக சாப்பிடுவார்கள் எனலாம்), உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், கொடூர சிந்தனைகள், முரட்டு குணம், சுறுசுறுப்பு ஆகியவைகளை கொண்டு இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்
2-ம் வீட்டில் இருந்தால் :
குடும்ப வாழ்க்கை நிம்மதியின்மை, பேச்சில் தடுமாற்றம் அல்லது விதண்டாவாதம் செய்தல், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் மற்றும் வறுமை, கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர். துஷ்டன் என்று பெயர் எடுப்பார்கள். உடல் ஊனம் இருக்கும். (இது மாந்திக்கு நல்ல ஸ்தானம் கிடையாது)
3-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும். மிக எளிதில் உணர்ச்சவசப்படுதல், முன்கோபம், யாருடனும் அனுசரித்து போகாத தன்மை ஆகியவை இருக்கும். உடன் பிறந்தவர்கள் இருக்கமாட்டார்கள் அப்படி இருந்தாலும் அவர்களுடன் நல்ல உறவு இருக்காதது. அரசு ஆள்பவர்களின் தொடர்பு மற்றும் மதிப்பையும் பெற்று இருப்பார்கள்.
4-ம் வீட்டில் இருந்தால் :
நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும். துரஷ்டசாலிகள் என்றும் சொல்லாம். ஆனால் பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைபகுதியில் சில காலம் வாழ நேரிடும். அதனால் குற்றம் ஓன்றும் இல்லை புலிப்பாணி ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது.
5-ம் வீட்டில் இருந்தால் :
புத்திரதோஷம் உண்டு நிலையில்லாத மனம் உடையவர்கள். மனநிலை பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாமை, தைரியம்(வீரம்), தகாத உறவுகள் ஆகியவை கொண்டவராகவும் இருப்பார்கள்.
6-ம் வீட்டில் இருந்தால் :
மிகவும் நல்ல இடம் நீண்ட ஆயுள், பிறருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள். எதிரிகள் இருக்க மாட்டர்கள் இருந்தாலும் அவர்களை வெற்றி கொள்ளவர்கள். பரோபகாரி என்றும் சொல்லாம்.
7-ம் வீட்டில் இருந்தால் :
சிறு வயதில் கண்டம் நேரலாம். வீண் விவாதங்கள் செய்ப்பராக இருப்பார்கள் மேலும் விவாதங்களால் தன விரயம் ஏற்படும். தனக்கு என்று தவறான நியதிகள், தவறான நியாயங்களை வைத்தது `இருப்பர்கள்.
8-ம் வீட்டில் இருந்தால் :
அதிக பசி, மறைமுக வியாதிகள், எல்லாவற்றிலும் தோல்விகள் ஆகியவை ஏற்படும். நீரால் கண்டம் ஏற்படும். கண் பார்வை குறைபாடுகள் ஏற்படலாம்
9-ம் வீட்டில் இருந்தால் :
பிதுர்தோஷம் உடையவர்கள். மெலிந்த உடலமைப்பும், தவறான பாதை மற்றும் தவறான பழக்கவங்கள் உடையவர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி எல்லா இன்மை, தனிமை, வாழ்க்கையில் கவலைகள், பிரச்னைகளை ஆகியவை ஏற்படலாம்.
10-ம் வீட்டில் இருந்தால் :
கருகிகள் என்று இவர்களை சொல்லாம் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் அடைவார்கள் தனிமையை விரும்புபவராகவும் இருப்பார்கள். இறை நம்பிக்கை இருக்காது அப்படி இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டார்கள் பொதுவாக நல்ல குடும்பம் குழந்தைகள் சுகமாக இருப்பார்கள்
11-ம் வீட்டில் இருந்தால் :
செல்வம் செல்வாக்கு எந்த குறையும் இன்றி அரசனை போல் வாழ்வார்கள். நல்ல வாழ்க்கைதுணை, மற்றவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். வசியன் (தேவதை வசியன்), ஜாலகாரன் என்றும் சொல்லாம்
12-ம் வீட்டில் இருந்தால் :
இது ஒரு மோசமான அமைப்பு. ஏழ்மை நிலை, வீண் பணவிரயம், தவிர்க்க முடிய வீண் செலவு போன்றவையால் அவதியுறுவார்கள். மேலும் சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள்.சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும்.
குறிப்பு : : மாந்திக்கு பார்வைகள் இல்லை என்று சில நூல்களிலும் 2, 7, 12 வீட்டை பார்க்கும் என்றும் சில நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில நூல்களில் மாந்தி, குளிகன்வேறு என்றும் மாந்தி சனி மகன் குளிகன் எமதருமன் மகன் என்றும் கூறுகிறது. நாம் குழம்ப வேண்டாம். மாந்தி, குளிகன் ஓன்றுதான் என்று புலிப்பாணி நூல் சொல்வதை ஏற்றுக் கொள்ளவோம்.

