எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Monday, May 18, 2020

மாந்தி 12 வீடுகளில் இருந்தால் பலன்


மாந்தியை குளிகன் என்றும் அழைப்பார்கள். இது ஒரு துணை கிரகமாக செயல்படுகிறது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் பிறந்தால் மாந்தி என்றும் சொல்லப் படுகிறது. சனி புத்திரன் மாந்தி. எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும் என்பார்கள். ஜாதகத்தில் “மா” என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ராமாயணத்தில் மாந்தி பிறந்த கதை உண்டு. இராவணன் தான் மகன் பிறக்கும் போது சனி 11ல் இருக்கும்படி கட்டளை இட்டார். (சனி 11ல் இருந்தால் நல்லது என்பது நமக்கு தெரியும்) கர்மாவை தராசாக கொண்டு நடக்கும் நித்மான் ஆகிய சனி சரி என்று ஒப்புக் கொண்டாலும் அவரது ஒரு கால் 12ம் வீட்டை நோக்கி சென்றதாம் . அதை பார்த்த இராவணன் சனியின் அந்த காலை வெட்டி விழுத்த அதிலுள்ள சதை பகுதி லக்கினத்தில் விழுந்து மாந்தியாக உருவெடுத்து, இராவணன் மகன் இந்திரஜித்க்கு அற்ப ஆயுளை தந்து என்று கதை சொல்வார்கள் (பல நுல்களின் பல கதைகள் உள்ளது). சரி மாத்தி 12 ஸ்தான பலன்களை பார்ப்போம்
1-ம் வீட்டில் இருந்தால் :
குண்டான உடலமைப்பு (நன்றாக சாப்பிடுவார்கள் எனலாம்), உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், கொடூர சிந்தனைகள், முரட்டு குணம், சுறுசுறுப்பு ஆகியவைகளை கொண்டு இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்
2-ம் வீட்டில் இருந்தால் :
குடும்ப வாழ்க்கை நிம்மதியின்மை, பேச்சில் தடுமாற்றம் அல்லது விதண்டாவாதம் செய்தல், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் மற்றும் வறுமை, கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர். துஷ்டன் என்று பெயர் எடுப்பார்கள். உடல் ஊனம் இருக்கும். (இது மாந்திக்கு நல்ல ஸ்தானம் கிடையாது)
3-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும். மிக எளிதில் உணர்ச்சவசப்படுதல், முன்கோபம், யாருடனும் அனுசரித்து போகாத தன்மை ஆகியவை இருக்கும். உடன் பிறந்தவர்கள் இருக்கமாட்டார்கள் அப்படி இருந்தாலும் அவர்களுடன் நல்ல உறவு இருக்காதது. அரசு ஆள்பவர்களின் தொடர்பு மற்றும் மதிப்பையும் பெற்று இருப்பார்கள்.
4-ம் வீட்டில் இருந்தால் :
நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும். துரஷ்டசாலிகள் என்றும் சொல்லாம். ஆனால் பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைபகுதியில் சில காலம் வாழ நேரிடும். அதனால் குற்றம் ஓன்றும் இல்லை புலிப்பாணி ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது.
5-ம் வீட்டில் இருந்தால் :
புத்திரதோஷம் உண்டு நிலையில்லாத மனம் உடையவர்கள். மனநிலை பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாமை, தைரியம்(வீரம்), தகாத உறவுகள் ஆகியவை கொண்டவராகவும் இருப்பார்கள்.
6-ம் வீட்டில் இருந்தால் :
மிகவும் நல்ல இடம் நீண்ட ஆயுள், பிறருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள். எதிரிகள் இருக்க மாட்டர்கள் இருந்தாலும் அவர்களை வெற்றி கொள்ளவர்கள். பரோபகாரி என்றும் சொல்லாம்.
7-ம் வீட்டில் இருந்தால் :
சிறு வயதில் கண்டம் நேரலாம். வீண் விவாதங்கள் செய்ப்பராக இருப்பார்கள் மேலும் விவாதங்களால் தன விரயம் ஏற்படும். தனக்கு என்று தவறான நியதிகள், தவறான நியாயங்களை வைத்தது `இருப்பர்கள்.
8-ம் வீட்டில் இருந்தால் :
அதிக பசி, மறைமுக வியாதிகள், எல்லாவற்றிலும் தோல்விகள் ஆகியவை ஏற்படும். நீரால் கண்டம் ஏற்படும். கண் பார்வை குறைபாடுகள் ஏற்படலாம்
9-ம் வீட்டில் இருந்தால் :
பிதுர்தோஷம் உடையவர்கள். மெலிந்த உடலமைப்பும், தவறான பாதை மற்றும் தவறான பழக்கவங்கள் உடையவர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி எல்லா இன்மை, தனிமை, வாழ்க்கையில் கவலைகள், பிரச்னைகளை ஆகியவை ஏற்படலாம்.
10-ம் வீட்டில் இருந்தால் :
கருகிகள் என்று இவர்களை சொல்லாம் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் அடைவார்கள் தனிமையை விரும்புபவராகவும் இருப்பார்கள். இறை நம்பிக்கை இருக்காது அப்படி இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டார்கள் பொதுவாக நல்ல குடும்பம் குழந்தைகள் சுகமாக இருப்பார்கள்
11-ம் வீட்டில் இருந்தால் :
செல்வம் செல்வாக்கு எந்த குறையும் இன்றி அரசனை போல் வாழ்வார்கள். நல்ல வாழ்க்கைதுணை, மற்றவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். வசியன் (தேவதை வசியன்), ஜாலகாரன் என்றும் சொல்லாம்
12-ம் வீட்டில் இருந்தால் :
இது ஒரு மோசமான அமைப்பு. ஏழ்மை நிலை, வீண் பணவிரயம், தவிர்க்க முடிய வீண் செலவு போன்றவையால் அவதியுறுவார்கள். மேலும் சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள்.சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும்.
குறிப்பு : : மாந்திக்கு பார்வைகள் இல்லை என்று சில நூல்களிலும் 2, 7, 12 வீட்டை பார்க்கும் என்றும் சில நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில நூல்களில் மாந்தி, குளிகன்வேறு என்றும் மாந்தி சனி மகன் குளிகன் எமதருமன் மகன் என்றும் கூறுகிறது. நாம் குழம்ப வேண்டாம். மாந்தி, குளிகன் ஓன்றுதான் என்று புலிப்பாணி நூல் சொல்வதை ஏற்றுக் கொள்ளவோம்.

Sunday, May 17, 2020

கேது 12 வீடுகளில் இருந்தால் பலன்


லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
விரக்தி மனப்பான்மை உடன் எதிலும் பற்று அற்றவராக, மெல்லிய சரீரமுடையவராகவும், கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் உடனும் அமைதியவராகவும் இருப்பார்கள். எதிரிகளால் உடலிலும் பிரச்னை உண்டு.
2-ம் வீட்டில் இருந்தால் :
கடுமையாகவும், கம்பிரமாகவும் பேசக் கூடியவர். பண நஷ்டம் ஏற்படக் கூடும். எதையாவது பிறரைப்பற்றி குறையாக பேசி கொண்டே இருப்பர் . கல்வி கெடும். குறுகிய கண்ணோட்டம் உடையவராக இருப்பர். குடும்பத்தில் குழப்பம், பிரச்னை, செய்வினை கோளாறு,நிம்மதி குறைவு போன்றவை இருக்கும். திருமணம மற்றும் குழந்தை பேறு கால தாமதம், சபலம் குணம் போன்றவையால் அவதி அடைவார்கள் .
3-ம் வீட்டில் இருந்தால் :
துணிச்சல் மிக்கவர்கள். உடல் பலம் பொருந்தியவர்கள். தர்ம சிந்தனை இருக்கும். நல்ல குடும்பம், நல்ல உறவினர்கள் அமையும். இளைய சகோதர சகோதரிகள் இது நல்லது அல்ல. எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிப்பர்கள் ஆனாலும் மனதில் ஏதொரு குறை இருந்துக் கொண்டே இருக்கும்.
4-ம் வீட்டில் இருந்தால் :
தாயாரால் அனுகூலமில்லை. வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கையில் பல தரப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். இதய சம்மந்தப் பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. தீய எண்ணங்களில் மனம் லயக்கும். இந்த அமைப்பு உடைய ஜாதகர்கள்பிறரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டார். வாகனங்கள் வாங்குவதற்க்கு தடை, வாகனங்களால் பிரச்னை உண்டு.
5-ம் வீட்டில் இருந்தால் :
உதாரண குணம் சபல புத்தி அஜீரணக்கோளாறுகள், கெட்ட குணம், புத்தி கூர்மையின்மை ஆகியவை இருக்கும். 5ல் கேது இருந்தால் சந்நியாச யோகம் என்று சில நூல்கள் கூறுகிறது. மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இல்லை எனில் குழந்தை இன்மை அல்லது குழந்தைகளால் நன்மையின்மை ஏற்படும்
6-ம் வீட்டில் இருந்தால் :
கேதுவிற்கு மிகவும் உகந்த இடம். புகழும், அதிகாரமும்,செல்வாக்கும் தேடிவரும். உயர் கல்வி, தர்மசிந்தனை, சொந்தபந்தங்களை நேசிக்கும் தன்மை, பலதுறைகளில் அறிவு, தைரியம் வித்தை ஆகியவை இருக்கும். எதிரிகள் இருக்க மாட்டார்கள். இன்பமான வாழ்ககை அமையும். அஜீரணக்கோளாறுகள் ஏற்படும்.
7-ம் வீட்டில் இருந்தால் :
திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. நோய்வாய்ப்பட்ட வாழ்க்கை துணை அமையும். இளமை கால வாழ்க்கை நன்றாக இருக்காது. வாழ்க்கையில் வளமை இன்றி மன அழுத்ததுடன் வாழ்வர். சோம்பல், முடபுத்தி, இருதாரம், பொய் சொல்தல் ஆகியவை இருக்கும். 7ம் இடம் விருச்சிக ராசியாக இருந்தால் எப்போதும் சுகம், தனலாபம் உண்டாகும்.
8-ம் வீட்டில் இருந்தால் :
அறிவாளிகள் மேலும் மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவர்கள் விபத்துகள் மற்றும் உடம்பில் நோய்களால் புண்கள் வரலாம். தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் தோன்றும் . பொதுவாக ஆயுள்தோஷம் உண்டு. அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் ஆசை, திருமண வாழ்வில் பிரச்சினைஆகியவை உண்டு திருமணம் கால தாமதமாகும். சசுபலன் பெற்றால் புகழ், தலைமை ஏற்கும் தகுதி ஆகியவை இருக்கும். அந்த 8ம் இடம் விருச்சிகம், கன்னி, மேஷம், ரிஷபம், மிதுனத்தில் இருந்தால் அஷ்ட ஐஸ்வரியம் உண்டாகும்.
9-ம் வீட்டில் இருந்தால் :
தகப்பனாருடன் நல்லுறவு இருக்காது. பிதூர்தோஷம் ஏற்படும். மிக்க தைரியசாலியாகவும் அதிஷ்டமில்லாமை, நல்ல புத்திரர்கள், நண்பர்கள், தர்மம் செய்யும் குணம் ஆகியவை பெற்று இருப்பார்கள். மாறும் மன நிலை உடைய இவர்களுக்கு தெய்வ பக்தி மிக குறைவாக இருக்கும் (இல்லாமலும் போகலாம்)
10-ம் வீட்டில் இருந்தால் :
உற்சாகமான மனம், நிறைந்த அறிவு, கலைகளில் ஈடுபாடு, இரக்க மனம் ஆகியவை பெற்று இருப்பார்கள். தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்தித்து நல்ல தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவார்கள். சிலருக்கு தந்தை உடல்நலப் பிரச்சனை அல்லது பணம் கஷ்டத்தில் இருப்பர். சௌரிய குறைவு, துக்கம் ஆகியவை உண்டாகும்.
11-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல பணவரவு, நண்பர்களின் உதவி, நல்ல குணம், எடுத்த காரியங்களில் வெற்றி, நல்ல பெயர், தர்ம செய்யும் குணம் போன்றவையுடன் சுகமாக வாழ்வர். சூதாட்டம், லாட்டரிச் சீட்டு அல்லது பங்கு சந்தை போன்றவற்றில் இருந்து பணம் வரும் வாய்ப்பு உண்டு. மூத்த சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை குறையும்
12-ம் வீட்டில் இருந்தால் :
12ல் கேது இருந்தால் ஜாதகருக்கு இது கடைசி பிறவி என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது. மனம் அமைதியின்றி அலைபாயும்.. புண்ணிய தலங்களுக்க அடிக்கடி செல்வார். சிலர் பிறந்த நாட்டில் இருந்து தூர தேசங்களில் வசிக்க நேரிடும். பணசேமிப்பு இருக்காது இல்லற சுகபோகங்களில் ஈடுபாடு இருக்காது. பாதங்களில் நோய் ஏற்படக்கூடும். நல்ல திறமையாக வாதங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவர். பரம்பரை சொத்துக்கள் இழக்க நேரிலாம்
குறிப்பு : சனியின் வீடுகளான மகரம் கும்பம் வீடுகளில் இருந்தால் மிகவும் சிறப்பு எனவே இந்த இரண்டு லக்கினமும் கேதுக்கு மிகவும் உகந்தது. விருச்சிகம், கன்னி, மேஷம், ரிஷபம், மிதுனத்தில் இருந்தால் நல்லது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது.

