லக்கினத்தில் இருந்து:
1-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல உத்தியோகம் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், செல்வம் உடையவர்கள். சிறந்த நட்புகள் அமையும்.
2-ம் வீட்டில் இருந்தால் :
பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பம் விருத்தியாகும். நல்ல பேச்சுயுடன் வாக்கு பலித்தல் நடக்கும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் வரும்.
3-ம் வீட்டில் இருந்தால் :
சகோதர சகோதிரி சுகமுடையவர்.ஆனால் தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் என்பர். முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை, நினைத்தை சாதிக்கும் வல்லமை, லஷ்மிகடச்ம் உண்டாகும்.
4-ம் வீட்டில் இருந்தால் :
படிப்பில் தேர்ச்சி, வேதாந்தத்தில் ஆர்வம், அரசாங்கத்தின் உதவி, நல்ல சுமுகமான குடும்பச் சூழ்நிலை, தன் சொந்த மதத்தில் தீவீர நம்பிக்கை, புத்திசாலித்தனம், வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு ஆகியவை உண்டாகும்.
5-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். புத்திரகாரகன் புத்திர ஸ்தானத்தில் இருப்பது நல்லது அல்ல இது புத்திர தோஷத்தைக் குறிக்கிறது. சிலருக்கு ஆண் வாரிசு இருக்காது. நல்லவர் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருந்தால் மட்டுமே சிறப்பான புத்திர பாக்கியம் அமையும்
6-ம் வீட்டில் இருந்தால் :
சுறுசுறுப்பு இன்றி மெத்தனமாக இருப்பர். அவமானம், அவமரியாதைகளைச் சந்திக்க நேரிடும். துரதிர்ஷ்டமானவர். நல்ல சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டு .ஆனால் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் உடல் உபாதைகள் உண்டாகும்.
7-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். வாழ்க்கை மிக சந்தோஷமாக இருக்கும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும் என்று சில நூல்கள் சொல்கிறது (திருமணத்தின் போது இதை நன்கு ஆராய்ந்து முடிவு சொல்ல வேண்டும் குரு விசுவாசம், நல்ல குணம் , ஆடை ஆபரண சுகம் ஆகியவை உண்டு
8-ம் வீட்டில் இருந்தால் :
குரு எங்கு இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவத்தை அதிகரிக்கச் செய்வார் எனவே 8-ம் வீடு ஆயுள் ஸ்தானமாகையால் அவர் ஆயுளை அதிகரிக்கச் செய்வார். உபாதையற்ற மரணம் ஏற்படும். புத்திர தோஷம் உண்டாகும். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை , நல்ல பெயர் , இறுதி காலத்தில் அமைதியான நிலை உண்டாகும்.
9-ம் வீட்டில் இருந்தால் :
சொந்த சகோதரர்களுடன் மிகவும் பிரியமாக இருப்பர். மிகவும் தெய்வபக்தியுடன் வாழ்க்கை நடத்துவர். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு . ஏதொரு நல்ல குறிக்கோளுடைய வாழ்க்கை அமையும். பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, நல்ல பழக்க வழக்கம், தெய்வீக பணிகளில் ஈடுபாடு, சகல சாஸ்த்திரத்தில் சேர்ச்சி, பூமி சம்பத்து ஆகியவை உண்டு.
10-ம் வீட்டில் இருந்தால் :
அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக அதாவது உயர் பதவிகள், செல்வம், தர்ம சிந்தனை, புத்திசாலித்தனம், மிகிழ்ச்சி ஆகியவை உண்டு இறை நம்பிக்கை மற்றும் மத விஷயங்களில் ஈடுபாடு இருப்பர். குல தொழில் ஈடுபட இருக்கும். சிலர் குசும்பனாக இருப்பர் மேலும் மற்றவர்களுக்குத் தொல்லைகளைக் கொடுப்பவராக இருப்பர் . சபைகளில் புகழ் உண்டாகும்
11-ம் வீட்டில் இருந்தால் :
நீண்ட ஆயுள், துணிச்சல் , தாராளமான தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் ஆகியவை அமைய பெறுவர். இசையில் ஆர்வம் இருக்கும். பல நண்பர்கள் உண்டு . புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஏற்றம் உண்டு. நல்ல புத்திரர்கள், வேலையாட்கள், எதையும் முடிக்கும் வல்லமை உண்டு.
12-ம் வீட்டில் இருந்தால் :
இறைவனையும், மத நம்பிக்கை குறைந்து இருக்கும்.. மற்றவர்களை கேலி செய்வதும், மற்றவர்கள் பயப்படக்கூடிய செயல்களைச் செய்பவராக இருப்பர். சிலர் கடைசிக் காலத்தில் தங்களுடைய தவறுகளை உணர்ந்து திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்வர். சிலருக்கு வாகனங்கம் நகைகள், உடைகள் மீது அதீதப் பிரியம் இருக்கும். பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். புத்திரர்கள் குறைவாக இருக்கும். சுபர் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.
குறிப்பு : தனி அந்தணன் பெருத்த அவமான தருவார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே குரு எந்த ஸ்தானத்தில் தனித்து நின்றால் அந்த ஸ்தானத்திற்கு உண்டான அவமானங்களை தருவார் .
குரு திரிகோணத்திலும் கேந்த்ரத்திலும் இருப்பது சிறந்தது. ஆனால் 6, 8 ல் குரு இருப்பது நல்லதுல்ல. அவர் சுப கிரகம் என்றாலும் அவர் கெடுதலை செய்வார். ஆனால் ஆட்சி, உச்ச வீட்டில் இருந்தால்கெடுதல் இல்லை என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது
எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....
Friday, May 8, 2020
குரு 12 வீடுகளில் இருந்தால் பலன்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thanks