Sunday, May 17, 2020

கேது 12 வீடுகளில் இருந்தால் பலன்


லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
விரக்தி மனப்பான்மை உடன் எதிலும் பற்று அற்றவராக, மெல்லிய சரீரமுடையவராகவும், கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் உடனும் அமைதியவராகவும் இருப்பார்கள். எதிரிகளால் உடலிலும் பிரச்னை உண்டு.
2-ம் வீட்டில் இருந்தால் :
கடுமையாகவும், கம்பிரமாகவும் பேசக் கூடியவர். பண நஷ்டம் ஏற்படக் கூடும். எதையாவது பிறரைப்பற்றி குறையாக பேசி கொண்டே இருப்பர் . கல்வி கெடும். குறுகிய கண்ணோட்டம் உடையவராக இருப்பர். குடும்பத்தில் குழப்பம், பிரச்னை, செய்வினை கோளாறு,நிம்மதி குறைவு போன்றவை இருக்கும். திருமணம மற்றும் குழந்தை பேறு கால தாமதம், சபலம் குணம் போன்றவையால் அவதி அடைவார்கள் .
3-ம் வீட்டில் இருந்தால் :
துணிச்சல் மிக்கவர்கள். உடல் பலம் பொருந்தியவர்கள். தர்ம சிந்தனை இருக்கும். நல்ல குடும்பம், நல்ல உறவினர்கள் அமையும். இளைய சகோதர சகோதரிகள் இது நல்லது அல்ல. எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிப்பர்கள் ஆனாலும் மனதில் ஏதொரு குறை இருந்துக் கொண்டே இருக்கும்.
4-ம் வீட்டில் இருந்தால் :
தாயாரால் அனுகூலமில்லை. வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கையில் பல தரப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். இதய சம்மந்தப் பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. தீய எண்ணங்களில் மனம் லயக்கும். இந்த அமைப்பு உடைய ஜாதகர்கள்பிறரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டார். வாகனங்கள் வாங்குவதற்க்கு தடை, வாகனங்களால் பிரச்னை உண்டு.
5-ம் வீட்டில் இருந்தால் :
உதாரண குணம் சபல புத்தி அஜீரணக்கோளாறுகள், கெட்ட குணம், புத்தி கூர்மையின்மை ஆகியவை இருக்கும். 5ல் கேது இருந்தால் சந்நியாச யோகம் என்று சில நூல்கள் கூறுகிறது. மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இல்லை எனில் குழந்தை இன்மை அல்லது குழந்தைகளால் நன்மையின்மை ஏற்படும்
6-ம் வீட்டில் இருந்தால் :
கேதுவிற்கு மிகவும் உகந்த இடம். புகழும், அதிகாரமும்,செல்வாக்கும் தேடிவரும். உயர் கல்வி, தர்மசிந்தனை, சொந்தபந்தங்களை நேசிக்கும் தன்மை, பலதுறைகளில் அறிவு, தைரியம் வித்தை ஆகியவை இருக்கும். எதிரிகள் இருக்க மாட்டார்கள். இன்பமான வாழ்ககை அமையும். அஜீரணக்கோளாறுகள் ஏற்படும்.
7-ம் வீட்டில் இருந்தால் :
திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. நோய்வாய்ப்பட்ட வாழ்க்கை துணை அமையும். இளமை கால வாழ்க்கை நன்றாக இருக்காது. வாழ்க்கையில் வளமை இன்றி மன அழுத்ததுடன் வாழ்வர். சோம்பல், முடபுத்தி, இருதாரம், பொய் சொல்தல் ஆகியவை இருக்கும். 7ம் இடம் விருச்சிக ராசியாக இருந்தால் எப்போதும் சுகம், தனலாபம் உண்டாகும்.
8-ம் வீட்டில் இருந்தால் :
அறிவாளிகள் மேலும் மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவர்கள் விபத்துகள் மற்றும் உடம்பில் நோய்களால் புண்கள் வரலாம். தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் தோன்றும் . பொதுவாக ஆயுள்தோஷம் உண்டு. அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் ஆசை, திருமண வாழ்வில் பிரச்சினைஆகியவை உண்டு திருமணம் கால தாமதமாகும். சசுபலன் பெற்றால் புகழ், தலைமை ஏற்கும் தகுதி ஆகியவை இருக்கும். அந்த 8ம் இடம் விருச்சிகம், கன்னி, மேஷம், ரிஷபம், மிதுனத்தில் இருந்தால் அஷ்ட ஐஸ்வரியம் உண்டாகும்.
9-ம் வீட்டில் இருந்தால் :
தகப்பனாருடன் நல்லுறவு இருக்காது. பிதூர்தோஷம் ஏற்படும். மிக்க தைரியசாலியாகவும் அதிஷ்டமில்லாமை, நல்ல புத்திரர்கள், நண்பர்கள், தர்மம் செய்யும் குணம் ஆகியவை பெற்று இருப்பார்கள். மாறும் மன நிலை உடைய இவர்களுக்கு தெய்வ பக்தி மிக குறைவாக இருக்கும் (இல்லாமலும் போகலாம்)
10-ம் வீட்டில் இருந்தால் :
உற்சாகமான மனம், நிறைந்த அறிவு, கலைகளில் ஈடுபாடு, இரக்க மனம் ஆகியவை பெற்று இருப்பார்கள். தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்தித்து நல்ல தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவார்கள். சிலருக்கு தந்தை உடல்நலப் பிரச்சனை அல்லது பணம் கஷ்டத்தில் இருப்பர். சௌரிய குறைவு, துக்கம் ஆகியவை உண்டாகும்.
11-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல பணவரவு, நண்பர்களின் உதவி, நல்ல குணம், எடுத்த காரியங்களில் வெற்றி, நல்ல பெயர், தர்ம செய்யும் குணம் போன்றவையுடன் சுகமாக வாழ்வர். சூதாட்டம், லாட்டரிச் சீட்டு அல்லது பங்கு சந்தை போன்றவற்றில் இருந்து பணம் வரும் வாய்ப்பு உண்டு. மூத்த சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை குறையும்
12-ம் வீட்டில் இருந்தால் :
12ல் கேது இருந்தால் ஜாதகருக்கு இது கடைசி பிறவி என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது. மனம் அமைதியின்றி அலைபாயும்.. புண்ணிய தலங்களுக்க அடிக்கடி செல்வார். சிலர் பிறந்த நாட்டில் இருந்து தூர தேசங்களில் வசிக்க நேரிடும். பணசேமிப்பு இருக்காது இல்லற சுகபோகங்களில் ஈடுபாடு இருக்காது. பாதங்களில் நோய் ஏற்படக்கூடும். நல்ல திறமையாக வாதங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவர். பரம்பரை சொத்துக்கள் இழக்க நேரிலாம்
குறிப்பு : சனியின் வீடுகளான மகரம் கும்பம் வீடுகளில் இருந்தால் மிகவும் சிறப்பு எனவே இந்த இரண்டு லக்கினமும் கேதுக்கு மிகவும் உகந்தது. விருச்சிகம், கன்னி, மேஷம், ரிஷபம், மிதுனத்தில் இருந்தால் நல்லது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது.

