லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
விரக்தி மனப்பான்மை உடன் எதிலும் பற்று அற்றவராக, மெல்லிய சரீரமுடையவராகவும், கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் உடனும் அமைதியவராகவும் இருப்பார்கள். எதிரிகளால் உடலிலும் பிரச்னை உண்டு.
2-ம் வீட்டில் இருந்தால் :
கடுமையாகவும், கம்பிரமாகவும் பேசக் கூடியவர். பண நஷ்டம் ஏற்படக் கூடும். எதையாவது பிறரைப்பற்றி குறையாக பேசி கொண்டே இருப்பர் . கல்வி கெடும். குறுகிய கண்ணோட்டம் உடையவராக இருப்பர். குடும்பத்தில் குழப்பம், பிரச்னை, செய்வினை கோளாறு,நிம்மதி குறைவு போன்றவை இருக்கும். திருமணம மற்றும் குழந்தை பேறு கால தாமதம், சபலம் குணம் போன்றவையால் அவதி அடைவார்கள் .
3-ம் வீட்டில் இருந்தால் :
துணிச்சல் மிக்கவர்கள். உடல் பலம் பொருந்தியவர்கள். தர்ம சிந்தனை இருக்கும். நல்ல குடும்பம், நல்ல உறவினர்கள் அமையும். இளைய சகோதர சகோதரிகள் இது நல்லது அல்ல. எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிப்பர்கள் ஆனாலும் மனதில் ஏதொரு குறை இருந்துக் கொண்டே இருக்கும்.
4-ம் வீட்டில் இருந்தால் :
தாயாரால் அனுகூலமில்லை. வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கையில் பல தரப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். இதய சம்மந்தப் பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. தீய எண்ணங்களில் மனம் லயக்கும். இந்த அமைப்பு உடைய ஜாதகர்கள்பிறரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டார். வாகனங்கள் வாங்குவதற்க்கு தடை, வாகனங்களால் பிரச்னை உண்டு.
5-ம் வீட்டில் இருந்தால் :
உதாரண குணம் சபல புத்தி அஜீரணக்கோளாறுகள், கெட்ட குணம், புத்தி கூர்மையின்மை ஆகியவை இருக்கும். 5ல் கேது இருந்தால் சந்நியாச யோகம் என்று சில நூல்கள் கூறுகிறது. மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இல்லை எனில் குழந்தை இன்மை அல்லது குழந்தைகளால் நன்மையின்மை ஏற்படும்
6-ம் வீட்டில் இருந்தால் :
கேதுவிற்கு மிகவும் உகந்த இடம். புகழும், அதிகாரமும்,செல்வாக்கும் தேடிவரும். உயர் கல்வி, தர்மசிந்தனை, சொந்தபந்தங்களை நேசிக்கும் தன்மை, பலதுறைகளில் அறிவு, தைரியம் வித்தை ஆகியவை இருக்கும். எதிரிகள் இருக்க மாட்டார்கள். இன்பமான வாழ்ககை அமையும். அஜீரணக்கோளாறுகள் ஏற்படும்.
7-ம் வீட்டில் இருந்தால் :
திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. நோய்வாய்ப்பட்ட வாழ்க்கை துணை அமையும். இளமை கால வாழ்க்கை நன்றாக இருக்காது. வாழ்க்கையில் வளமை இன்றி மன அழுத்ததுடன் வாழ்வர். சோம்பல், முடபுத்தி, இருதாரம், பொய் சொல்தல் ஆகியவை இருக்கும். 7ம் இடம் விருச்சிக ராசியாக இருந்தால் எப்போதும் சுகம், தனலாபம் உண்டாகும்.
8-ம் வீட்டில் இருந்தால் :
அறிவாளிகள் மேலும் மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவர்கள் விபத்துகள் மற்றும் உடம்பில் நோய்களால் புண்கள் வரலாம். தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் தோன்றும் . பொதுவாக ஆயுள்தோஷம் உண்டு. அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் ஆசை, திருமண வாழ்வில் பிரச்சினைஆகியவை உண்டு திருமணம் கால தாமதமாகும். சசுபலன் பெற்றால் புகழ், தலைமை ஏற்கும் தகுதி ஆகியவை இருக்கும். அந்த 8ம் இடம் விருச்சிகம், கன்னி, மேஷம், ரிஷபம், மிதுனத்தில் இருந்தால் அஷ்ட ஐஸ்வரியம் உண்டாகும்.
9-ம் வீட்டில் இருந்தால் :
தகப்பனாருடன் நல்லுறவு இருக்காது. பிதூர்தோஷம் ஏற்படும். மிக்க தைரியசாலியாகவும் அதிஷ்டமில்லாமை, நல்ல புத்திரர்கள், நண்பர்கள், தர்மம் செய்யும் குணம் ஆகியவை பெற்று இருப்பார்கள். மாறும் மன நிலை உடைய இவர்களுக்கு தெய்வ பக்தி மிக குறைவாக இருக்கும் (இல்லாமலும் போகலாம்)
10-ம் வீட்டில் இருந்தால் :
உற்சாகமான மனம், நிறைந்த அறிவு, கலைகளில் ஈடுபாடு, இரக்க மனம் ஆகியவை பெற்று இருப்பார்கள். தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்தித்து நல்ல தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவார்கள். சிலருக்கு தந்தை உடல்நலப் பிரச்சனை அல்லது பணம் கஷ்டத்தில் இருப்பர். சௌரிய குறைவு, துக்கம் ஆகியவை உண்டாகும்.
11-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல பணவரவு, நண்பர்களின் உதவி, நல்ல குணம், எடுத்த காரியங்களில் வெற்றி, நல்ல பெயர், தர்ம செய்யும் குணம் போன்றவையுடன் சுகமாக வாழ்வர். சூதாட்டம், லாட்டரிச் சீட்டு அல்லது பங்கு சந்தை போன்றவற்றில் இருந்து பணம் வரும் வாய்ப்பு உண்டு. மூத்த சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை குறையும்
12-ம் வீட்டில் இருந்தால் :
12ல் கேது இருந்தால் ஜாதகருக்கு இது கடைசி பிறவி என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது. மனம் அமைதியின்றி அலைபாயும்.. புண்ணிய தலங்களுக்க அடிக்கடி செல்வார். சிலர் பிறந்த நாட்டில் இருந்து தூர தேசங்களில் வசிக்க நேரிடும். பணசேமிப்பு இருக்காது இல்லற சுகபோகங்களில் ஈடுபாடு இருக்காது. பாதங்களில் நோய் ஏற்படக்கூடும். நல்ல திறமையாக வாதங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவர். பரம்பரை சொத்துக்கள் இழக்க நேரிலாம்
குறிப்பு : சனியின் வீடுகளான மகரம் கும்பம் வீடுகளில் இருந்தால் மிகவும் சிறப்பு எனவே இந்த இரண்டு லக்கினமும் கேதுக்கு மிகவும் உகந்தது. விருச்சிகம், கன்னி, மேஷம், ரிஷபம், மிதுனத்தில் இருந்தால் நல்லது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது.
எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....
Sunday, May 17, 2020
கேது 12 வீடுகளில் இருந்தால் பலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thanks