லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
லக்கினத்தில் சந்திரன் இருப்பது நல்லது. சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கையில் உயர்வு பெறுவர் . சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார். திடீர் பணவரவு உண்டு
2-ம் வீட்டில் இருந்தால் :
சந்திரன் பெண்கிரகமாகியதால் பெண்கள் மூலமாகப் பணவரவு இருக்கும். ஆனால் பணவரவு ஒரே மாதிரி இருக்காது ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். சந்திரன் நன்றாக இருந்தால் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு, சொத்து சுகம், நல்ல கல்வி, புகழ் ஆகியவை உண்டாகும். பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.
3-ம் வீட்டில் இருந்தால் :
எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தன்மை உடையவர். சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும், சகோதர சகோதரிகளை ஆதரவையும் , மகிழ்ச்சியான வாழ்க்கை தருவார். 3வது வீடு குறுகிய பயணத்தை குறிப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். ஆனால் சந்திரன் கெட்டால் எதிர்மறையாக சூழ் அமையும் .
4-ம் வீட்டில் இருந்தால் :
சுற்றத்தாரால் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சியுண்டு, பகையும் உண்டு. மகிழ்ச்சியான வாழ்வு அமையும் சிற்றின்பங்களில் பிரியம் அதிகமாக இருக்கும் . சந்திரன் ஓர் நீர்க் கிரகமாதலால் வீட்டிலே நீர் வசதியுண்டு அல்லது ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். தாய்வழிச்சொத்து கிடைக்கும் ஆனால் தாய்க்கு நல்லதுல்ல. பிறருக்கு கொடுக்கும் குணம் உண்டு
5-ம் வீட்டில் இருந்தால் :
பணம் பல வழிகளில் வரும். சிறப்பான குழந்தை பாக்கியம் உண்டு. அதிக பெண் குழந்தை பாக்கியம் அமையும். நல்ல அறிவு ஆற்றல், அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார்.
6-ம் வீட்டில் இருந்தால் :
குழந்தைப் பருவத்தில் அல்லது இளம் வயதில் அடிக்கடி நோயுற்ற மகிழ்ச்சி குறைந்து காணப்படும் அதே இடத்தில் சந்திரன், செவ்வாய் அல்லது சனியின் சேர்க்கை அல்லது பார்வைபெற்றிருந்தால் தீராத நோய்கள் இருக்கும். விரோதிகள், எதிரிகள் இருப்பர். பிறருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.
7-ம் வீட்டில் இருந்தால் :
காமம் மிகுந்து இருப்பார். வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அழகாக இருப்பார். துணைவர் அல்லது துணைவி பண வரவு உண்டு. மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்
8-ம் வீட்டில் இருந்தால் :
நீரில் கண்டம், கப நோய், ஆகியவை ஏற்படும். சந்திரன் மனதுக்குக் காரகன் எனவே மனபிராந்தி, மனது சம்மந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். தாயாரால் நன்மைகள் மிகவும் குறைவாக இருக்கும். பூர்விக சொத்துக்கள் எளிதாக கைக்கு வந்து சேரும். சந்திரனுடன் செவ்வாயும், சனியும் சேர்வார்களேயாகில் கண்பார்வை பாதிக்கப்படும்.
9-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல மனம் படைத்த தாயார் அமைவர். ஆனால் இங்கு செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் தாயாருக்கு காயம்படும் மேலும் தாயாரை கடும் வார்த்தைகளால் பேசுவர். புத்திரபாக்கியத்துடன் செல்வத்துடன் நல்ல பாக்கியசாலியாக இருப்பர். புத்திரபாக்கியம் இருக்கும். சங்கீதம், நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும் .
10-ம் வீட்டில் இருந்தால் :
இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் உடையவராக இருப்பர். தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வர். புத்திசாலியாகவும் துணிச்சல் மிக்கவராக இருப்பர். செய்தொழில் வெற்றி, பகைவரிடம் வெற்றி காண்பர் உதவி செய்யும் மனப்பான்மையும், தர்ம சிந்தனையுடன் இருப்பர். சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால் வேதாந்தங்களிலும், ஜோதிடத்தில் சிறந்து விளங்குவர் நீண்ட ஆயுள் உண்டு பல அறக்கட்டளைகளைத் தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் அமையும் .
11-ம் வீட்டில் இருந்தால் :
மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை பெறுவர். செய்யும் தொழில் மேன்மை அடைவர். தொழில் வணிகமாக இருந்தால் நல்ல லாபம் சம்பாதிப்பர் எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமை உடையவர். நல்ல தீர்க்காயுள் உண்டு. வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்
12-ம் வீட்டில் இருந்தால் :
இந்த இடம் நல்லதுல்ல . பாதங்களில் வலி, கண் பார்வை குறைபாடு இருக்கும் சிலர் கொடுர சிந்தையுடன் மகிழ்ச்சியில்லமல், அதிகாரமில்லமல் தடைகளை அதிகமாகப் பெறு மதிப்பு இழந்த வாழ்க்கை வாழ நேரிடும். குறுகிய மனப்பான்மை, கடின மனம், குறும்புத்தனம், நக்கல் மிகுந்தவராக இருப்பர்.
குறிப்பு : பொதுவாக சந்திரன் 6,8 தவிர்த்து எந்த வீட்டிலும் தீய கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் நல்லது என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது.
No comments:
Post a Comment
Thanks