ராகு 12 வீடுகளில் இருந்தால் பலன்


லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
பல வியாதிகள் உடையவர். விவாதம் செய்வதில் கெட்டிக்காரர். வாழ்க்கைதுணையின் மூலம் பிரச்னைகளும், வாழ்க்கை துணையின் உடல் நல பாதிப்பும் இருக்கும். சிலருக்கு நீண்ட ஆயுள், சொத்து சுகம் அமையாது . சிலர் மன நோய் சம்மந்தப்பட்ட வியாதிகள் வரலாம்
2-ம் வீட்டில் இருந்தால் :
குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கண்பார்வையில் கோளாறு ஏற்படும். விஷ நாக்கு உடையவர்கள் (பேச்சில் விஷ தன்மை). குறைந்த அளவே செல்வம் அல்லது கடனில் செல்வம் மூழ்கும் நிலை இருக்கும். சாதுரியமும், சாமர்த்தியமும், கோபமும் உடையவர். ராகுவுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோதான் நன்மை ஏற்படும்.
3-ம் வீட்டில் இருந்தால் :
தைரியசாலியாகவும், மற்றவர்களை கவரக்கூடிய ஆற்றல் உடைவராகவும் நீண்ட ஆயுளுடன், வீண் செலவு செயப்பவராகவும் இருப்பர். வாழ்க்கைத் துனைவி, குழந்தைகள், வீட்டில் செல்வம் இவை அனைத்தும் திருப்தி தரும் வகையில் அமையும். தொழில் சம்மந்தமாக வெளிநாட்டு பயணம் அமையும். வெளிநாட்டு நண்பர்கள் மூலம் லாபம் உண்டு.
4-ம் வீட்டில் இருந்தால் :
முட்டாள்தனமான காரியங்கள் செய்வார்கள். இவர்களின் செயலில் நம்பகத்தன்மை இருக்காது. சுகமில்லாதவர்கள் எனலாம். தாயாரால் அனுகூலம் இல்லை. தாயின் உடல் நலனில் அதிக பாதிப்பு ஏற்படும் . இதய சம்மந்தப்பட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. இடம், சொத்துக்களில் பிரச்னை, வில்லங்கங்கள், பஞ்சாயத்துகள் இருக்கும். பகைகள் உண்டாகும். சிலருக்கு தரித்திர நிலை உண்டாகும். உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படாது. ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு மன அமைதி இல்லாமல், ஒருவிதமான சோகத்தை வைத்துக்கொண்டே வாழ்பவர்களாக இருப்பர் .
5-ம் வீட்டில் இருந்தால் : ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது முதலில் தோல்வி ஏற்பட்டு கடும் முயற்சிக்கு பின்பே வெற்றியை அடைய முடியும்.. நெருங்கிய சொந்த பந்தத்திற்கு அதிகமாக செலவு செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் . சிலருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில ஜோதிட நுல்கள் 5 ல் ராகு இருந்தால் கொள்ளி வெக்க பிள்ளை உண்டு என்று கூறுகிறது திருமண வாழ்க்கையில் அல்லது காதலில் சிக்கினாலும் பிரச்சினை ஏற்படும். சுயநலவாதிகள். மற்றும் கோபக்காரர்கள் . (ராகுவை சனி பார்த்தல் பிள்ளை பிறப்பதில் தாமதம் அல்லது எந்த வாரிசும் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு)
6-ம் வீட்டில் இருந்தால் :
நீண்ட ஆயுள் உடன் மாறாத வியாதி இருக்கும். அவ்வப்போது எதிரிகளின் தொல்லைகளும் இருக்கும். வாழ்க்கையில் ஆரம்பத்தில் கஷ்டத்தையும், பிற்பகுதியில் சந்தோஷத்தையும் இந்த ராகு கொடுப்பார் . நண்ப்ர்களால், வாழ்க்கை துணையால் அதிகமான ஆதாயம் உண்டு. சாப்பாட்டில் பிரியம் இருக்கும் ராகுவுடன் சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால், ஆசாமி ஊழல் பேர்வழியாக இருப்பர். அதிக மூட நம்பிக்கை இருக்கும்
7-ம் வீட்டில் இருந்தால் :
திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. வாழ்க்கை துணை வியாதி உள்ளவராக இருப்பார்கள் . பூர்வக சொத்துகள் கை விட்டு போகும் வாய்ப்பு உள்ளது. ஊதாரியாகவும், அடிக்கடி வியாதிகளால் கஷ்ட படுபவராகவும், மகிழ்ச்சி இல்லாதவராகவும் இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் முதலில் தோல்வி ஏற்பட்டாலும் விடா முயற்சியின் மூலம் வெற்றி பெற்றுபவராக இருப்பார்கள். அடிக்கடி பயணங்கள் செய்ய நேரிடும் .
8-ம் வீட்டில் இருந்தால் :