ராகு 12 வீடுகளில் இருந்தால் பலன்


லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
பல வியாதிகள் உடையவர். விவாதம் செய்வதில் கெட்டிக்காரர். வாழ்க்கைதுணையின் மூலம் பிரச்னைகளும், வாழ்க்கை துணையின் உடல் நல பாதிப்பும் இருக்கும். சிலருக்கு நீண்ட ஆயுள், சொத்து சுகம் அமையாது . சிலர் மன நோய் சம்மந்தப்பட்ட வியாதிகள் வரலாம்
2-ம் வீட்டில் இருந்தால் :
குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கண்பார்வையில் கோளாறு ஏற்படும். விஷ நாக்கு உடையவர்கள் (பேச்சில் விஷ தன்மை). குறைந்த அளவே செல்வம் அல்லது கடனில் செல்வம் மூழ்கும் நிலை இருக்கும். சாதுரியமும், சாமர்த்தியமும், கோபமும் உடையவர். ராகுவுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோதான் நன்மை ஏற்படும்.
3-ம் வீட்டில் இருந்தால் :
தைரியசாலியாகவும், மற்றவர்களை கவரக்கூடிய ஆற்றல் உடைவராகவும் நீண்ட ஆயுளுடன், வீண் செலவு செயப்பவராகவும் இருப்பர். வாழ்க்கைத் துனைவி, குழந்தைகள், வீட்டில் செல்வம் இவை அனைத்தும் திருப்தி தரும் வகையில் அமையும். தொழில் சம்மந்தமாக வெளிநாட்டு பயணம் அமையும். வெளிநாட்டு நண்பர்கள் மூலம் லாபம் உண்டு.
4-ம் வீட்டில் இருந்தால் :
முட்டாள்தனமான காரியங்கள் செய்வார்கள். இவர்களின் செயலில் நம்பகத்தன்மை இருக்காது. சுகமில்லாதவர்கள் எனலாம். தாயாரால் அனுகூலம் இல்லை. தாயின் உடல் நலனில் அதிக பாதிப்பு ஏற்படும் . இதய சம்மந்தப்பட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. இடம், சொத்துக்களில் பிரச்னை, வில்லங்கங்கள், பஞ்சாயத்துகள் இருக்கும். பகைகள் உண்டாகும். சிலருக்கு தரித்திர நிலை உண்டாகும். உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படாது. ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு மன அமைதி இல்லாமல், ஒருவிதமான சோகத்தை வைத்துக்கொண்டே வாழ்பவர்களாக இருப்பர் .
5-ம் வீட்டில் இருந்தால் : ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது முதலில் தோல்வி ஏற்பட்டு கடும் முயற்சிக்கு பின்பே வெற்றியை அடைய முடியும்.. நெருங்கிய சொந்த பந்தத்திற்கு அதிகமாக செலவு செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் . சிலருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில ஜோதிட நுல்கள் 5 ல் ராகு இருந்தால் கொள்ளி வெக்க பிள்ளை உண்டு என்று கூறுகிறது திருமண வாழ்க்கையில் அல்லது காதலில் சிக்கினாலும் பிரச்சினை ஏற்படும். சுயநலவாதிகள். மற்றும் கோபக்காரர்கள் . (ராகுவை சனி பார்த்தல் பிள்ளை பிறப்பதில் தாமதம் அல்லது எந்த வாரிசும் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு)
6-ம் வீட்டில் இருந்தால் :
நீண்ட ஆயுள் உடன் மாறாத வியாதி இருக்கும். அவ்வப்போது எதிரிகளின் தொல்லைகளும் இருக்கும். வாழ்க்கையில் ஆரம்பத்தில் கஷ்டத்தையும், பிற்பகுதியில் சந்தோஷத்தையும் இந்த ராகு கொடுப்பார் . நண்ப்ர்களால், வாழ்க்கை துணையால் அதிகமான ஆதாயம் உண்டு. சாப்பாட்டில் பிரியம் இருக்கும் ராகுவுடன் சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால், ஆசாமி ஊழல் பேர்வழியாக இருப்பர். அதிக மூட நம்பிக்கை இருக்கும்
7-ம் வீட்டில் இருந்தால் :
திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. வாழ்க்கை துணை வியாதி உள்ளவராக இருப்பார்கள் . பூர்வக சொத்துகள் கை விட்டு போகும் வாய்ப்பு உள்ளது. ஊதாரியாகவும், அடிக்கடி வியாதிகளால் கஷ்ட படுபவராகவும், மகிழ்ச்சி இல்லாதவராகவும் இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் முதலில் தோல்வி ஏற்பட்டாலும் விடா முயற்சியின் மூலம் வெற்றி பெற்றுபவராக இருப்பார்கள். அடிக்கடி பயணங்கள் செய்ய நேரிடும் .
8-ம் வீட்டில் இருந்தால் :
பல தொந்தரவுகளும். பொதுவாழ்வில் நற்பெயர் இன்மையும் இருக்கும், ராகுவுடன் சந்திரனும் இருந்தால் மன நோயால் பாதிக்கப்படுவார்கள். அடிக்கடி பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். சதா வாக்குவாதம், விதண்டாவாதம் அல்லது சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும். மேலும் அந்த சூழ்நிலையில் தோல்வி மட்டும் அமையும். பெண்கள் சிலருக்கு மாதவிடாய் பிரச்னையும், ஆண்களுக்கு மூல நோய் பிரச்னையும் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத அதிஷ்டம் ஏற்படும். ஆனால் அந்த அதிஷ்டத்தை மற்றவர்கள் தான் அனுபவிப்பார்கள்
9-ம் வீட்டில் இருந்தால் :
இது தகப்பனருக்கு நல்லது அல்ல. பூர்விக சொத்துக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும். சிலர் கடவுள் மேலும், அவர் சார்ந்துள்ள மதத்தின் பேரிலும் அவ்வளவு நம்பிக்கை இருக்காது. நல்ல புத்தி, புகழ்ச்சி, நல்ல தயாள குணம், கீர்த்தி, அடக்கமான குணம் ஆகியவை உண்டு. ஞாபகசக்தி உடையவர்களாகவும், தன் கையில் எடுத்துக் கொள்ளும் காரியத்தை சிறப்பாக முடிப்பவர்களாகவும் வாக்குவாதத்தில் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்கள். அடுத்தவரின் குறைகளை கண்டுபிடித்து குறை கூறுபவராக இருப்பார்கள்.
10-ம் வீட்டில் இருந்தால் :
காம இச்சை அதிகம் உடையவாராக இருப்பார்கள். எல்லா கலைகளையும் கற்றும் திறன் உடன் கை தேர்ந்த கலைஞர்களாக இருப்பார்கள். இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வம் இருக்கும். புத்தர புத்திரகளால் சுகம் இருக்காது. குரூர குணம், அதிக ஆசை, அற்பசுகம், அஜாக்கிரதையால் தன நஷ்டம், நடன சங்கிதத்தில் ஆர்வம் ஆகியவை உண்டு. செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவார்கள். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவராக இருப்பார்கள்.
11-ம் வீட்டில் இருந்தால் :
11லில் ராகு இருப்பது நல்லது. சிலர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி புகழ் பெற்று வாழ்வர். சிலர் வெளி நாடுகளில் வணிகம் அல்லது வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவார்கள். நல்ல கல்வி, செல்வம், புகழ், நீண்ட ஆயுள், செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் அறியும் அல்லது கற்கும் திறமை வளமான வாழ்க்கை, சுகம், நல்ல வலுவான உடல் ஆகியவை பெற்று இருப்பார்கள்.. நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் பெற்று இருப்பார்கள்.. முத்த சகோதரர்கள் நல்லது அல்ல. மூத்த சகோதரரை தவிர மற்ற உறவுகளுக்கிடையே சுமூகமான உறவு இருக்கும்
12-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல வளமான வாழ்க்கை அமையும். ஆனால் ஒழுக்கமற்றவனாக இருப்பார்கள். . ஆனாலும், பலருக்கு உதவும் மனப்பான்மை பெற்று இருப்பார்கள்.. சிலருக்கு கண் பார்வைக் குறைபாடுகள், ஆண் வாரிசு இல்லாமை, உடலில் உபாதைகள், வயிற்று நோய் இருக்கும். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் திடீர் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு செய்யும் காரியம் பலன் அளிக்கமால் போகவும்சூழ்நிலைகள் அமையலாம் .
குறிப்பு : ராகு செவ்வாய் பலனையும், கேது சனியின் பலனையும் பெற்று இருக்கும். ராகு 1, 2, 12 யில் இருந்தால் ராகு கேது தோஷம் என்பார்கள்.(ராகுக்கு 7யில் கேதுவும் கேதுக்கு 7யில் ராகுவும் இருக்கும்) திருமண காலத்தில் இந்த தோஷத்தை ஆராய்ந்து பின் பலன் சொல்ல வேண்டும் ராகு திரிகோணம், கேந்திரத்தில் சுபபிரகங்கள் அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று இருந்தால் சிறப்பான யோகம் உண்டு. மேலும் ராகு தனித்த இல்லாமல் மேலும் அதன் இருபுறமும் கிரகம் இருக்குமாயின் வீரமிக்கவர் என்றும் ராஜனுக்கு ராஜன் என்றும் புலிப்பாணி ஜோதிடம் கூறுகின்றது .

