எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Monday, May 4, 2020

8ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





எட்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்

1ம் வீட்டில் இருந்தால்:

    • துரதிஷ்டசாலியாகவும், .உடல் மிகவும் பலகீனமாகவும் கடன் வறுமை வியாதிகளுடன் இருப்பர். சுப பார்வை பெற்றால் நீண்ட ஆயுள் உண்டு.
    • அசுப பலன் பெற்றால் தீர்க்கமான வறுமை வியாதி, மரண விபத்து உண்டாகும்.
2ம் வீட்டில் இருந்தால்:
    • பலவிதமான தொந்தரவுகள் மற்றும் கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருக்கும்.
    • குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருக்கும்.
    • செல்வத்தை எந்த நோக்கும் இன்றி செலவுகள் செய்வார்கள். கல்வியில் ஊக்கம் இருக்காது.
    • வாக்கில் நாணயம் இருக்காது. துர்வார்த்தை உபயோகிப்பர்
3 ம் வீட்டில் இருந்தால்
    • காது சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கும்
    • சகோதரர்களுடன் மனஸ்தாபங்களும், சண்டையும் ஏற்படும்.
    • தைரியம் குறைந்து ஒருவித பயம் மனதில் இருக்கும்
    • பெரியவர்கள் சேர்த்த சொத்துக்கள் பல விதங்களில் நாசம் ஆகும்
4 ம் வீட்டில் இருந்தால்:
    • மனதின் நிம்மதி இல்லாமல் . பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளுடன் வாழ்ககை இருக்கும் .
    • தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு, தாயார் மற்றும் தாய் வழி சொந்தங்களின் ஆதரவு இன்மை ஆகியவை இருக்கும்
    • குடும்பத்தில் சதா சண்டை சச்சரவுகள் இருக்கும். சிரம்மாக குடும்பத்தை நடத்த வேண்டியது வரும்.
    • பூர்விக சொத்துக்கள் மற்றும் சம்பாத்தித்த சொத்துக்கள், பொருட்கள் நஷ்டமாகும்
    • வீடு இடிந்து விழுதல், வண்டி வாகனங்களால் எதிர்பாராத விபத்துகள் அதனால் சுகஹீனம் ஏற்படும்
    • சுப கிரகங்கள் பாரத்தால் கஷ்டம் குறையும்
5 ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திரர்களால் தொல்லைகளும் மன அமைதியின்மை, சதா சஞ்சலம் கலக்கம் ஏற்படும்
    • உடல் உபாதைகள், பந்துமித்ரர்களின் விரோதங்கள் ஏற்படும்
    • மேலும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் மன நோய்கள் வர வாய்ப்பு உள்ளது . சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.
6 ம் வீட்டில் இருந்தால்:
    • இது நல்ல இடம் இல்லை . அந்த திசை புத்திக்காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து . கெளரவமும் பாதிக்கும் சூழ்நிலை அமையும்
    • சிலர் பகைவர்களை வெல்ல கூடியவனாகவும் இருப்பர் .
    • உடல் மெலிந்து கெட்ட எண்ணங்கள் கொண்டவராகவும், தந்திரமாக பகைவர்களை வெல்லக் கூடிய சக்தியை பெற்றவராகவும், புத்திர பாக்கியம் அற்று, தத்து புத்திரர்களை வளர்பவர்களாவும், அற்ப ஆயுள் உடன் இருப்பார்கள்
7 ம் வீட்டில் இருந்தால்:
    • வாழ்க்கை துணை அன்புடன் வைத்துக் கொள்ளாமல் அவமானம், வறுமை உடைய வாழ்க்கை வாழ்வார்கள்
    • ஆயுள் தீர்க்கம் உண்டு. ஆனால் வாழ்க்கை துணை அற்ப ஆயுள் உடன் இருப்பார்கள்
    • வாழ்க்கை துணைக்கு உடல் பாதிப்பு அல்லது வாழ்க்கை துணையுடன் உறவு பாதிப்பு போன்ற பிரச்சைகள் வர வாய்ப்பு உள்ளது
8 ம் வீட்டில் இருந்தால்:
    • தீர்க்கமான ஆயுள் உடன் சஞ்சலமான வாழ்க்கை அமையும்
    • இந்த தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும் அல்லது தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து கொண்ட இருக்கும்
    • சிலருக்கு விரும்பத்தகாத நிகழ்வுகளால் அவமானமும் அலைச்சலும் அடைவர்
    • லாப நஷ்டம், நல்லது கெட்டது அறியாது எண்ணிய மாத்திரத்தில் எதையாவது செய்து அவமானம், அலைச்சல் அடைவார்கள். பிறர் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்
9 ம் வீட்டில் இருந்தால்:
    • பலருக்கு தந்தை அனுகூலமாக இருக்கமாட்டார் மேலும் தந்தை சொத்துக்கள் நாசமாகும்
    • புத்திரர்களால் கடன், பந்து மித்திரகளால் விரோதம் அப்பிராய பேதம் ஏற்படும்
10 ம் வீட்டில் இருந்தால்:
    • தொழிலில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது சிலர் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பர்.
    • அரசாங்கத்திலும், பெரியார் மத்தியுலும் கெட்ட பெயர் எடுப்பார்கள்
    • சுப கிரகங்கள் சம்மந்த பட்டு இருந்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். தீர்க்க ஆயுளுடன் வாழ்க்கை நல்லபடியாக சமாளிப்பார்கள்
11 ம் வீட்டில் இருந்தால்:
    • மூத்த சகோதரக்கு கண்டமும் ஆயுள்அற்பமும் இருக்கும்
    • புத்திரர்களால் லாபம் உண்டு மேலும் நேர்முகவழி இல்லாமல் பலவித வழிகளில் லாபத்தை பெற முயலுவார்கள்
12 ம் வீட்டில் இருந்தால் :
    • புத்திர தோஷம் உண்டு.
    • ஊர் சுற்றும் குணத்துடன் எப்பொழுதும் மன அமைதி இல்லாமலும், தகாத வழிகளில் செல்வத்தை இழந்து சுக போகங்களை அனுபவித்து வாழ்க்கையை வீணாக கழிப்பார்கள்
    • சிலருக்கு வம்பு வழக்குகள் ஏற்படும். கையில் உள்ள பணத்தை இழக்க நேரிடும்
மேலும் இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும். கிரக நிலை அதாவது உச்சம், நீசம் , பகை நட்பால் பலன்கள் மாறுபடலாம்.அதனால் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.



No comments:

Post a Comment

Thanks