எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Monday, May 4, 2020

10ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்




பத்தாவது வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
10ம் வீடு தொழில் ஸ்தானம் எனவே நாம் என்ன தொழில் செய்வோம் அல்லது செய்யலாம் என்பதையும் கணிக்க இந்த வீடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலைக் கணிக்க மேலும் சில வழிமுறைகள் உண்டு.
1 ம் வீட்டில் இருந்தால்:

    • சொத்துக்கள், செல்வம், அதிகாரம், செல்வாக்கு, சுக சௌரியங்கள், கல்வி தெய்விகவழிபாடுகள், தான தருமங்கள், அரசாங்கத்தில் உயர் பதவி முதலியவைகளுடன் இருப்பார்கள்
    • சுயமுயற்சியால் கடின உழைப்பாளியால் தீவிரமாக தொழில் செய்து முன்னேற்றம் காண்பர்.
    • இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு கிடைக்க பெறுவர்.
    • நற்பெயருடன் சொந்தங்கள், நண்பர்கள், அறிவாளிகளின் நட்பையும் பெற்று இருப்பார்கள்
    • தொழில்கள்: சுய வேலைவாய்ப்பு, அரசியல் அல்லது பொதுமக்கள் சம்மந்தப்பட்ட தொழில், Health Club போன்ற உடல் சம்மந்தபட்ட வேலைகள்
2 ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல அழகுடனும் வாக்குவன்மை, திறம்பட பேசும் சக்தி, தைரியம் , செல்வ செழிப்புடனும் மிகவும் அதிஷ்டத்துடனும் இருப்பர் .
    • குடும்பத் தொழிலை பெரிய அளவில் செய்யுது குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை அடைவர்
    • தொழில்கள்: வங்கி, முதலீடுகள், கணக்காளர்கள், உணவகங்கள், கற்பித்தல், ஆலோசகர்கள், உளவியலாளர்கள்
3 ம் வீட்டில் இருந்தால்:
    • சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் இருந்தாலும் செல்வாக்குடன் இருக்கமாட்டார்கள்.
    • சிலர் பகுதி நேர வாழ்க்கை பயணங்களிலே கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும்.
    • ஆனால் இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்
    • தொழில்கள்: Communication (தொடர்பு), கலை, விற்பனை, விளம்பரம், கணினி, எழுதுதல், வெளியீடு(Publishing)
4 ம் வீட்டில் இருந்தால்:
    • பெரிய மதிப்புள்ள அழகான வீடு, கட்டடிங்கள் , வண்டி வாகனங்கள், பணி ஆட்கள், செல்வ செழிப்பான வாழ்க்கை, தாய் மற்றும் தாய் வழி ஆதரவு முதலியன உண்டாகும்
    • பலராலும் மதிக்கப்பட்டு தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாகவும் உதாரண மனிதராகவும் இருப்பர்
    • தொழில்கள்: விவசாயம், கட்டிட வர்த்தகம், ரியல் எஸ்டேட், வாகனங்கள், நீர், புவியியல் மற்றும் சுரங்கம் போன்ற வேலைகள்
5 ம் வீட்டில் இருந்தால்:
    • மகிழ்ச்சி, செல்வாக்குவுடன் கூடிய வாழ்க்கை, பெரியமனிதர்களின் நட்பையும் அரசாங்கத்தில் உயர் பதவிக பெற்று இருப்பார்கள்.
    • புத்திரபாக்கியம், சந்தோசம் செல்வாக்கு கூடிய குடும்பம், பெரிய மனிதர்களின் நட்பு அமையும்
    • மறைமுக எதிரிகளும் இருப்பர். மேலும் அவர்கள் முன்னேற்றத்திற்கு தடைகள் ஏற்படுத்துவர் .
    • தொழில்கள்: அரசியல், பங்கு தரகர்கள், மத சடங்குகள் செய்பவர்கள், பொழுதுபோக்கு சம்மந்தபட்டதொழில்
6 ம் வீட்டில் இருந்தால்:
    • தந்திர புத்தியுடன் பிறர் பொருளை அபகரிக்கும் குணம் இருக்கும்.
    • உடம்பு மெலிந்தாக காணப்படுவர்கள். நல்ல உடல் அமைப்பு , அந்தஸ்து இல்லாதவராக இருப்பார்கள்
    • சுபலன் எனில் பொறுப்பான பதவிகள் வந்து சேர்வதுடன் நடுநிலையாளர் என்று பெயர் பெற்று பலரின் மதிப்பையும் பெறுவர்
    • அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும்.
    • தொழில்கள்: வக்கீல்கள், ராணுவம், போலீஸ், சாதாரண பணியாளர்கள் (like Labour, Waiter), சுகாதாரம் மற்றும் உணவு தொடர்பான தொழில்கள்
7 ம் வீட்டில் இருந்தால்:
    • 10க்குடையவன் 7ம் வீட்டில் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். ஆனால் ஆண் ஆக இருந்தால் மனைவி மூலம் பொருள் சேரும்
    • சிலருக்கு தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பர்.அதுவே அவருடைய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும்.
    • தொழில் நிமித்தமாக அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புஅமையும்
    • தொழில்கள்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் (Trading, mechant, Foreign business)
8 ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல ஆயுள் உண்டு. புத்திர தோஷம் ஏற்படும்.
    • தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும்.
    • திறமைசாலிகளாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பர்
    • தொழில்கள்: காப்பீடு,ஆராய்ச்சி, இறப்பு தொடர்பான, ஜோதிடம் போன்ற தொழில்கள்
9 ம் வீட்டில் இருந்தால்:
    • தகப்பனார் சொத்துக்கள் விரயம் ஆகும். சுப பலன் எனில் தந்தையின் உதவியும் வழிகாட்டுதலும் நிறைந்திருக்கும்.
    • அரசாங்க ஆதரவு, பெரிய மனிதர்களின் நட்பை பெறுவார்கள் ய்வர்.
    • தானதருமங்களிலும் ஆன்மீக வாழ்விலும் ஈடுபாடு மற்றும் தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பர்
    • பிற்கால வாழ்க்கை சிறப்புடன் இருக்கும்
    • தொழில் : சட்டம் சம்மந்தபட்ட தொழில், பல்கலைக்கழக ஆசிரியர் கற்பித்தல், பயணம், மதத் தொழில்கள் (மத போதகர்), வெளிநாட்டு வேலை
10 ம் வீட்டில் இருந்தால்:
    • உலக விஷ்யங்களை அறிந்தவராக இருப்பார்கள்
    • பெரிய மனிதர்களின் ஆதரவு ,உறவினர்களின் ஆதரவு, உலக விசயங்களில் நல்ல அறிவு இருக்கும்.
    • தொழில்: அரசியல் மற்றும் அரசாங்க வேலைகள், பொதுமக்கள் மற்றும் வெகுஜனங்களுடன் கையாள்வது போன்றதொழில்கள், மேலாளர்கள் (Manager)
11 ம் வீட்டில் இருந்தால்:
    • செய்யும் காரியங்களில் ஒவ்வொன்றிலும் லாபத்தை பெறுவர்
    • முத்த சகோதர சகோதரிகளுக்கு சிரமமும் மாரகமும் ஏற்படலாம்
    • பணத்துடன், மதிப்பும், மரியாதையுடன் மகிழ்வுடன் இருப்பர்
    • நல்ல நோக்குடையவர்களாகவும் பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்
    • தொழில்கள்: வணிகம் மற்றும் வர்த்தகம், விளையாட்டு சம்மந்தபட்ட வேலை (Sports), கணக்காளர்கள் (Accountants)
12 ம் வீட்டில் இருந்தால்:
    • பொருள் நஷ்டம் , புத்திரர்களால் கஷ்டங்கள், அனாவசியமான செலவுகள் , சொத்துக்கள் விரயம் போன்றவை இருக்கும்
    • சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும்
    • தொழில்கள்: வெளிநாட்டில் ரகசியம் செய்யும் வேலைகள் (foreign jobs requiring secrecy), பயணங்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், தொண்டு நிறுவனங்கள்
மேலும் இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும். கிரக நிலை அதாவது உச்சம், நீசம் , பகை நட்பால் பலன்கள் மாறுபடலாம்.அதனால் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.



No comments:

Post a Comment

Thanks