லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
அதிக செல்வம், நயமான குணம், அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு,
நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை,
ஆபரண சேர்க்கை ஆகியவை உண்டாகும்.
2-ம் வீட்டில் இருந்தால் :
பணப் புழக்கம், மிக இனிமையாகப் பேசும் தன்மை, வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம்,
அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு ஆகியவை
அமையும். சிலருக்குப் பெண்களாலும், வாகனங்களாலும் வருமானம் உண்டு. சிலர் கதை
கவிதை சொல்வதில் வல்லவராக இருப்பர். பாவக் கிரங்களின் சேர்க்கை அல்லது பலம்
இழந்து இருந்தால் சிலருக்கு கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்புகள், தீய
பழக்க வழக்கம் ஆகியவை உண்டாகும்.
3-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல வசதி வாய்ப்பு உண்டு. சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில்
சாதனை செய்ய அமைப்பு இருக்கும் பிரபு குணமுடையவர்.எடுக்கம் முயற்சியில்
அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். புதிய செயல்கள்
செய்வதில் ஆர்வமுடையவர்
4-ம் வீட்டில் இருந்தால் :
சுகமான சொகுசான வாழ்க்கை அமையும். நல்ல அறிவாற்றல்,கல்வி, சொத்து சுகத்துடன்
வாழ்வர் நல்ல புத்திரர்கள், வாழ்க்கை துணை, நண்பர்கள் அமைவர். தாய்க்கு நீண்ட
ஆயுள் உண்டாகும். வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியானகுடும்ப
வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவை அமைய பெறுவர்
5-ம் வீட்டில் இருந்தால் :
அழகானவர், சிறந்த விசேஷமான அறிவு உடையவர். வாழ்க்கை துணையால் சுகம்,
சந்தோஷமான மனநிலை, சிறு கலகம் செய்வதில் பிரியம், வசதி வாய்ப்பு, பூர்வீக
சொத்து, கல்வியில் மேன்மை, பெண் குழந்தை யோகம் ஆகியவை உண்டாகும்
6-ம் வீட்டில் இருந்தால் :
விரோதிகளே இருக்கமாட்டார். ஆனால் ஆண்கள் இருந்தால் பெண்களாலும், பெண்கள்
இருந்தால் ஆண்களும் ஏமாற்றப்படுவார்கள். தவறான அல்லது அதிகமான பாலியல்
உறவுகளில் ஈடுபாடு உடையவராக இருப்பர். அதனால் உடல் ரீதியாகவும்,
மனரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகுபவராகவும் இருப்பர். உறவினர்களால்
அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதம் ஆகியவை
உண்டாகும்.
7-ம் வீட்டில் இருந்தால் :
மனதுக்கு இனிமையான வாழ்க்கை, சந்தோஷம் வசதி, வாய்ப்பு அமையும். காமம்
மிகுந்தவராகவும், அழகானவராகவும், மக்களுக்கு பிரியமானவராகவும், கல்வியில்
பிரியமுடையவராகவும் இருப்பர் குடும்பத்தின் மீது அக்கறை உடையவர். ஆனால்
பொதுவாக களத்திர காரகன் களத்திரத்தில் இருப்பது நல்லது அல்ல
8-ம் வீட்டில் இருந்தால் :
சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லது என்று சில ஜோதிட நூல்கள்
கூறுகின்றது. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும்
கிடைக்கும். கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும்.
தைரியசாலி. களத்திர சுகமில்லாதவர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு . சொல்ல
தகாத வார்த்தைகளை பேசுபவர். தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை
உண்டாகும். சிலருக்கு கண்களில் நோய் உண்டாகும்
9-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல செல்வத்துடன் செளக்கியமான வாழ்க்கை அமைந்து அதிர்ஷ்டசாலியாகவும்
இருப்பர். புத்திரர்களால், வாழ்க்கை துணையால்,தந்தையால் சுகம், சொத்துக்கள்
உண்டு. மகிழ்ச்சியான குடும்ப வாழ்கை, சமுதாயத்தில் நல்ல பெயர், வெளிநாடு,
வெளியூர் பயணங்கள் உண்டு. தந்தைக்கு நல்ல ஆயுள் உண்டு.தர்ம எண்ணம் இருக்கும்
10-ம் வீட்டில் இருந்தால் :
இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுப்
பெரும் பொருள் ஈட்டுவர். நல்ல செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பர். நாளுக்கு
நாள் வாழ்க்கை வளர்ச்சி உண்டு. பெண்கள் நிறைந்த இடத்தில் வேலை செய்யும்
அமைப்பு உண்டு. கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண்
தொடர்புள்ள தொழில், உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி
வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். யதார்த்தவாதியாக இருப்பர். பெண்களுக்கான
அலங்காரப் பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவர். யாரையும்
வசப்படுத்தக்கூடிய சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து
விளங்குவர்
11-ம் வீட்டில் இருந்தால் :
பணத்திலும், லாபத்திலும் மட்டும் குறியாக இருப்பர்கள். உற்சாகமான மனநிலை
உடையவர்கள் ஆடம்பரம் மிக்க, செளகரியங்கள் மிகுந்த வாழ்க்கை அமையும். புகழ்,
நிதி சாஸ்திரத்தில் நாட்டம், நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத
தனசேர்க்கை அசையும், அசையா சொத்துக் சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம்
உண்டு சபலமுடையவர்கள் நண்பர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பர்
12-ம் வீட்டில் இருந்தால் :
உறவினர்களால் நன்மை இல்லை. சுக வாழ்வு, உடல் உறவில் நாட்டம், குலகல்வியில்
நாட்டம் ஆகியவை இருக்கும். தன நாசம் உண்டு. வசதிகளைத் தேடி ஏங்கும்
மனப்பான்மை உண்டாகும். குடும்ப வாழ்க்கை சிறக்காது. சிலருக்கு கண்பார்வை
மங்கும் அபாயம் உண்டு.
குறிப்பு : சுக்கிரன்
கேந்திரத்தில் இருந்து தீய கிரக பார்வைகள பட்டாலும் மிக மேன்மையான பலனையே
தருவார். ஆனால் சுக்கிரன் 1, 2, 3, 6, 8 யில் இருந்தால் கேடு பலனையே தருவார்.
12ல் மறைந்து ஆட்சி பெற்றால் நல்ல பலனை வாரி வழங்குவார் என்று புலிப்பாணி
ஜோதிடம் கூறுகிறது
எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....
Sunday, May 17, 2020
சுக்கிரன் 12 வீடுகளில் இருந்தால் பலன்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thanks