பல தொந்தரவுகளும். பொதுவாழ்வில் நற்பெயர் இன்மையும் இருக்கும், ராகுவுடன் சந்திரனும் இருந்தால் மன நோயால் பாதிக்கப்படுவார்கள். அடிக்கடி பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். சதா வாக்குவாதம், விதண்டாவாதம் அல்லது சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும். மேலும் அந்த சூழ்நிலையில் தோல்வி மட்டும் அமையும். பெண்கள் சிலருக்கு மாதவிடாய் பிரச்னையும், ஆண்களுக்கு மூல நோய் பிரச்னையும் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத அதிஷ்டம் ஏற்படும். ஆனால் அந்த அதிஷ்டத்தை மற்றவர்கள் தான் அனுபவிப்பார்கள்
9-ம் வீட்டில் இருந்தால் :
இது தகப்பனருக்கு நல்லது அல்ல. பூர்விக சொத்துக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும். சிலர் கடவுள் மேலும், அவர் சார்ந்துள்ள மதத்தின் பேரிலும் அவ்வளவு நம்பிக்கை இருக்காது. நல்ல புத்தி, புகழ்ச்சி, நல்ல தயாள குணம், கீர்த்தி, அடக்கமான குணம் ஆகியவை உண்டு. ஞாபகசக்தி உடையவர்களாகவும், தன் கையில் எடுத்துக் கொள்ளும் காரியத்தை சிறப்பாக முடிப்பவர்களாகவும் வாக்குவாதத்தில் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்கள். அடுத்தவரின் குறைகளை கண்டுபிடித்து குறை கூறுபவராக இருப்பார்கள்.
10-ம் வீட்டில் இருந்தால் :
காம இச்சை அதிகம் உடையவாராக இருப்பார்கள். எல்லா கலைகளையும் கற்றும் திறன் உடன் கை தேர்ந்த கலைஞர்களாக இருப்பார்கள். இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வம் இருக்கும். புத்தர புத்திரகளால் சுகம் இருக்காது. குரூர குணம், அதிக ஆசை, அற்பசுகம், அஜாக்கிரதையால் தன நஷ்டம், நடன சங்கிதத்தில் ஆர்வம் ஆகியவை உண்டு. செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவார்கள். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவராக இருப்பார்கள்.
11-ம் வீட்டில் இருந்தால் :
11லில் ராகு இருப்பது நல்லது. சிலர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி புகழ் பெற்று வாழ்வர். சிலர் வெளி நாடுகளில் வணிகம் அல்லது வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவார்கள். நல்ல கல்வி, செல்வம், புகழ், நீண்ட ஆயுள், செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் அறியும் அல்லது கற்கும் திறமை வளமான வாழ்க்கை, சுகம், நல்ல வலுவான உடல் ஆகியவை பெற்று இருப்பார்கள்.. நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் பெற்று இருப்பார்கள்.. முத்த சகோதரர்கள் நல்லது அல்ல. மூத்த சகோதரரை தவிர மற்ற உறவுகளுக்கிடையே சுமூகமான உறவு இருக்கும்
12-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல வளமான வாழ்க்கை அமையும். ஆனால் ஒழுக்கமற்றவனாக இருப்பார்கள். . ஆனாலும், பலருக்கு உதவும் மனப்பான்மை பெற்று இருப்பார்கள்.. சிலருக்கு கண் பார்வைக் குறைபாடுகள், ஆண் வாரிசு இல்லாமை, உடலில் உபாதைகள், வயிற்று நோய் இருக்கும். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் திடீர் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு செய்யும் காரியம் பலன் அளிக்கமால் போகவும்சூழ்நிலைகள் அமையலாம் .
குறிப்பு : ராகு செவ்வாய் பலனையும், கேது சனியின் பலனையும் பெற்று இருக்கும். ராகு 1, 2, 12 யில் இருந்தால் ராகு கேது தோஷம் என்பார்கள்.(ராகுக்கு 7யில் கேதுவும் கேதுக்கு 7யில் ராகுவும் இருக்கும்) திருமண காலத்தில் இந்த தோஷத்தை ஆராய்ந்து பின் பலன் சொல்ல வேண்டும் ராகு திரிகோணம், கேந்திரத்தில் சுபபிரகங்கள் அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று இருந்தால் சிறப்பான யோகம் உண்டு. மேலும் ராகு தனித்த இல்லாமல் மேலும் அதன் இருபுறமும் கிரகம் இருக்குமாயின் வீரமிக்கவர் என்றும் ராஜனுக்கு ராஜன் என்றும் புலிப்பாணி ஜோதிடம் கூறுகின்றது .