சனி 12 வீடுகளில் இருந்தால் பலன்


லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
சனி லக்கினாதிபதி ஆனால் மிகவும் நல்லது ஆனால் ஆட்சியோ உச்சம் பெறாமல் இருப்பது பொதுவாக நல்லதல்ல. ஒல்லியான உருவம் இருக்கும். உடல் நலத்திற்குக் கேடு அதுவும் குழந்தைப் பருவத்தில் உடல் நலமின்மை இருக்கும். சோம்பேறித்தனம், வித்தியாசமான பழக்க வழக்கங்கள் குறுகிய மனப்பான்மை, கொடூர சிந்தனைகள் கஞ்சத்தனம், உடல் குறைபாடு ஆகியவை உடையவர் வித்துவான்கள் என்றும் கூறலாம். இடம் சம்மந்தப்பட்ட செல்வம் பெற்றவர்கள்
2-ம் வீட்டில் இருந்தால் :
பணப்புழக்கம் மிகக் குறைவாக இருக்கும். வேலைக்கேற்ற ஊதியம் கிட்டாது. குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்காது. பலருடன் கலந்து பழகத்தெரியாதவர். இவர்கள் பிறந்த குடுமப்த்திற்கு கவலைகள் இருக்கும். சேர்த்த பொருள்கள் நாசம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இரு திருமண யோகம், கல்வியில் தடை, கண்ணில் குறைப்பாடு, போதைக்கு அடிமையாக்குதல், வினோதமான சொல்லில் வல்லமை, திக்கி பேசுதல், அதிரடியாக பேசுதல் ஆகியவை உண்டு
3-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல மனைவி அமைவர். நல்ல அறிவு, புத்திசாலித்தனம் உண்டு. தன் சுக வாழ்க்கைக்காக செல்வம் பெற்று இருப்பர் அல்லது சேர்ப்பார், தைரியமானவர். சனி தன் முன்றாம் பார்வையால் 5ம் வீட்டை பார்ப்பதால் சிலருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் அல்லது தத்து புத்திர யோகம் ஏற்படும்.
4-ம் வீட்டில் இருந்தால் :
சிலர் சிறிய வயதில் தாயாரிடமிருந்து பிரிவு அல்லது தாய்க்கு உபத்திரம் அல்லது தாய்க்குக் கண்டம், வாயு உபத்திரவம், வீட்டாலும் வாகனத்தாலும் தொந்தரவு, சோம்பேரித்தனமான குணம், சொந்தக் காரர்கள் நடுவில் மரியாதை குறைவு, தனிமையை விரும்பும் குணம், பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமை, மகிழ்ச்சி இல்லாமை, திடீர் இழப்புக்கள், நல்ல சிந்தனை, கல்வியில் தடை ஆகியவை அமையும். வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்.
5-ம் வீட்டில் இருந்தால் :
புத்திர தோஷம் உண்டு. தந்தைக்கும் தோஷம் உண்டு. குறிகிய மனப்பான்மை, எவர் உடனும் சகஜமாகப் பழகாத தன்மை, வித்தியாசமான கண்ணோட்டம் ஆகியவை இருக்கும். இவர்கள் சண்டாள சித்தர்கள் என்று சில ஜோதிட நூல் சொல்கிறது
6-ம் வீட்டில் இருந்தால் :
நன்றாக வாதம் செய்பவர்கள். நன்றாக சாப்பிடுபவர்கள் துணிச்சல்மிக்கவர்கள். எதிரிகள் இவர்களுக்கு இருக்காது. மேலும் பிடிவாதகாராக இருப்பர் . சிலருக்கு ஆரோக்கியம் குறைப்பாடு இருக்கும் முக்கியமாக அதுவும் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும். புத்திசாலிதனமும் சுறுசுறுப்பும் பெற்று இருப்பார்கள்
7-ம் வீட்டில் இருந்தால் :
திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது. தேச சஞ்சாரம்,நீண்ட வியாதிகள், பாவ சிந்தனைகள் பெற்றவராக இருப்பார்கள் அரசனை போல் வாழ்க்கை அமைந்தாலும் மன அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் இருக்கும் .
8-ம் வீட்டில் இருந்தால் :
நீண்ட ஆயுள், சொற்பக் குழந்தைகள், முன்கோபம், பிறரைக் குறை சொல்லும் குணம், கெட்ட பழக்கம் மூச்சு பிரச்னை ஆஸ்மா, பொருட் செலவு, குறைந்த நன்பர்கள் ஆகியவை உண்டு. வாழ்க்கை துணையின் பொருளாதாரம் நன்றாக இருக்காது. அடிக்கடி நோய் வர வாய்ப்புகள் அதிகம். விசுவாசம் அற்ற குழந்தைகள் சிலருக்கு அமையும் உறவினர்களின் உதவி கிடைக்க வாய்ப்பு இல்லை
9-ம் வீட்டில் இருந்தால் :
தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை, எந்த காரியத்தையும் செய்ய விருப்பமில்ல தன்மை, அகங்கராம், பாவ செயல்கள் செய்யும் எண்ணம், மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் குணம், இறை நம்பிக்கை இல்லாமை, கஞ்சதனம் ஆகியவை இருக்கும். தகப்பனருடன் நல்ல உறவு இருக்காது. மேல் படிப்பில் மந்தத்தன்மை இருக்கும்.
10-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல தனவான் . வைராக்கியமுடைவர்கள் தைரியமுடையவர் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச் சமமான பதவிகளில் இருக்க வாய்ப்பு உண்டு. சிலர் விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில் ஈடுப்பட்டு சிறந்து விளங்குவர்கள். தொழிலில் பல ஏற்றங்களும் இறக்கங்களும் இருக்கும். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பர். தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் ஆகியவை ஏற்படும்
11-ம் வீட்டில் இருந்தால் :
செல்வம், ஐஸ்வரிய பிராப்தம், பூர்ண ஆயுள், சத்திய குணம், நல்ல மனம், குறைந்த நண்பர்கள், நல்ல குழந்தை பாக்கியம்,அரசியல் ஆதாயம், வெற்றி, நல்ல படிப்பு, மரியாதை ஆகியவை உண்டு. பொதுவாக இந்த இடத்தில் சனி இருப்பது மிகவும் நல்லது. சொத்துகளுடன் வண்டி வாகன வசதிகளுடன் வாழ்க்கையை சுகமாக அனுபவிப்பார்கள்
12-ம் வீட்டில் இருந்தால் இந்த ஸ்தானம் நல்லதுல்ல செல்வமும்,மகிழ்ச்சியும் இருக்காது . பலவித நோய்கள், எதிரிகள், நம்பிக்கையின்மை ஆகியவை இருக்கும். சிலர் அங்ககீனம் அல்லது உடற் குறைபாடு இருக்கும் . வியாபாரம் செய்தோ அல்லது எதோ ஒரு வகையில் கையில் உள்ள பணம் மொத்தத்தையும் இழக்கும் சூழ்நிலை அமையும்
குறிப்பு : சனி 3, 6, 9, 11லில் இருந்தால் :

ஆயுள் தீர்க்கத்துடன் நல்லதை செய்வார் அதே போல் அவர் 10ல் இருந்தால் :

பல விதமான நன்மைகளை செய்வார்.

