எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Monday, May 18, 2020

மாந்தி 12 வீடுகளில் இருந்தால் பலன்


மாந்தியை குளிகன் என்றும் அழைப்பார்கள். இது ஒரு துணை கிரகமாக செயல்படுகிறது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் பிறந்தால் மாந்தி என்றும் சொல்லப் படுகிறது. சனி புத்திரன் மாந்தி. எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும் என்பார்கள். ஜாதகத்தில் “மா” என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ராமாயணத்தில் மாந்தி பிறந்த கதை உண்டு. இராவணன் தான் மகன் பிறக்கும் போது சனி 11ல் இருக்கும்படி கட்டளை இட்டார். (சனி 11ல் இருந்தால் நல்லது என்பது நமக்கு தெரியும்) கர்மாவை தராசாக கொண்டு நடக்கும் நித்மான் ஆகிய சனி சரி என்று ஒப்புக் கொண்டாலும் அவரது ஒரு கால் 12ம் வீட்டை நோக்கி சென்றதாம் . அதை பார்த்த இராவணன் சனியின் அந்த காலை வெட்டி விழுத்த அதிலுள்ள சதை பகுதி லக்கினத்தில் விழுந்து மாந்தியாக உருவெடுத்து, இராவணன் மகன் இந்திரஜித்க்கு அற்ப ஆயுளை தந்து என்று கதை சொல்வார்கள் (பல நுல்களின் பல கதைகள் உள்ளது). சரி மாத்தி 12 ஸ்தான பலன்களை பார்ப்போம்
1-ம் வீட்டில் இருந்தால் :
குண்டான உடலமைப்பு (நன்றாக சாப்பிடுவார்கள் எனலாம்), உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், கொடூர சிந்தனைகள், முரட்டு குணம், சுறுசுறுப்பு ஆகியவைகளை கொண்டு இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்
2-ம் வீட்டில் இருந்தால் :
குடும்ப வாழ்க்கை நிம்மதியின்மை, பேச்சில் தடுமாற்றம் அல்லது விதண்டாவாதம் செய்தல், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் மற்றும் வறுமை, கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர். துஷ்டன் என்று பெயர் எடுப்பார்கள். உடல் ஊனம் இருக்கும். (இது மாந்திக்கு நல்ல ஸ்தானம் கிடையாது)
3-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும். மிக எளிதில் உணர்ச்சவசப்படுதல், முன்கோபம், யாருடனும் அனுசரித்து போகாத தன்மை ஆகியவை இருக்கும். உடன் பிறந்தவர்கள் இருக்கமாட்டார்கள் அப்படி இருந்தாலும் அவர்களுடன் நல்ல உறவு இருக்காதது. அரசு ஆள்பவர்களின் தொடர்பு மற்றும் மதிப்பையும் பெற்று இருப்பார்கள்.
4-ம் வீட்டில் இருந்தால் :
நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும். துரஷ்டசாலிகள் என்றும் சொல்லாம். ஆனால் பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைபகுதியில் சில காலம் வாழ நேரிடும். அதனால் குற்றம் ஓன்றும் இல்லை புலிப்பாணி ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது.
5-ம் வீட்டில் இருந்தால் :
புத்திரதோஷம் உண்டு நிலையில்லாத மனம் உடையவர்கள். மனநிலை பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாமை, தைரியம்(வீரம்), தகாத உறவுகள் ஆகியவை கொண்டவராகவும் இருப்பார்கள்.
6-ம் வீட்டில் இருந்தால் :
மிகவும் நல்ல இடம் நீண்ட ஆயுள், பிறருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள். எதிரிகள் இருக்க மாட்டர்கள் இருந்தாலும் அவர்களை வெற்றி கொள்ளவர்கள். பரோபகாரி என்றும் சொல்லாம்.
7-ம் வீட்டில் இருந்தால் :
சிறு வயதில் கண்டம் நேரலாம். வீண் விவாதங்கள் செய்ப்பராக இருப்பார்கள் மேலும் விவாதங்களால் தன விரயம் ஏற்படும். தனக்கு என்று தவறான நியதிகள், தவறான நியாயங்களை வைத்தது `இருப்பர்கள்.
8-ம் வீட்டில் இருந்தால் :
அதிக பசி, மறைமுக வியாதிகள், எல்லாவற்றிலும் தோல்விகள் ஆகியவை ஏற்படும். நீரால் கண்டம் ஏற்படும். கண் பார்வை குறைபாடுகள் ஏற்படலாம்
9-ம் வீட்டில் இருந்தால் :
பிதுர்தோஷம் உடையவர்கள். மெலிந்த உடலமைப்பும், தவறான பாதை மற்றும் தவறான பழக்கவங்கள் உடையவர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி எல்லா இன்மை, தனிமை, வாழ்க்கையில் கவலைகள், பிரச்னைகளை ஆகியவை ஏற்படலாம்.
10-ம் வீட்டில் இருந்தால் :
கருகிகள் என்று இவர்களை சொல்லாம் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் அடைவார்கள் தனிமையை விரும்புபவராகவும் இருப்பார்கள். இறை நம்பிக்கை இருக்காது அப்படி இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டார்கள் பொதுவாக நல்ல குடும்பம் குழந்தைகள் சுகமாக இருப்பார்கள்
11-ம் வீட்டில் இருந்தால் :
செல்வம் செல்வாக்கு எந்த குறையும் இன்றி அரசனை போல் வாழ்வார்கள். நல்ல வாழ்க்கைதுணை, மற்றவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். வசியன் (தேவதை வசியன்), ஜாலகாரன் என்றும் சொல்லாம்
12-ம் வீட்டில் இருந்தால் :
இது ஒரு மோசமான அமைப்பு. ஏழ்மை நிலை, வீண் பணவிரயம், தவிர்க்க முடிய வீண் செலவு போன்றவையால் அவதியுறுவார்கள். மேலும் சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள்.சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும்.
குறிப்பு : : மாந்திக்கு பார்வைகள் இல்லை என்று சில நூல்களிலும் 2, 7, 12 வீட்டை பார்க்கும் என்றும் சில நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில நூல்களில் மாந்தி, குளிகன்வேறு என்றும் மாந்தி சனி மகன் குளிகன் எமதருமன் மகன் என்றும் கூறுகிறது. நாம் குழம்ப வேண்டாம். மாந்தி, குளிகன் ஓன்றுதான் என்று புலிப்பாணி நூல் சொல்வதை ஏற்றுக் கொள்ளவோம்.

No comments:

Post a Comment

Thanks