சனி 12 வீடுகளில் இருந்தால் பலன்


லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
சனி லக்கினாதிபதி ஆனால் மிகவும் நல்லது ஆனால் ஆட்சியோ உச்சம் பெறாமல் இருப்பது பொதுவாக நல்லதல்ல. ஒல்லியான உருவம் இருக்கும். உடல் நலத்திற்குக் கேடு அதுவும் குழந்தைப் பருவத்தில் உடல் நலமின்மை இருக்கும். சோம்பேறித்தனம், வித்தியாசமான பழக்க வழக்கங்கள் குறுகிய மனப்பான்மை, கொடூர சிந்தனைகள் கஞ்சத்தனம், உடல் குறைபாடு ஆகியவை உடையவர் வித்துவான்கள் என்றும் கூறலாம். இடம் சம்மந்தப்பட்ட செல்வம் பெற்றவர்கள்
2-ம் வீட்டில் இருந்தால் :
பணப்புழக்கம் மிகக் குறைவாக இருக்கும். வேலைக்கேற்ற ஊதியம் கிட்டாது. குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்காது. பலருடன் கலந்து பழகத்தெரியாதவர். இவர்கள் பிறந்த குடுமப்த்திற்கு கவலைகள் இருக்கும். சேர்த்த பொருள்கள் நாசம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இரு திருமண யோகம், கல்வியில் தடை, கண்ணில் குறைப்பாடு, போதைக்கு அடிமையாக்குதல், வினோதமான சொல்லில் வல்லமை, திக்கி பேசுதல், அதிரடியாக பேசுதல் ஆகியவை உண்டு
3-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல மனைவி அமைவர். நல்ல அறிவு, புத்திசாலித்தனம் உண்டு. தன் சுக வாழ்க்கைக்காக செல்வம் பெற்று இருப்பர் அல்லது சேர்ப்பார், தைரியமானவர். சனி தன் முன்றாம் பார்வையால் 5ம் வீட்டை பார்ப்பதால் சிலருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் அல்லது தத்து புத்திர யோகம் ஏற்படும்.
4-ம் வீட்டில் இருந்தால் :
சிலர் சிறிய வயதில் தாயாரிடமிருந்து பிரிவு அல்லது தாய்க்கு உபத்திரம் அல்லது தாய்க்குக் கண்டம், வாயு உபத்திரவம், வீட்டாலும் வாகனத்தாலும் தொந்தரவு, சோம்பேரித்தனமான குணம், சொந்தக் காரர்கள் நடுவில் மரியாதை குறைவு, தனிமையை விரும்பும் குணம், பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமை, மகிழ்ச்சி இல்லாமை, திடீர் இழப்புக்கள், நல்ல சிந்தனை, கல்வியில் தடை ஆகியவை அமையும். வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்.
5-ம் வீட்டில் இருந்தால் :
புத்திர தோஷம் உண்டு. தந்தைக்கும் தோஷம் உண்டு. குறிகிய மனப்பான்மை, எவர் உடனும் சகஜமாகப் பழகாத தன்மை, வித்தியாசமான கண்ணோட்டம் ஆகியவை இருக்கும். இவர்கள் சண்டாள சித்தர்கள் என்று சில ஜோதிட நூல் சொல்கிறது
6-ம் வீட்டில் இருந்தால் :
நன்றாக வாதம் செய்பவர்கள். நன்றாக சாப்பிடுபவர்கள் துணிச்சல்மிக்கவர்கள். எதிரிகள் இவர்களுக்கு இருக்காது. மேலும் பிடிவாதகாராக இருப்பர் . சிலருக்கு ஆரோக்கியம் குறைப்பாடு இருக்கும் முக்கியமாக அதுவும் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும். புத்திசாலிதனமும் சுறுசுறுப்பும் பெற்று இருப்பார்கள்
7-ம் வீட்டில் இருந்தால் :
திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது. தேச சஞ்சாரம்,நீண்ட வியாதிகள், பாவ சிந்தனைகள் பெற்றவராக இருப்பார்கள் அரசனை போல் வாழ்க்கை அமைந்தாலும் மன அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் இருக்கும் .
8-ம் வீட்டில் இருந்தால் :
நீண்ட ஆயுள், சொற்பக் குழந்தைகள், முன்கோபம், பிறரைக் குறை சொல்லும் குணம், கெட்ட பழக்கம் மூச்சு பிரச்னை ஆஸ்மா, பொருட் செலவு, குறைந்த நன்பர்கள் ஆகியவை உண்டு. வாழ்க்கை துணையின் பொருளாதாரம் நன்றாக இருக்காது. அடிக்கடி நோய் வர வாய்ப்புகள் அதிகம். விசுவாசம் அற்ற குழந்தைகள் சிலருக்கு அமையும் உறவினர்களின் உதவி கிடைக்க வாய்ப்பு இல்லை
9-ம் வீட்டில் இருந்தால் :
தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை, எந்த காரியத்தையும் செய்ய விருப்பமில்ல தன்மை, அகங்கராம், பாவ செயல்கள் செய்யும் எண்ணம், மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் குணம், இறை நம்பிக்கை இல்லாமை, கஞ்சதனம் ஆகியவை இருக்கும். தகப்பனருடன் நல்ல உறவு இருக்காது. மேல் படிப்பில் மந்தத்தன்மை இருக்கும்.
10-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல தனவான் . வைராக்கியமுடைவர்கள் தைரியமுடையவர் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச் சமமான பதவிகளில் இருக்க வாய்ப்பு உண்டு. சிலர் விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில் ஈடுப்பட்டு சிறந்து விளங்குவர்கள். தொழிலில் பல ஏற்றங்களும் இறக்கங்களும் இருக்கும். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பர். தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் ஆகியவை ஏற்படும்
11-ம் வீட்டில் இருந்தால் :
செல்வம், ஐஸ்வரிய பிராப்தம், பூர்ண ஆயுள், சத்திய குணம், நல்ல மனம், குறைந்த நண்பர்கள், நல்ல குழந்தை பாக்கியம்,அரசியல் ஆதாயம், வெற்றி, நல்ல படிப்பு, மரியாதை ஆகியவை உண்டு. பொதுவாக இந்த இடத்தில் சனி இருப்பது மிகவும் நல்லது. சொத்துகளுடன் வண்டி வாகன வசதிகளுடன் வாழ்க்கையை சுகமாக அனுபவிப்பார்கள்
12-ம் வீட்டில் இருந்தால் இந்த ஸ்தானம் நல்லதுல்ல செல்வமும்,மகிழ்ச்சியும் இருக்காது . பலவித நோய்கள், எதிரிகள், நம்பிக்கையின்மை ஆகியவை இருக்கும். சிலர் அங்ககீனம் அல்லது உடற் குறைபாடு இருக்கும் . வியாபாரம் செய்தோ அல்லது எதோ ஒரு வகையில் கையில் உள்ள பணம் மொத்தத்தையும் இழக்கும் சூழ்நிலை அமையும்
குறிப்பு : சனி 3, 6, 9, 11லில் இருந்தால் :

ஆயுள் தீர்க்கத்துடன் நல்லதை செய்வார் அதே போல் அவர் 10ல் இருந்தால் :

பல விதமான நன்மைகளை செய்வார்.