சுக்கிரன் 12 வீடுகளில் இருந்தால் பலன்:

லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
அதிக செல்வம், நயமான குணம், அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை ஆகியவை உண்டாகும்.
2-ம் வீட்டில் இருந்தால் :
பணப் புழக்கம், மிக இனிமையாகப் பேசும் தன்மை, வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம், அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு ஆகியவை அமையும். சிலருக்குப் பெண்களாலும், வாகனங்களாலும் வருமானம் உண்டு. சிலர் கதை கவிதை சொல்வதில் வல்லவராக இருப்பர். பாவக் கிரங்களின் சேர்க்கை அல்லது பலம் இழந்து இருந்தால் சிலருக்கு கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்புகள், தீய பழக்க வழக்கம் ஆகியவை உண்டாகும்.
3-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல வசதி வாய்ப்பு உண்டு. சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய அமைப்பு இருக்கும் பிரபு குணமுடையவர்.எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். புதிய செயல்கள் செய்வதில் ஆர்வமுடையவர்
4-ம் வீட்டில் இருந்தால் :
சுகமான சொகுசான வாழ்க்கை அமையும். நல்ல அறிவாற்றல்,கல்வி, சொத்து சுகத்துடன் வாழ்வர் நல்ல புத்திரர்கள், வாழ்க்கை துணை, நண்பர்கள் அமைவர். தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியானகுடும்ப வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவை அமைய பெறுவர்
5-ம் வீட்டில் இருந்தால் :
அழகானவர், சிறந்த விசேஷமான அறிவு உடையவர். வாழ்க்கை துணையால் சுகம், சந்தோஷமான மனநிலை, சிறு கலகம் செய்வதில் பிரியம், வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, பெண் குழந்தை யோகம் ஆகியவை உண்டாகும்
6-ம் வீட்டில் இருந்தால் :
விரோதிகளே இருக்கமாட்டார். ஆனால் ஆண்கள் இருந்தால் பெண்களாலும், பெண்கள் இருந்தால் ஆண்களும் ஏமாற்றப்படுவார்கள். தவறான அல்லது அதிகமான பாலியல் உறவுகளில் ஈடுபாடு உடையவராக இருப்பர். அதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகுபவராகவும் இருப்பர். உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதம் ஆகியவை உண்டாகும்.
7-ம் வீட்டில் இருந்தால் :
மனதுக்கு இனிமையான வாழ்க்கை, சந்தோஷம் வசதி, வாய்ப்பு அமையும். காமம் மிகுந்தவராகவும், அழகானவராகவும், மக்களுக்கு பிரியமானவராகவும், கல்வியில் பிரியமுடையவராகவும் இருப்பர் குடும்பத்தின் மீது அக்கறை உடையவர். ஆனால் பொதுவாக களத்திர காரகன் களத்திரத்தில் இருப்பது நல்லது அல்ல
8-ம் வீட்டில் இருந்தால் :
சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகின்றது. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும் கிடைக்கும். கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும். தைரியசாலி. களத்திர சுகமில்லாதவர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு . சொல்ல தகாத வார்த்தைகளை பேசுபவர். தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். சிலருக்கு கண்களில் நோய் உண்டாகும்
9-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல செல்வத்துடன் செளக்கியமான வாழ்க்கை அமைந்து அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பர். புத்திரர்களால், வாழ்க்கை துணையால்,தந்தையால் சுகம், சொத்துக்கள் உண்டு. மகிழ்ச்சியான குடும்ப வாழ்கை, சமுதாயத்தில் நல்ல பெயர், வெளிநாடு, வெளியூர் பயணங்கள் உண்டு. தந்தைக்கு நல்ல ஆயுள் உண்டு.தர்ம எண்ணம் இருக்கும்
10-ம் வீட்டில் இருந்தால் :
இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர். நல்ல செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பர். நாளுக்கு நாள் வாழ்க்கை வளர்ச்சி உண்டு. பெண்கள் நிறைந்த இடத்தில் வேலை செய்யும் அமைப்பு உண்டு. கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில், உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். யதார்த்தவாதியாக இருப்பர். பெண்களுக்கான அலங்காரப் பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவர். யாரையும் வசப்படுத்தக்கூடிய சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவர்
11-ம் வீட்டில் இருந்தால் :
பணத்திலும், லாபத்திலும் மட்டும் குறியாக இருப்பர்கள். உற்சாகமான மனநிலை உடையவர்கள் ஆடம்பரம் மிக்க, செளகரியங்கள் மிகுந்த வாழ்க்கை அமையும். புகழ், நிதி சாஸ்திரத்தில் நாட்டம், நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தனசேர்க்கை அசையும், அசையா சொத்துக் சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம் உண்டு சபலமுடையவர்கள் நண்பர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பர்
12-ம் வீட்டில் இருந்தால் :
உறவினர்களால் நன்மை இல்லை. சுக வாழ்வு, உடல் உறவில் நாட்டம், குலகல்வியில் நாட்டம் ஆகியவை இருக்கும். தன நாசம் உண்டு. வசதிகளைத் தேடி ஏங்கும் மனப்பான்மை உண்டாகும். குடும்ப வாழ்க்கை சிறக்காது. சிலருக்கு கண்பார்வை மங்கும் அபாயம் உண்டு.
குறிப்பு : சுக்கிரன் கேந்திரத்தில் இருந்து தீய கிரக பார்வைகள பட்டாலும் மிக மேன்மையான பலனையே தருவார். ஆனால் சுக்கிரன் 1, 2, 3, 6, 8 யில் இருந்தால் கேடு பலனையே தருவார். 12ல் மறைந்து ஆட்சி பெற்றால் நல்ல பலனை வாரி வழங்குவார் என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது

Friday, May 8, 2020

குரு 12 வீடுகளில் இருந்தால் பலன்:



லக்கினத்தில் இருந்து:

1-ம் வீட்டில் இருந்தால் :

நல்ல உத்தியோகம் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், செல்வம் உடையவர்கள். சிறந்த நட்புகள் அமையும்.

2-ம் வீட்டில் இருந்தால் :

பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பம் விருத்தியாகும். நல்ல பேச்சுயுடன் வாக்கு பலித்தல் நடக்கும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் வரும்.

3-ம் வீட்டில் இருந்தால் :

சகோதர சகோதிரி சுகமுடையவர்.ஆனால் தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் என்பர். முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை, நினைத்தை சாதிக்கும் வல்லமை, லஷ்மிகடச்ம் உண்டாகும்.

4-ம் வீட்டில் இருந்தால் :

படிப்பில் தேர்ச்சி, வேதாந்தத்தில் ஆர்வம், அரசாங்கத்தின் உதவி, நல்ல சுமுகமான குடும்பச் சூழ்நிலை, தன் சொந்த மதத்தில் தீவீர நம்பிக்கை, புத்திசாலித்தனம், வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு ஆகியவை உண்டாகும்.

5-ம் வீட்டில் இருந்தால் :

நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். புத்திரகாரகன் புத்திர ஸ்தானத்தில் இருப்பது நல்லது அல்ல இது புத்திர தோஷத்தைக் குறிக்கிறது. சிலருக்கு ஆண் வாரிசு இருக்காது. நல்லவர் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருந்தால் மட்டுமே சிறப்பான புத்திர பாக்கியம் அமையும்

6-ம் வீட்டில் இருந்தால் :

சுறுசுறுப்பு இன்றி மெத்தனமாக இருப்பர். அவமானம், அவமரியாதைகளைச் சந்திக்க நேரிடும். துரதிர்ஷ்டமானவர். நல்ல சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டு .ஆனால் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் உடல் உபாதைகள் உண்டாகும்.

7-ம் வீட்டில் இருந்தால் :

நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். வாழ்க்கை மிக சந்தோஷமாக இருக்கும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும் என்று சில நூல்கள் சொல்கிறது (திருமணத்தின் போது இதை நன்கு ஆராய்ந்து முடிவு சொல்ல வேண்டும் குரு விசுவாசம், நல்ல குணம் , ஆடை ஆபரண சுகம் ஆகியவை உண்டு

8-ம் வீட்டில் இருந்தால் :

குரு எங்கு இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவத்தை அதிகரிக்கச் செய்வார் எனவே 8-ம் வீடு ஆயுள் ஸ்தானமாகையால் அவர் ஆயுளை அதிகரிக்கச் செய்வார். உபாதையற்ற மரணம் ஏற்படும். புத்திர தோஷம் உண்டாகும். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை , நல்ல பெயர் , இறுதி காலத்தில் அமைதியான நிலை உண்டாகும்.

9-ம் வீட்டில் இருந்தால் :

சொந்த சகோதரர்களுடன் மிகவும் பிரியமாக இருப்பர். மிகவும் தெய்வபக்தியுடன் வாழ்க்கை நடத்துவர். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு . ஏதொரு நல்ல குறிக்கோளுடைய வாழ்க்கை அமையும். பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, நல்ல பழக்க வழக்கம், தெய்வீக பணிகளில் ஈடுபாடு, சகல சாஸ்த்திரத்தில் சேர்ச்சி, பூமி சம்பத்து ஆகியவை உண்டு.

10-ம் வீட்டில் இருந்தால் :

அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக அதாவது உயர் பதவிகள், செல்வம், தர்ம சிந்தனை, புத்திசாலித்தனம், மிகிழ்ச்சி ஆகியவை உண்டு இறை நம்பிக்கை மற்றும் மத விஷயங்களில் ஈடுபாடு இருப்பர். குல தொழில் ஈடுபட இருக்கும். சிலர் குசும்பனாக இருப்பர் மேலும் மற்றவர்களுக்குத் தொல்லைகளைக் கொடுப்பவராக இருப்பர் . சபைகளில் புகழ் உண்டாகும்

11-ம் வீட்டில் இருந்தால் :

நீண்ட ஆயுள், துணிச்சல் , தாராளமான தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் ஆகியவை அமைய பெறுவர். இசையில் ஆர்வம் இருக்கும். பல நண்பர்கள் உண்டு . புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஏற்றம் உண்டு. நல்ல புத்திரர்கள், வேலையாட்கள், எதையும் முடிக்கும் வல்லமை உண்டு.

12-ம் வீட்டில் இருந்தால் :

இறைவனையும், மத நம்பிக்கை குறைந்து இருக்கும்.. மற்றவர்களை கேலி செய்வதும், மற்றவர்கள் பயப்படக்கூடிய செயல்களைச் செய்பவராக இருப்பர். சிலர் கடைசிக் காலத்தில் தங்களுடைய தவறுகளை உணர்ந்து திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்வர். சிலருக்கு வாகனங்கம் நகைகள், உடைகள் மீது அதீதப் பிரியம் இருக்கும். பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். புத்திரர்கள் குறைவாக இருக்கும். சுபர் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.

