லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
அதாவது லக்கினத்தில் இருந்தால் புத்திசாலியாக இருப்பர். நல்ல பேச்ச திறன் உடன் பேச்சில் இனிமையும் இருக்கும். கலகலப்பானவர். வாழ்க்கை துணையிடம் பிரியத்துடன் இருப்பர் உலக அறிவு உடையவர்.
2-ம் வீட்டில் இருந்தால் :
பேச்சு நன்றாக இருக்கும் பொய் பேசுவதில் வல்லவராக இருப்பர். இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். ஏஜென்சி தொழில் மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ பணம் சம்பாதிப்பர். சிலர் தான் கற்ற கல்வியைக் கொண்டு பணம் சம்பாதிப்பர். புதன் ஒரு இரட்டைக் கிரக ஆகியதால் சிலருக்கு இரட்டை வருமானம் உண்டு.
3-ம் வீட்டில் இருந்தால் :
இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பர். சிலருக்கு இரட்டை பிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டு . சிலர் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி (இரட்டை வேஷம் ) பேசுவார்கள்.
4-ம் வீட்டில் இருந்தால் :
கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல நண்பர்கள் அமைவர். தாய்வழி உறவுகளால் உதவி கிடைக்கும். வாகனம், வீடு வாங்க யோகம் உண்டு. ஒரு வீடோ அல்லது ஒரு வாகனமோ வாங்க முயற்சி செய்தால் இரண்டாக வாங்கும் அமைப்பு சிலருக்கு ஏற்படும்.
5-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல குணமுடையவர். ஆத்மஞானி, வித்துவான், சிலர் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்று இருப்பர் நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மற்றும் பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். தந்திர வேலைகள் செய்ய தெரிந்தவர்கள்
6-ம் வீட்டில் இருந்தால் :
எதற்கெடுத்தாலும் தர்க்கம் (விவாத சீலன்) செய்பவர். வியாதிகள் உடையவர்கள் புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால் மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் போன்ற உண்டாகும். எதிரிகளை வெல்லும் தன்மை உண்டு சிலரின் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மேலும் மாமனின் உதவி கிடைக்கும்.
7-ம் வீட்டில் இருந்தால் :
வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர். அவர் மூலம் வருமானம் வரும். பாவக் கிரங்களுடன் சேர்ந்தால் 2-வது திருமணம் அமையும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் உண்டு. மிருதுவானவர். தன் தந்தையைக் காட்டிலும் சிறந்து விளங்குவர்
8-ம் வீட்டில் இருந்தால் :
மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர். கல்வியில் தடை ஏற்படும். நல்ல மனத்துடையவர், தைரியம் குறைந்தவர் . பூர்ண ஆயுள் உண்டு
9-ம் வீட்டில் இருந்தால் :
சிறந்த அறிவாளி. எதையும் அலசி, ஆராய்ந்து பார்க்கும் குணம் உடையவர். மிக வேடிக்கையாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் பேசி பிறரை கவர்ந்து இழுக்கும் திறமை உண்டு . சுகம் உண்டாகும் . புத்திர சுகம் உண்டு. கல்வியில் சிறந்து விளங்கிவர்
10-ம் வீட்டில் இருந்தால் :
நேர்மை , மகிழ்ச்சி உடையவராகவும் இருப்பர். அளவான வார்த்தைகளை பேசுபவர். எல்லா கலைகளிலும் வித்தகனாக( வித்தையறிந்தவர்) இருப்பர். காவிய கணித அறிந்தவர். புகழ், எடுத்த காரியத்தில் வெற்றி உடையவர். .கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பார்கள். மேலும் சிலர் அரசாங்க வேலையில் இருப்பார்கள். ஏஜென்சி தொழில் லாபம் உண்டு
11-ம் வீட்டில் இருந்தால் :
அதிகம் படித்தவர்.கூர்மையான புத்தி உடையவர். செல்வந்தராகவும், மகிழ்ச்சி உள்ளவராகவும் இருப்பர். விசுவாசமான வேலைககாரர்கள் கிடைப்பார்கள். கடன் இல்லாதவர்கள். நல்ல மூத்த சகோரர் உடையவர்கள் மேலும் அவர்கள் மூலம் வருமானம் உண்டு. செல்வந்தர் எல்லா விஷத்தையும் அறியும் ஆற்றல் உண்டு .பெரியவர்களின் அனுக்கிரகம் உண்டு. நல்ல புத்திரர் மற்றும் நண்பர்கள் அமைவர். பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் இருந்தால் நல்ல சாதனை படைப்பர்.
12-ம் வீட்டில் இருந்தால் :
சலன புத்தியும், நிலையற்ற தன்னமையும் உடையவர். கல்வி சிறப்பாக இருக்காது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பர் பெண்களின் மேல் தீராத மோகமுடையவனாக இருப்பர் மேலும் தோல் வியாதி உள்ள பெண்கள் மற்றும் தரம், வயது வித்தியாசமின்றி பல பெண்களிடம் தொடர்பு அல்லது ஈடுபாடு கொண்டு இருப்பர் சிலர் பொருள் விரையமாகி வறுமையில் சிக்க நேரிடும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்வர்
குறிப்பு : பொதுவாக மறைந்த புதன் (லக்கினத்திற்கு 3, 6, 8, 12 ல் இருந்தால் மறைவு) நிறைந்த அறிவு என்று சில ஜோதிடநூல்கள் கூறுகிறது. ஆனால் நீசம் , அஸ்தமனம் (சூரியனுக்கு மிக அருகில் அதாவது 10 பாகைக்குள்) அடைந்தால் நல்லது.
எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....
Friday, May 8, 2020
புதன் 12 வீடுகளில் இருந்தால் பலன்:
Subscribe to:
Post Comments (Atom)
very good explanation
ReplyDelete