சுக்கிரன் 12 வீடுகளில் இருந்தால் பலன்:

லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
அதிக செல்வம், நயமான குணம், அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை ஆகியவை உண்டாகும்.
2-ம் வீட்டில் இருந்தால் :
பணப் புழக்கம், மிக இனிமையாகப் பேசும் தன்மை, வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம், அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு ஆகியவை அமையும். சிலருக்குப் பெண்களாலும், வாகனங்களாலும் வருமானம் உண்டு. சிலர் கதை கவிதை சொல்வதில் வல்லவராக இருப்பர். பாவக் கிரங்களின் சேர்க்கை அல்லது பலம் இழந்து இருந்தால் சிலருக்கு கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்புகள், தீய பழக்க வழக்கம் ஆகியவை உண்டாகும்.
3-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல வசதி வாய்ப்பு உண்டு. சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய அமைப்பு இருக்கும் பிரபு குணமுடையவர்.எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். புதிய செயல்கள் செய்வதில் ஆர்வமுடையவர்
4-ம் வீட்டில் இருந்தால் :
சுகமான சொகுசான வாழ்க்கை அமையும். நல்ல அறிவாற்றல்,கல்வி, சொத்து சுகத்துடன் வாழ்வர் நல்ல புத்திரர்கள், வாழ்க்கை துணை, நண்பர்கள் அமைவர். தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியானகுடும்ப வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவை அமைய பெறுவர்
5-ம் வீட்டில் இருந்தால் :
அழகானவர், சிறந்த விசேஷமான அறிவு உடையவர். வாழ்க்கை துணையால் சுகம், சந்தோஷமான மனநிலை, சிறு கலகம் செய்வதில் பிரியம், வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, பெண் குழந்தை யோகம் ஆகியவை உண்டாகும்
6-ம் வீட்டில் இருந்தால் :
விரோதிகளே இருக்கமாட்டார். ஆனால் ஆண்கள் இருந்தால் பெண்களாலும், பெண்கள் இருந்தால் ஆண்களும் ஏமாற்றப்படுவார்கள். தவறான அல்லது அதிகமான பாலியல் உறவுகளில் ஈடுபாடு உடையவராக இருப்பர். அதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகுபவராகவும் இருப்பர். உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதம் ஆகியவை உண்டாகும்.
7-ம் வீட்டில் இருந்தால் :
மனதுக்கு இனிமையான வாழ்க்கை, சந்தோஷம் வசதி, வாய்ப்பு அமையும். காமம் மிகுந்தவராகவும், அழகானவராகவும், மக்களுக்கு பிரியமானவராகவும், கல்வியில் பிரியமுடையவராகவும் இருப்பர் குடும்பத்தின் மீது அக்கறை உடையவர். ஆனால் பொதுவாக களத்திர காரகன் களத்திரத்தில் இருப்பது நல்லது அல்ல
8-ம் வீட்டில் இருந்தால் :
சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகின்றது. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும் கிடைக்கும். கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும். தைரியசாலி. களத்திர சுகமில்லாதவர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு . சொல்ல தகாத வார்த்தைகளை பேசுபவர். தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். சிலருக்கு கண்களில் நோய் உண்டாகும்
9-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல செல்வத்துடன் செளக்கியமான வாழ்க்கை அமைந்து அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பர். புத்திரர்களால், வாழ்க்கை துணையால்,தந்தையால் சுகம், சொத்துக்கள் உண்டு. மகிழ்ச்சியான குடும்ப வாழ்கை, சமுதாயத்தில் நல்ல பெயர், வெளிநாடு, வெளியூர் பயணங்கள் உண்டு. தந்தைக்கு நல்ல ஆயுள் உண்டு.தர்ம எண்ணம் இருக்கும்
10-ம் வீட்டில் இருந்தால் :
இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர். நல்ல செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பர். நாளுக்கு நாள் வாழ்க்கை வளர்ச்சி உண்டு. பெண்கள் நிறைந்த இடத்தில் வேலை செய்யும் அமைப்பு உண்டு. கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில், உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். யதார்த்தவாதியாக இருப்பர். பெண்களுக்கான அலங்காரப் பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவர். யாரையும் வசப்படுத்தக்கூடிய சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவர்
11-ம் வீட்டில் இருந்தால் :
பணத்திலும், லாபத்திலும் மட்டும் குறியாக இருப்பர்கள். உற்சாகமான மனநிலை உடையவர்கள் ஆடம்பரம் மிக்க, செளகரியங்கள் மிகுந்த வாழ்க்கை அமையும். புகழ், நிதி சாஸ்திரத்தில் நாட்டம், நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தனசேர்க்கை அசையும், அசையா சொத்துக் சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம் உண்டு சபலமுடையவர்கள் நண்பர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பர்
12-ம் வீட்டில் இருந்தால் :
உறவினர்களால் நன்மை இல்லை. சுக வாழ்வு, உடல் உறவில் நாட்டம், குலகல்வியில் நாட்டம் ஆகியவை இருக்கும். தன நாசம் உண்டு. வசதிகளைத் தேடி ஏங்கும் மனப்பான்மை உண்டாகும். குடும்ப வாழ்க்கை சிறக்காது. சிலருக்கு கண்பார்வை மங்கும் அபாயம் உண்டு.
குறிப்பு : சுக்கிரன் கேந்திரத்தில் இருந்து தீய கிரக பார்வைகள பட்டாலும் மிக மேன்மையான பலனையே தருவார். ஆனால் சுக்கிரன் 1, 2, 3, 6, 8 யில் இருந்தால் கேடு பலனையே தருவார். 12ல் மறைந்து ஆட்சி பெற்றால் நல்ல பலனை வாரி வழங்குவார் என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது

Friday, May 8, 2020

குரு 12 வீடுகளில் இருந்தால் பலன்:



லக்கினத்தில் இருந்து:

1-ம் வீட்டில் இருந்தால் :

நல்ல உத்தியோகம் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், செல்வம் உடையவர்கள். சிறந்த நட்புகள் அமையும்.