குறிப்பு : தனி அந்தணன் பெருத்த அவமான தருவார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே குரு எந்த ஸ்தானத்தில் தனித்து நின்றால் அந்த ஸ்தானத்திற்கு உண்டான அவமானங்களை தருவார் .
குரு திரிகோணத்திலும் கேந்த்ரத்திலும் இருப்பது சிறந்தது. ஆனால் 6, 8 ல் குரு இருப்பது நல்லதுல்ல. அவர் சுப கிரகம் என்றாலும் அவர் கெடுதலை செய்வார். ஆனால் ஆட்சி, உச்ச வீட்டில் இருந்தால்கெடுதல் இல்லை என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது



புதன் 12 வீடுகளில் இருந்தால் பலன்:




லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் இருந்தால் :

அதாவது லக்கினத்தில் இருந்தால் புத்திசாலியாக இருப்பர். நல்ல பேச்ச திறன் உடன் பேச்சில் இனிமையும் இருக்கும். கலகலப்பானவர். வாழ்க்கை துணையிடம் பிரியத்துடன் இருப்பர் உலக அறிவு உடையவர்.

2-ம் வீட்டில் இருந்தால் :

பேச்சு நன்றாக இருக்கும் பொய் பேசுவதில் வல்லவராக இருப்பர். இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். ஏஜென்சி தொழில் மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ பணம் சம்பாதிப்பர். சிலர் தான் கற்ற கல்வியைக் கொண்டு பணம் சம்பாதிப்பர். புதன் ஒரு இரட்டைக் கிரக ஆகியதால் சிலருக்கு இரட்டை வருமானம் உண்டு.

3-ம் வீட்டில் இருந்தால் :

இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பர். சிலருக்கு இரட்டை பிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டு . சிலர் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி (இரட்டை வேஷம் ) பேசுவார்கள்.

4-ம் வீட்டில் இருந்தால் :

கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல நண்பர்கள் அமைவர். தாய்வழி உறவுகளால் உதவி கிடைக்கும். வாகனம், வீடு வாங்க யோகம் உண்டு. ஒரு வீடோ அல்லது ஒரு வாகனமோ வாங்க முயற்சி செய்தால் இரண்டாக வாங்கும் அமைப்பு சிலருக்கு ஏற்படும்.

5-ம் வீட்டில் இருந்தால் :

நல்ல குணமுடையவர். ஆத்மஞானி, வித்துவான், சிலர் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்று இருப்பர் நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மற்றும் பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். தந்திர வேலைகள் செய்ய தெரிந்தவர்கள்

6-ம் வீட்டில் இருந்தால் :

எதற்கெடுத்தாலும் தர்க்கம் (விவாத சீலன்) செய்பவர். வியாதிகள் உடையவர்கள் புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால் மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் போன்ற உண்டாகும். எதிரிகளை வெல்லும் தன்மை உண்டு சிலரின் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மேலும் மாமனின் உதவி கிடைக்கும்.

7-ம் வீட்டில் இருந்தால் :

வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர். அவர் மூலம் வருமானம் வரும். பாவக் கிரங்களுடன் சேர்ந்தால் 2-வது திருமணம் அமையும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் உண்டு. மிருதுவானவர். தன் தந்தையைக் காட்டிலும் சிறந்து விளங்குவர்

8-ம் வீட்டில் இருந்தால் :

மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர். கல்வியில் தடை ஏற்படும். நல்ல மனத்துடையவர், தைரியம் குறைந்தவர் . பூர்ண ஆயுள் உண்டு

9-ம் வீட்டில் இருந்தால் :

சிறந்த அறிவாளி. எதையும் அலசி, ஆராய்ந்து பார்க்கும் குணம் உடையவர். மிக வேடிக்கையாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் பேசி பிறரை கவர்ந்து இழுக்கும் திறமை உண்டு . சுகம் உண்டாகும் . புத்திர சுகம் உண்டு. கல்வியில் சிறந்து விளங்கிவர்

10-ம் வீட்டில் இருந்தால் :

நேர்மை , மகிழ்ச்சி உடையவராகவும் இருப்பர். அளவான வார்த்தைகளை பேசுபவர். எல்லா கலைகளிலும் வித்தகனாக( வித்தையறிந்தவர்) இருப்பர். காவிய கணித அறிந்தவர். புகழ், எடுத்த காரியத்தில் வெற்றி உடையவர். .கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பார்கள். மேலும் சிலர் அரசாங்க வேலையில் இருப்பார்கள். ஏஜென்சி தொழில் லாபம் உண்டு

11-ம் வீட்டில் இருந்தால் :

அதிகம் படித்தவர்.கூர்மையான புத்தி உடையவர். செல்வந்தராகவும், மகிழ்ச்சி உள்ளவராகவும் இருப்பர். விசுவாசமான வேலைககாரர்கள் கிடைப்பார்கள். கடன் இல்லாதவர்கள். நல்ல மூத்த சகோரர் உடையவர்கள் மேலும் அவர்கள் மூலம் வருமானம் உண்டு. செல்வந்தர் எல்லா விஷத்தையும் அறியும் ஆற்றல் உண்டு .பெரியவர்களின் அனுக்கிரகம் உண்டு. நல்ல புத்திரர் மற்றும் நண்பர்கள் அமைவர். பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் இருந்தால் நல்ல சாதனை படைப்பர்.

12-ம் வீட்டில் இருந்தால் :

சலன புத்தியும், நிலையற்ற தன்னமையும் உடையவர். கல்வி சிறப்பாக இருக்காது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பர் பெண்களின் மேல் தீராத மோகமுடையவனாக இருப்பர் மேலும் தோல் வியாதி உள்ள பெண்கள் மற்றும் தரம், வயது வித்தியாசமின்றி பல பெண்களிடம் தொடர்பு அல்லது ஈடுபாடு கொண்டு இருப்பர் சிலர் பொருள் விரையமாகி வறுமையில் சிக்க நேரிடும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்வர்

குறிப்பு : பொதுவாக மறைந்த புதன் (லக்கினத்திற்கு 3, 6, 8, 12 ல் இருந்தால் மறைவு) நிறைந்த அறிவு என்று சில ஜோதிடநூல்கள் கூறுகிறது. ஆனால் நீசம் , அஸ்தமனம் (சூரியனுக்கு மிக அருகில் அதாவது 10 பாகைக்குள்) அடைந்தால் நல்லது.



Thursday, May 7, 2020

செவ்வாய் (அங்காரகன்) 12 வீடுகளில் இருந்தால் பலன்



லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் இருந்தால் :

செவ்வாய் லக்கினத்தில் இருப்பது நல்லதுல்ல. எதிரிகளால் உடலில் ரத்த காயம் , மற்றும் பல காயங்கள் ஏற்படும். பொற்றோரிடம் பாசமின்மை, சக்திமிகுந்த வியாதி , மூட சிந்தனை, கண்டம், சிறிய விஷயத்தை பெரிதுபடுத்துதல் , சலனபுத்தி ஆகிய ஏற்படும்.

2-ம் வீட்டில் இருந்தால் :

சண்டைக்காரர்களாக இருப்பர். ஆனால் பேச்சுத் திறமை இருக்கும். குறைந்த செல்வம், கல்வி இருக்கும். மேலும். ஒரு சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வர். தாராளமனசு, கபடமற்ற வெளிப்படையான மனம், ஊதாரி தனமான செலவு, பூர்விக சொத்தில் சட்ட சிக்கல் ஆகிய இருக்கும். பிடிவாதம், முன்கோபம், நியாய தர்மத்தை எடுத்துச்சொல்லும் குணமும், வீண்பேச்சுகள், விவாதங்கள் ஆகியவை இருக்கும்

3-ம் வீட்டில் இருந்தால் :

செவ்வாய் சகோதர காரகன் எனவே சகோதர ஸ்தானமான 3ல் இருப்பது நல்லதுல்ல சகோதர வகையில் பிரச்சனை கொடுக்கும். மேலும் 10ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டு இருந்தால் சகோதர சகோதிரி மூலம் தொழில் அமையும் . செல்வம், புகழ் பெற்று எல்லா வசதிகளோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வர். பிடிவாதக்காரர் ஆனால் சாதனையாளர்.

4-ம் வீட்டில் இருந்தால் :

வீடு கட்டும் யோகமுண்டு. தாயார் மூலமாக அனுகூலமில்லை மேலும் தாயாருடன் சண்டை போடக் கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை , இதய நோய்கள், வண்டி வாகன விபத்துக்கள் , கல்வியில் மந்த தன்மை ,அரசியலில் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்

5-ம் வீட்டில் இருந்தால் :

புத்திர பிரச்னை அல்லது கரு கலைதல் போன்றவை நடக்கும் சில நூல்களில் பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும் என்று கூறுகிறது. வாழ்க்கை வசதியின்மை , சொத்து, சுகம் குறைப்பாடு இருக்கும். சிலருக்கு மனம் வெறுப்பு அடையும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். சிலர் தர்ம, நியாயங்கள், நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர்.

6-ம் வீட்டில் இருந்தால் :

ரத்த சம்மந்தப்பட்ட வியாதிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு ஆனாலும் உடல் கட்டுமானம் சிறப்பாக இருக்கும் மேலும் சிலருக்கு எதிகளால் தொல்லை உண்டு ஆனாலும் எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பர். காம சிந்தனை அதிகமாக இருக்கும் .

7-ம் வீட்டில் இருந்தால் :

சிலருக்கு மண வாழ்க்கையில் அதாவது வாழ்ககை துணையால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். திருமணவாழ்க்கை சண்டை நிறைந்ததாக இருக்கும். சண்டை போடும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். சிலர் நியாய தர்ம இல்லாத காரியங்கள் செய்யும் கல் மனமுடையவராக இருப்பர் . நோய் வாய்ப்பட வாய்ப்புகள் அதிகம்

8-ம் வீட்டில் இருந்தால் :

விபத்துக்களால் மரணம் ஏற்படுக்கூடும்; பண நாசம் சிலருக்கு ஏற்படும்; குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு குடும்ப நிம்மதி பாதிக்கப் படும். இரத்த சம்மந்தமான நோய்கள், பாலின உறுப்புகளில் பிரச்னை வர வாய்ப்பு அதிகம். உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சுப பார்வை இல்லை என்றால் சொத்துக்கள் சேராது மேலும் ஆயுள் குறைவு

9-ம் வீட்டில் இருந்தால் :

தகப்பனாருக்கு உபாதைகளைக் கொடுக்கும் மேலும் தந்தையிடம் நல்ல உறவு இருக்காது. குருவோ அல்லது புதனோ தொடர்பு இருந்தால் சிறந்த பிடிப்பு,, மத விஷயங்களில் நம்பிக்கை உண்டாகும். கடுமை தன்னை அதிகமாக இருக்கும்.