2-ம் வீட்டில் இருந்தால் :

பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பம் விருத்தியாகும். நல்ல பேச்சுயுடன் வாக்கு பலித்தல் நடக்கும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் வரும்.

3-ம் வீட்டில் இருந்தால் :

சகோதர சகோதிரி சுகமுடையவர்.ஆனால் தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் என்பர். முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை, நினைத்தை சாதிக்கும் வல்லமை, லஷ்மிகடச்ம் உண்டாகும்.

4-ம் வீட்டில் இருந்தால் :

படிப்பில் தேர்ச்சி, வேதாந்தத்தில் ஆர்வம், அரசாங்கத்தின் உதவி, நல்ல சுமுகமான குடும்பச் சூழ்நிலை, தன் சொந்த மதத்தில் தீவீர நம்பிக்கை, புத்திசாலித்தனம், வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு ஆகியவை உண்டாகும்.

5-ம் வீட்டில் இருந்தால் :

நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். புத்திரகாரகன் புத்திர ஸ்தானத்தில் இருப்பது நல்லது அல்ல இது புத்திர தோஷத்தைக் குறிக்கிறது. சிலருக்கு ஆண் வாரிசு இருக்காது. நல்லவர் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருந்தால் மட்டுமே சிறப்பான புத்திர பாக்கியம் அமையும்

6-ம் வீட்டில் இருந்தால் :

சுறுசுறுப்பு இன்றி மெத்தனமாக இருப்பர். அவமானம், அவமரியாதைகளைச் சந்திக்க நேரிடும். துரதிர்ஷ்டமானவர். நல்ல சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டு .ஆனால் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் உடல் உபாதைகள் உண்டாகும்.

7-ம் வீட்டில் இருந்தால் :

நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். வாழ்க்கை மிக சந்தோஷமாக இருக்கும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும் என்று சில நூல்கள் சொல்கிறது (திருமணத்தின் போது இதை நன்கு ஆராய்ந்து முடிவு சொல்ல வேண்டும் குரு விசுவாசம், நல்ல குணம் , ஆடை ஆபரண சுகம் ஆகியவை உண்டு

8-ம் வீட்டில் இருந்தால் :

குரு எங்கு இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவத்தை அதிகரிக்கச் செய்வார் எனவே 8-ம் வீடு ஆயுள் ஸ்தானமாகையால் அவர் ஆயுளை அதிகரிக்கச் செய்வார். உபாதையற்ற மரணம் ஏற்படும். புத்திர தோஷம் உண்டாகும். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை , நல்ல பெயர் , இறுதி காலத்தில் அமைதியான நிலை உண்டாகும்.

9-ம் வீட்டில் இருந்தால் :

சொந்த சகோதரர்களுடன் மிகவும் பிரியமாக இருப்பர். மிகவும் தெய்வபக்தியுடன் வாழ்க்கை நடத்துவர். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு . ஏதொரு நல்ல குறிக்கோளுடைய வாழ்க்கை அமையும். பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, நல்ல பழக்க வழக்கம், தெய்வீக பணிகளில் ஈடுபாடு, சகல சாஸ்த்திரத்தில் சேர்ச்சி, பூமி சம்பத்து ஆகியவை உண்டு.

10-ம் வீட்டில் இருந்தால் :

அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக அதாவது உயர் பதவிகள், செல்வம், தர்ம சிந்தனை, புத்திசாலித்தனம், மிகிழ்ச்சி ஆகியவை உண்டு இறை நம்பிக்கை மற்றும் மத விஷயங்களில் ஈடுபாடு இருப்பர். குல தொழில் ஈடுபட இருக்கும். சிலர் குசும்பனாக இருப்பர் மேலும் மற்றவர்களுக்குத் தொல்லைகளைக் கொடுப்பவராக இருப்பர் . சபைகளில் புகழ் உண்டாகும்

11-ம் வீட்டில் இருந்தால் :

நீண்ட ஆயுள், துணிச்சல் , தாராளமான தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் ஆகியவை அமைய பெறுவர். இசையில் ஆர்வம் இருக்கும். பல நண்பர்கள் உண்டு . புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஏற்றம் உண்டு. நல்ல புத்திரர்கள், வேலையாட்கள், எதையும் முடிக்கும் வல்லமை உண்டு.

12-ம் வீட்டில் இருந்தால் :

இறைவனையும், மத நம்பிக்கை குறைந்து இருக்கும்.. மற்றவர்களை கேலி செய்வதும், மற்றவர்கள் பயப்படக்கூடிய செயல்களைச் செய்பவராக இருப்பர். சிலர் கடைசிக் காலத்தில் தங்களுடைய தவறுகளை உணர்ந்து திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்வர். சிலருக்கு வாகனங்கம் நகைகள், உடைகள் மீது அதீதப் பிரியம் இருக்கும். பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். புத்திரர்கள் குறைவாக இருக்கும். சுபர் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.

குறிப்பு : தனி அந்தணன் பெருத்த அவமான தருவார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே குரு எந்த ஸ்தானத்தில் தனித்து நின்றால் அந்த ஸ்தானத்திற்கு உண்டான அவமானங்களை தருவார் .
குரு திரிகோணத்திலும் கேந்த்ரத்திலும் இருப்பது சிறந்தது. ஆனால் 6, 8 ல் குரு இருப்பது நல்லதுல்ல. அவர் சுப கிரகம் என்றாலும் அவர் கெடுதலை செய்வார். ஆனால் ஆட்சி, உச்ச வீட்டில் இருந்தால்கெடுதல் இல்லை என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது



புதன் 12 வீடுகளில் இருந்தால் பலன்:




லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் இருந்தால் :

அதாவது லக்கினத்தில் இருந்தால் புத்திசாலியாக இருப்பர். நல்ல பேச்ச திறன் உடன் பேச்சில் இனிமையும் இருக்கும். கலகலப்பானவர். வாழ்க்கை துணையிடம் பிரியத்துடன் இருப்பர் உலக அறிவு உடையவர்.