10-ம் வீட்டில் இருந்தால் :

இது மிகவும் சிறந்த இடமாகும் ஆளும் திறமை இருக்கும்.பெரிய பதவிகள் கிடைக்கும். பாராட்டுக்கு மயங்குவர். வேகமானவர். நிறைய செல்வங்கள் , புகழ் என ராஜ அந்தஸ்துடன் இருப்பர்

11-ம் வீட்டில் இருந்தால் :

அதிரடியாக, தெளிவாகப் பேசக்கூடியவர். புத்திசாலியாக இருப்பர். சபலம் உடையவர். தனித்தன்மை வாய்ந்தவராகவும் அதிகாரவர்க்கத்தினருடன் தொடர்புடையவராக இருப்பர். பல இடங்களை வாங்கி சேர்ப்பர். சொத்து சுகம், புகழ், ஆகியவை சிறப்பாக இருக்கும் . பல சிறந்த நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பர்

12-ம் வீட்டில் இருந்தால் :

வெற்றிகள் அடைய முடியாத சூழ்நிலை அமையும் ஏழ்மை தாண்டவமாடும். கண்ணில் குறைப்பாடு ஏற்படும். நேர்மை அற்றவராகவும் சுயநலமிக்கவராகவும் இருப்பர் காரியமற்ற திறமை இருக்காது. பிரபலம் ஆக முடியாது சிலர் தன வாழ்கை துணையையும் செல்வம், பணம் ஆகியவற்றையும் இழக்க நேரிடும்.

குறிப்பு : 2, 4, 7, 8, 12 இருந்தால் செவ்வாய் தோஷம் எனபர்கள். இதை திருமணத்தின போது பார்க்க படுகிறது. (சில ஜோதிடநூல்கள் செவ்வாய்தோஷத்தை ஏற்றுக் கொள்வது கிடையாது ) மேலும் 2, 12 யில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய் தோஷம் என்றும், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய வீடுகளில் இருந்தால் அது எந்த இடமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது என்று மேலும் சில ஜோதிட நூல்கள் கூறுகிறது.
ஆனால் செவ்வாய் 3, 6, 7, 8, 9, 10, 12 இடங்களில் இருப்பது நல்லதில்லை என்றும் அவை செவ்வாய் தோஷம் என்றும் புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது



சந்திரன் 12 வீடுகளில் இருந்தால் பலன்




லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் இருந்தால் :

லக்கினத்தில் சந்திரன் இருப்பது நல்லது. சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கையில் உயர்வு பெறுவர் . சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார். திடீர் பணவரவு உண்டு

2-ம் வீட்டில் இருந்தால் :

சந்திரன் பெண்கிரகமாகியதால் பெண்கள் மூலமாகப் பணவரவு இருக்கும். ஆனால் பணவரவு ஒரே மாதிரி இருக்காது ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். சந்திரன் நன்றாக இருந்தால் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு, சொத்து சுகம், நல்ல கல்வி, புகழ் ஆகியவை உண்டாகும். பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.

3-ம் வீட்டில் இருந்தால் :

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தன்மை உடையவர். சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும், சகோதர சகோதரிகளை ஆதரவையும் , மகிழ்ச்சியான வாழ்க்கை தருவார். 3வது வீடு குறுகிய பயணத்தை குறிப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். ஆனால் சந்திரன் கெட்டால் எதிர்மறையாக சூழ் அமையும் .

4-ம் வீட்டில் இருந்தால் :

சுற்றத்தாரால் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சியுண்டு, பகையும் உண்டு. மகிழ்ச்சியான வாழ்வு அமையும் சிற்றின்பங்களில் பிரியம் அதிகமாக இருக்கும் . சந்திரன் ஓர் நீர்க் கிரகமாதலால் வீட்டிலே நீர் வசதியுண்டு அல்லது ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். தாய்வழிச்சொத்து கிடைக்கும் ஆனால் தாய்க்கு நல்லதுல்ல. பிறருக்கு கொடுக்கும் குணம் உண்டு

5-ம் வீட்டில் இருந்தால் :

பணம் பல வழிகளில் வரும். சிறப்பான குழந்தை பாக்கியம் உண்டு. அதிக பெண் குழந்தை பாக்கியம் அமையும். நல்ல அறிவு ஆற்றல், அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார்.

6-ம் வீட்டில் இருந்தால் :

குழந்தைப் பருவத்தில் அல்லது இளம் வயதில் அடிக்கடி நோயுற்ற மகிழ்ச்சி குறைந்து காணப்படும் அதே இடத்தில் சந்திரன், செவ்வாய் அல்லது சனியின் சேர்க்கை அல்லது பார்வைபெற்றிருந்தால் தீராத நோய்கள் இருக்கும். விரோதிகள், எதிரிகள் இருப்பர். பிறருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.

7-ம் வீட்டில் இருந்தால் :

காமம் மிகுந்து இருப்பார். வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அழகாக இருப்பார். துணைவர் அல்லது துணைவி பண வரவு உண்டு. மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்

8-ம் வீட்டில் இருந்தால் :

நீரில் கண்டம், கப நோய், ஆகியவை ஏற்படும். சந்திரன் மனதுக்குக் காரகன் எனவே மனபிராந்தி, மனது சம்மந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். தாயாரால் நன்மைகள் மிகவும் குறைவாக இருக்கும். பூர்விக சொத்துக்கள் எளிதாக கைக்கு வந்து சேரும். சந்திரனுடன் செவ்வாயும், சனியும் சேர்வார்களேயாகில் கண்பார்வை பாதிக்கப்படும்.

9-ம் வீட்டில் இருந்தால் :

நல்ல மனம் படைத்த தாயார் அமைவர். ஆனால் இங்கு செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் தாயாருக்கு காயம்படும் மேலும் தாயாரை கடும் வார்த்தைகளால் பேசுவர். புத்திரபாக்கியத்துடன் செல்வத்துடன் நல்ல பாக்கியசாலியாக இருப்பர். புத்திரபாக்கியம் இருக்கும். சங்கீதம், நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும் .

10-ம் வீட்டில் இருந்தால் :

இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் உடையவராக இருப்பர். தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வர். புத்திசாலியாகவும் துணிச்சல் மிக்கவராக இருப்பர். செய்தொழில் வெற்றி, பகைவரிடம் வெற்றி காண்பர் உதவி செய்யும் மனப்பான்மையும், தர்ம சிந்தனையுடன் இருப்பர். சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால் வேதாந்தங்களிலும், ஜோதிடத்தில் சிறந்து விளங்குவர் நீண்ட ஆயுள் உண்டு பல அறக்கட்டளைகளைத் தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் அமையும் .

11-ம் வீட்டில் இருந்தால் :

மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை பெறுவர். செய்யும் தொழில் மேன்மை அடைவர். தொழில் வணிகமாக இருந்தால் நல்ல லாபம் சம்பாதிப்பர் எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமை உடையவர். நல்ல தீர்க்காயுள் உண்டு. வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்

12-ம் வீட்டில் இருந்தால் :

இந்த இடம் நல்லதுல்ல . பாதங்களில் வலி, கண் பார்வை குறைபாடு இருக்கும் சிலர் கொடுர சிந்தையுடன் மகிழ்ச்சியில்லமல், அதிகாரமில்லமல் தடைகளை அதிகமாகப் பெறு மதிப்பு இழந்த வாழ்க்கை வாழ நேரிடும். குறுகிய மனப்பான்மை, கடின மனம், குறும்புத்தனம், நக்கல் மிகுந்தவராக இருப்பர்.

குறிப்பு :
பொதுவாக சந்திரன் 6,8 தவிர்த்து எந்த வீட்டிலும் தீய கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் நல்லது என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது.



Tuesday, May 5, 2020

குரியன் 12 வீடுகளில் அமர்ந்தால் பலன்



லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :

(அதாவது லக்கினத்தில்) கோபக்காரர். சிலர் சோம்பல் உடையவர். துணிச்சல் உடையவராக இருப்பர் தங்களைப் பற்றிய உயர்வு மனப்பான்மை உடையவர் இரக்க சிந்தனை, பொறுமை குறைவாக இருக்கும். காரிய வெற்றி உண்டு. மத்திம வயதில் கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படு வாய்ப்பு உண்டு. நல்ல உடல் அமைப்பு இருக்கும்

2 -ம் வீட்டில் இருந்தால் :

2-ம் வீட்டில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல: கஷ்டத்தின்பேரில்தான் பணம் சம்பாதிக்க முடியும். நல்ல கிரகங்கள் பார்வை இருந்தால்தான் பண வரவு சரளமாக இருக்கும்.
கல்வியில் தடை, முரட்டு குணம், பொருள் சேதம் , வாழ்க்கை துணையோடு எப்போதும் ஒரு மனவருத்தம் என்று இருக்கும்.(மேஷம், சிம்மம் போன்ற ராசிகளாக இருந்தால் நன்மையான பலன்கள் ஏற்படும்)

3-ம் வீட்டில் இருந்தால் :

உடல் உறுதியுடன், வசீகரமான தோற்றத்துடன் இருப்பர் தியாக மனப்பான்மை,அதீத துணிச்சல், எதிரிகளை வெற்றிக் கொள்ளும் திறமை உடையவராக இருப்பர் உறவுகள் ,இளைய சகோதர உறவுகள் சிறப்பாக இருக்காது. சிறந்த பொருட் சேர்க்கையும் உண்டாகும்

4 -ம் வீட்டில் இருந்தால் :

பிதுராஜித சொத்துக்கள் கிடைக்க வழியுண்டு. வேதாந்தத்திலும், மற்றும் புதிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு. சிலருக்கு இதய பாதிப்பு, மன அமைதி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் சிலருக்கு தீய நண்பர்களின் சகவாசத்தால் தனது முன்னோர்களின் சொத்துக்களை இழக்க நேரிடும்.