2-ம் வீட்டில் இருந்தால் :

பேச்சு நன்றாக இருக்கும் பொய் பேசுவதில் வல்லவராக இருப்பர். இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். ஏஜென்சி தொழில் மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ பணம் சம்பாதிப்பர். சிலர் தான் கற்ற கல்வியைக் கொண்டு பணம் சம்பாதிப்பர். புதன் ஒரு இரட்டைக் கிரக ஆகியதால் சிலருக்கு இரட்டை வருமானம் உண்டு.

3-ம் வீட்டில் இருந்தால் :

இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பர். சிலருக்கு இரட்டை பிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டு . சிலர் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி (இரட்டை வேஷம் ) பேசுவார்கள்.

4-ம் வீட்டில் இருந்தால் :

கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல நண்பர்கள் அமைவர். தாய்வழி உறவுகளால் உதவி கிடைக்கும். வாகனம், வீடு வாங்க யோகம் உண்டு. ஒரு வீடோ அல்லது ஒரு வாகனமோ வாங்க முயற்சி செய்தால் இரண்டாக வாங்கும் அமைப்பு சிலருக்கு ஏற்படும்.

5-ம் வீட்டில் இருந்தால் :

நல்ல குணமுடையவர். ஆத்மஞானி, வித்துவான், சிலர் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்று இருப்பர் நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மற்றும் பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். தந்திர வேலைகள் செய்ய தெரிந்தவர்கள்

6-ம் வீட்டில் இருந்தால் :

எதற்கெடுத்தாலும் தர்க்கம் (விவாத சீலன்) செய்பவர். வியாதிகள் உடையவர்கள் புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால் மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் போன்ற உண்டாகும். எதிரிகளை வெல்லும் தன்மை உண்டு சிலரின் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மேலும் மாமனின் உதவி கிடைக்கும்.

7-ம் வீட்டில் இருந்தால் :

வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர். அவர் மூலம் வருமானம் வரும். பாவக் கிரங்களுடன் சேர்ந்தால் 2-வது திருமணம் அமையும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் உண்டு. மிருதுவானவர். தன் தந்தையைக் காட்டிலும் சிறந்து விளங்குவர்

8-ம் வீட்டில் இருந்தால் :

மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர். கல்வியில் தடை ஏற்படும். நல்ல மனத்துடையவர், தைரியம் குறைந்தவர் . பூர்ண ஆயுள் உண்டு

9-ம் வீட்டில் இருந்தால் :

சிறந்த அறிவாளி. எதையும் அலசி, ஆராய்ந்து பார்க்கும் குணம் உடையவர். மிக வேடிக்கையாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் பேசி பிறரை கவர்ந்து இழுக்கும் திறமை உண்டு . சுகம் உண்டாகும் . புத்திர சுகம் உண்டு. கல்வியில் சிறந்து விளங்கிவர்

10-ம் வீட்டில் இருந்தால் :

நேர்மை , மகிழ்ச்சி உடையவராகவும் இருப்பர். அளவான வார்த்தைகளை பேசுபவர். எல்லா கலைகளிலும் வித்தகனாக( வித்தையறிந்தவர்) இருப்பர். காவிய கணித அறிந்தவர். புகழ், எடுத்த காரியத்தில் வெற்றி உடையவர். .கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பார்கள். மேலும் சிலர் அரசாங்க வேலையில் இருப்பார்கள். ஏஜென்சி தொழில் லாபம் உண்டு

11-ம் வீட்டில் இருந்தால் :

அதிகம் படித்தவர்.கூர்மையான புத்தி உடையவர். செல்வந்தராகவும், மகிழ்ச்சி உள்ளவராகவும் இருப்பர். விசுவாசமான வேலைககாரர்கள் கிடைப்பார்கள். கடன் இல்லாதவர்கள். நல்ல மூத்த சகோரர் உடையவர்கள் மேலும் அவர்கள் மூலம் வருமானம் உண்டு. செல்வந்தர் எல்லா விஷத்தையும் அறியும் ஆற்றல் உண்டு .பெரியவர்களின் அனுக்கிரகம் உண்டு. நல்ல புத்திரர் மற்றும் நண்பர்கள் அமைவர். பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் இருந்தால் நல்ல சாதனை படைப்பர்.

12-ம் வீட்டில் இருந்தால் :

சலன புத்தியும், நிலையற்ற தன்னமையும் உடையவர். கல்வி சிறப்பாக இருக்காது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பர் பெண்களின் மேல் தீராத மோகமுடையவனாக இருப்பர் மேலும் தோல் வியாதி உள்ள பெண்கள் மற்றும் தரம், வயது வித்தியாசமின்றி பல பெண்களிடம் தொடர்பு அல்லது ஈடுபாடு கொண்டு இருப்பர் சிலர் பொருள் விரையமாகி வறுமையில் சிக்க நேரிடும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்வர்

குறிப்பு : பொதுவாக மறைந்த புதன் (லக்கினத்திற்கு 3, 6, 8, 12 ல் இருந்தால் மறைவு) நிறைந்த அறிவு என்று சில ஜோதிடநூல்கள் கூறுகிறது. ஆனால் நீசம் , அஸ்தமனம் (சூரியனுக்கு மிக அருகில் அதாவது 10 பாகைக்குள்) அடைந்தால் நல்லது.