5-ம் வீட்டில் இருந்தால் :

மிகுந்த அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் மிக்க நபராக இருப்பார். எந்த ஒரு தீமையான விஷயங்களையும் எதிர்த்து போராடி வெற்றி பெறக்கூடியவராவார். இயற்கை மிகுந்த இடங்களுக்கு உதாரணத்திற்கு காடுகளில் பயணம் செல்லக்கூடிய அமைப்பும் விருப்பமும் இருக்கும்.பொருளாதார நிலை சாதாரணமாகவே இருக்கும். மகன்களுடன் உறவு சுமுகமாக இருக்காது

6-ம் வீட்டில் இருந்தால் :

எதிரிகளால் சில தொல்லைகள் உண்டு ஆனால் அதை எதிர்த்து போராடி வெற்றி பெறக் கூடிய திறமையும் இருக்கும். ஆரோக்கியமான உடலையும், சிறந்த செரிமான சக்தியையும் இருக்கும். சிலருக்கு அரசாங்கத்தால் கவுரவிக்கப்படக்கூடிய அமைப்பும் இருக்கும். சிலர் சிறந்த அரசியல்வாதியாக இருப்பார் . எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பார் . ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவுகள் ஏற்படும். சூரியனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து கூட்டாக இருந்தால் நீண்ட, தீர்க்க முடியாத வியாதிகள் உண்டாகும்.
சூரியனுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்திருந்தால் அல்லது பார்த்தால், ஜாதகன் நிர்வாகத் திறமை உள்ளவனாகவும் செல்வந்தனாக இருப்பார் சூரியன் சனியின் பார்வை பெற்றால், இதய நோய்கள் உடையவராகவே அல்லது மத்திமத்தில் இதய நோய்கள் உண்டாகுவதற்கு வாய்ப்பு உண்டு

7-ம் வீட்டில் இருந்தால் :

திருமண வாழ்க்கை சுகப்படாது. பெண்களுக்கு இருந்தால் இந்த மனக்கசப்பு விவாக ரத்து வரைக்கும் போய்விடும். பெண்கள் மீது அதிக மோகங்கொண்டவராகவும், அதன் காரணமாக பல பிரச்சனைகளை அவர் சந்திக்கக்கூடிய நிலை ஏற்படும்.சாதாரணமான மற்றும் முன்னேற்றம் இல்லாத வாழ்க்கை அமைய பெறுவார் .சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று பொருளீட்டும் வாய்ப்புகள் வரும். உடல் நல குறைவு ஏற்படும்.

8-ம் வீட்டில் இருந்தால் :

8-ம் வீடு மறைவு ஸ்தானமாதலால் நல்லதுல்ல . ஆயுள் குறைவு, அரசாங்கத்திடமிருந்து உதவியின்மை, தகப்பனாருக்குத் தோஷம், கண் நோய், மனக் குழப்பம், செலவு ஆகியவை ஏற்படும். பல சூழ்நிலைகளில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையில் விரத்தி ஏற்படும். கண் பார்வை சம்மந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்படும்.

9-ம் வீட்டில் இருந்தால் :

சூரியனும் , 9ம் வீடும் தகப்பனாரைக் குறிக்கிறது. பொதுவாக ஒரு கிரகம் எதற்குக் காரகம் வகிக்கிறதோ அந்தக் காரகத்தைக் குறிக்கும் வீட்டில் அந்த கிரகம் இருப்பது நல்லது அல்ல. இது பிதுர்தோஷம் ஆகும். எனவே தகப்பனாருக்கு நல்லது அல்ல. சூரியன், புதன் சேர்ந்து இருந்தால் படிப்பில் வல்லவர்களாக இருப்பர்.புத்திர பாக்கியம் , செல்வம், உறவினர்கள் பெற்று இருப்பர். சிலருக்கு பெரியவர்களிடம் மரியாதை மற்றும் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு இருக்கும் . மேலும் சிலர் தர்மம் இல்லாமல் தவறான அறிவியலாளராக இருப்பர்.

10-ம் வீட்டில் இருந்தால் :

சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். மேலும் அவர் தொட்டதெல்லாம் துலங்கும். எடுத்துச் செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய தச அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும். உயர்கல்வி , தந்தை வழி செல்வம் ஆகியவை அமைய பெறுவர். உடல் மற்றும் மனோ பலமிக்கவராக , விரமிக்கவராகவும் இருப்பர் . சிலருக்கு வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய யோகம் உண்டு.

11-ம் வீட்டில் இருந்தால் :

அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும். செல்வத்துடன் நல்ல கல்வி அறிவுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர். மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று வசதியான வாழ்க்கை அமைய பெறுவார் கொள்கைக் குன்றாக இருப்பான். இவர்களுக்கு கீழ் வேலை செய்கிறவர்களின் திறனால் இவருக்கு பேரும், புகழும் கிட்டும். ஒரே நேரத்தில் பல விதமான தொழில்களில் ஈடுபட்டு அதில் மிகுந்த செல்வத்தை ஈட்டுவார். சமூகத்தால் மதிக்கப்படக்கூடிய நிலைக்கு உயர்வர் . சிலருக்கு அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்

12-ம் வீட்டில் இருந்தால் :

இது நல்லதுல்ல . இளமையில் அல்லது முதுமையில் ஏழ்மை நிலையை அமையும். மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு திருட்டு எண்ணம், மற்றும் பாவங்களைச் செய்யக்கூடியவராக மேலும் ஒழுக்கமற்ற, கெட்ட, பாவகரமான வாழ்க்கை வாழ நேரிடும். தோல்விகளை அதிகமாகச் சந்திப்பர். இழிவான செயல்கள் அல்லது வேலைகளில் ஈடுபவர். உடல் உறுப்பில் ஊனம் இருக்க வாய்ப்பு உள்ளது. சுறுசுறுப்பானவராக இருப்பர் . ஆனால் சுப கிரகம் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் நல்ல பலனை தரும் . இது பொது பலன் மட்டும் தான் . குழப்பம் வேண்டாம்

குறிப்பு : பொதுவாக சூரியன் 3,6,10,11 ல் இருந்தால் நல்லது என்றும் 2,3,4,7,5 ஆகிய இடங்களில் இருந்தால் உடலில் நோய் பாதிப்பு, பகை வரும் என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது.



Monday, May 4, 2020

12ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்




பன்னிரண்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:

    • ஜாதகன் மெலிந்த தேகத்துடன் அழகான தோற்றதுடனும் மனதில் துணிவின்றி இருப்பர் .
    • சிலருக்கு நல்ல உணவு, சிரமங்கள் இல்லாத வேலை, நல்ல நித்திரை, நல்ல செலவு செய்து வசதி வாய்ப்புகள் பெற்று வாழ்வர்
2 ம் வீட்டில் இருந்தால்:
    • தன ஸ்தானத்தில் 12ம் அதிபதி இருந்தால் பலமுறை பல இடங்களில் பண விரையம் கடன் தொல்லைகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் அவதிப்பட்டு வாழ்வர்
    • தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வர்
    • தேவையில்லாத பேச்சுகளை பேசுவர் மேலும் பேச்சிற்க்கு மதிப்பு இருக்காது
    • சிலருக்கு கண் பார்வை கோளாறு ஏற்படும்
3 ம் வீட்டில் இருந்தால்:
    • இளைய சகோதர சகோதரிகளாலும் , நண்பர்களாலும் செலவு ஏற்பட்டு சொத்துகளை இழப்பர்.
    • சிலர் இளைய சகோதர சகோதரியை இழக்க நேரிடலாம்.
    • சிலர் கோழையாகவும், அதிகம் பயப்படுபவனாகவும் இருப்பர்
    • எப்பொழுதும் அழுக்கான தோற்றத்துடன் திரிபவனாக இருப்பார்
4 ம் வீட்டில் இருந்தால்:
    • சிலர் சிறுவயதிலே தாயை இழக்க நேரிடும்
    • சொந்தங்களால் , நண்பர்களாலும் செலவு போன்று குடும்ப செலவினங்கள் அதிகமாக இருக்கும். பொதுவாக குடும்ப செலவு அதிகமாகும்.
    • மனப் போராட்டங்கள் நிறைந்து தேவையில்லாத கவலைகளுடனும் உறவினர்களில் விரோதத்துடனும் குடியிருக்கும் இடங்களில் வீட்டு சொந்தக்காரர்களால் தொல்லையுடனும் வாழ்க்கை அமையும்
    • ஆனால் போஜன (சாப்பாடு) சுகம், சயன (தூக்கம்) சுகம் அதிகமாகும்
5 ம் வீட்டில் இருந்தால்:
    • குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும் அல்லது குழந்தைகளால் பிரச்சினை இருக்கும்.
    • மிகுந்த இறைபக்தி உடையவராகவும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பர் .
    • சிலருக்கு மூத்த சகோதரர்கள் , தேவாலய தரிசனங்கள் , திருப்பணிகள், பெரிய மனிதர்கள்,பிள்ளைகள் மூலம் விரயம் ஏற்படும்.
6 ம் வீட்டில் இருந்தால்:
    • எப்போதும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், செழிப்புள்ளடனும், எல்லா வசதிகளும் நிறைந்து இருப்பர்
    • ஆரோக்கியமாகவும், அழகான தோற்றமுடையவனனகவும் இருப்பர்
    • எதிரிகளின் தொல்லை இருக்காது மேலும் எதிரிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்கும்
    • சிலசமயம் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக அமையும்.
    • தகாத செயல்களை செய்ய நேரிடும் .
7 ம் வீட்டில் இருந்தால்:
    • வாழ்க்கை துணை மற்றும் பெண்கள் வழியில் அதிக செலவினங்கள், ஜாதகர் ஆண்ணாக வறுமையில் வளர்ந்த மனைவி மகிழ்ச்சி அற்ற திருமண வாழ்க்கை அமையும்
    • சிலர் உடல் உபாதைகளாலும், காம சம்மதப்பட்ட உணர்வுப் போராட்டங்களாளும் செலவினங்கள் ஏற்படும்.
    • எதையும் கற்கும் ஆர்வம் இருக்காது . மேலும் சிலருக்கு சொத்து சுகங்களும் இல்லாமல் போகும்
8 ம் வீட்டில் இருந்தால்:
    • செல்வந்தனாகவும் மக்களால் அறியப் பட்டவனாகவும் பல வேலையாட்கள் வேலை செய்ய சௌகரியமான வாழ்க்கை வாழ்வர்
    • சித்தாந்தங்கள் வேதாந்தங்களில் ஆர்வமுடையவராகவும் தர்ம சிந்தனைகள் உடையவராகவும் இருப்பர்
    • வழக்குகளால் செலவு, உடல் சௌரியங்களால் செலவுகள் ஏற்படலாம்
9 ம் வீட்டில் இருந்தால்:
    • சிறுவயதிலே தந்தையை பறிகொடுக்கவோ அல்லது விற்கவோ நேரிடும் அல்லது தந்தையால் செலவுகள் ஏற்படும்.
    • சகோதர சகோதரியால் நஷ்டங்கள் செலவுகள் ஏற்படும்.
    • வெளிநாட்டில் வாழ்ந்து, அங்கே சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவாராகவும் நேர்மையுடையவராகவும் இருப்பர்
10 ம் வீட்டில் இருந்தால்:
    • கடின உழைப்பாளி, வேலையின் பொருட்டு கடினமான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
    • சிறைக் காவலர் வேலை, மருத்துவத் துறையில் வேலை மாயானங்களில் வேலை செய்ய நேரிடும்.
    • செய்யும் தொழில் முடக்கம், மிக குறைந்த வருமானம், செய்யும் தொழிலை விட்டு ஆகியவை ஏற்படலாம்
11 ம் வீட்டில் இருந்தால்:
    • மூத்த சகோதரர்கள் , தேவாலய தரிசன வழிபாடுகள், தான தருமங்கள் ஆகியவற்றால் நஷ்டமும் செலவும், தொல்லைகளும் ஏற்படும்.
    • வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபட்டு குறைந்த வருமான ஈட்டுவர்
    • குறைந்த நண்பர்களும் அதிக எதிரிகளும் பெற்று இருப்பர்
12 ம் வீட்டில் இருந்தால்:
    • தர்ம செலவுகள் செய்வாராக இருப்பர் உடல் நலமின்மையால் செலவுகள் ஏற்படும்.
    • கண் பார்வை நன்றாக இருக்கும். நல்ல நித்திரை சுகம் ஏற்படும்.
    • சிலர் ஓய்வு ஒழிச்சல் இல்லாதவனாகவும், எப்போதும் எங்கேயாவது சுற்றித் திரிந்து கொண்டே இருப்பார்கள்
மேலும் இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும். கிரக நிலை அதாவது உச்சம், நீசம் , பகை நட்பால் பலன்கள் மாறுபடலாம்.அதனால் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.




11ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்




பதினொன்றாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:

    • அதிகம் படித்தவராகவும், சாதுர்யமாகப் பேசும் திறனுடையவராகவும் செல்வத்துடனும், செல்வாக்கு இருப்பர்.
    • எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவர்
    • குடும்பம்செல்வத்துடன்செல்வாக்குடன்விளங்கும்
    • முத்த சகோதர சகோதிரிகள் நல்ல சுக சௌகரிங்களுடன் இருப்பார்கள்
    • அதிகம் படித்தவர்களாவும் சாதுர்யமாகப் பேசுபவராகவும் இருப்பார்கள். எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் கிடைக்கும்
2ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல குடும்ப வாழ்க்கை, நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் , கெளரவம், நல்ல தேஜஸ் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக வாழ்வார்
    • வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக வாழ்வார்கள்
3ம் வீட்டில் இருந்தால்:
    • மூத்த சகோதர சகோதரிகளில் நல்ல நிலையில் இருப்பார்கள் .மேலும் அவர்களின் ஆதரவு பெற்று வாழ்வர்.
4ம் வீட்டில் இருந்தால்:
    • குடும்பம் பூரணபலத்துடன் விளங்கும். நேர் வழியில் சென்று சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அனுபவிப்பர்
    • வீடு, வண்டி வாகனங்களுடனும், பணிஆட்களுடனும் செல்வாக்குடனும் விளங்குவார்கள் . .
    • தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்
5ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும், நல்ல வருமானத்துடன் குடும்பம் விளங்கும்
    • தந்தையின் தொழிலையே பிள்ளைகளும் செய்து பிரபல செல்வந்தராக விளங்குவார்கள். மேலும் அரசாங்க ஆதரவு கிடைக்கும்
6ம் வீட்டில் இருந்தால்:
    • எதன் மூலம் லாபம் கிடைத்தாலும் கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்கும் நிலை ஏற்படும். செய்யும் தொழில் லாபத்தை விட கடனே அதிகமாகும்
    • செய்கின்ற தொழிலில் எதிரிகள் இருப்பர் மேலும் அவர்களால் பல இடைஞ்சல்களை சந்திக்க நேரிடும்
7ம் வீட்டில் இருந்தால்:
    • வாழ்க்கை துணை மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.
    • திருமணம் பிறகு நல்ல யோகமான வாழ்க்கை அமையும்
    • பதவிகள் ,நல்ல யோகங்கள் , வண்டி வாகனமங்கள் சிறப்பாக அமையும்.
    • புத்திரர்களால் குடும்பம் பிரகாசத்துடன் விளங்கும்
8ம் வீட்டில் இருந்தால்:
    • பல தொழில்கள் செய்ய முயன்று பல வழியில் பணம் செலவு செய்ய செல்வத்தை இழந்து கஷ்டத்துடனும் சஞ்சலத்துடனும் வாழ்வர்
    • மூத்தோர் மரணம் உண்டாகலாம்

9ம் வீட்டில் இருந்தால்:
    • தந்தையின் தொழிலை மிக சிறப்பாக செய்து பலவிதமான பொருள்கள் மற்றும் லாபங்களை அடைவர்
    • அரசாங்கத்தில் நல்ல பெயர், வண்டி வாகனங்கள் சிறப்பான வாழ்க்கை அமைய பெறுவர்
10ம் வீட்டில் இருந்தால்:
    • கெளரவமான நல்ல வேலையுடன் , கைநிறைய சம்பாத்தியம்,தெய்வீக அருள் ஆகியவை நிறைந்து அமைதியான குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர்
    • தெய்வீக வழிபாடுகள் நிறைந்து இருக்கும்

11ம் வீட்டில் இருந்தால்:
    • மூத்த சகோதர்கள் நல்ல அந்தஸ்தோடு இருப்பர் ஆனால் இவருக்கு பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.
    • வயதான காலத்தில் தனவந்தராக இருப்பர்

12ம் வீட்டில் இருந்தால்:
    • செய்யும் தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும் மேலும் பொருள் விரையம், கடன் தொல்லைகள் ,வியாதிகளுடன் இருப்பர்
    • போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும் இருந்தாலும் மன அமைதி இல்லாமல் இருப்பர்
மேலும் இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும். கிரக நிலை அதாவது உச்சம், நீசம் , பகை நட்பால் பலன்கள் மாறுபடலாம்.அதனால் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.



10ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்




பத்தாவது வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
10ம் வீடு தொழில் ஸ்தானம் எனவே நாம் என்ன தொழில் செய்வோம் அல்லது செய்யலாம் என்பதையும் கணிக்க இந்த வீடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலைக் கணிக்க மேலும் சில வழிமுறைகள் உண்டு.
1 ம் வீட்டில் இருந்தால்:

    • சொத்துக்கள், செல்வம், அதிகாரம், செல்வாக்கு, சுக சௌரியங்கள், கல்வி தெய்விகவழிபாடுகள், தான தருமங்கள், அரசாங்கத்தில் உயர் பதவி முதலியவைகளுடன் இருப்பார்கள்
    • சுயமுயற்சியால் கடின உழைப்பாளியால் தீவிரமாக தொழில் செய்து முன்னேற்றம் காண்பர்.
    • இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு கிடைக்க பெறுவர்.
    • நற்பெயருடன் சொந்தங்கள், நண்பர்கள், அறிவாளிகளின் நட்பையும் பெற்று இருப்பார்கள்
    • தொழில்கள்: சுய வேலைவாய்ப்பு, அரசியல் அல்லது பொதுமக்கள் சம்மந்தப்பட்ட தொழில், Health Club போன்ற உடல் சம்மந்தபட்ட வேலைகள்
2 ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல அழகுடனும் வாக்குவன்மை, திறம்பட பேசும் சக்தி, தைரியம் , செல்வ செழிப்புடனும் மிகவும் அதிஷ்டத்துடனும் இருப்பர் .
    • குடும்பத் தொழிலை பெரிய அளவில் செய்யுது குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை அடைவர்
    • தொழில்கள்: வங்கி, முதலீடுகள், கணக்காளர்கள், உணவகங்கள், கற்பித்தல், ஆலோசகர்கள், உளவியலாளர்கள்
3 ம் வீட்டில் இருந்தால்:
    • சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் இருந்தாலும் செல்வாக்குடன் இருக்கமாட்டார்கள்.
    • சிலர் பகுதி நேர வாழ்க்கை பயணங்களிலே கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும்.
    • ஆனால் இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்
    • தொழில்கள்: Communication (தொடர்பு), கலை, விற்பனை, விளம்பரம், கணினி, எழுதுதல், வெளியீடு(Publishing)
4 ம் வீட்டில் இருந்தால்:
    • பெரிய மதிப்புள்ள அழகான வீடு, கட்டடிங்கள் , வண்டி வாகனங்கள், பணி ஆட்கள், செல்வ செழிப்பான வாழ்க்கை, தாய் மற்றும் தாய் வழி ஆதரவு முதலியன உண்டாகும்
    • பலராலும் மதிக்கப்பட்டு தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாகவும் உதாரண மனிதராகவும் இருப்பர்
    • தொழில்கள்: விவசாயம், கட்டிட வர்த்தகம், ரியல் எஸ்டேட், வாகனங்கள், நீர், புவியியல் மற்றும் சுரங்கம் போன்ற வேலைகள்
5 ம் வீட்டில் இருந்தால்:
    • மகிழ்ச்சி, செல்வாக்குவுடன் கூடிய வாழ்க்கை, பெரியமனிதர்களின் நட்பையும் அரசாங்கத்தில் உயர் பதவிக பெற்று இருப்பார்கள்.
    • புத்திரபாக்கியம், சந்தோசம் செல்வாக்கு கூடிய குடும்பம், பெரிய மனிதர்களின் நட்பு அமையும்
    • மறைமுக எதிரிகளும் இருப்பர். மேலும் அவர்கள் முன்னேற்றத்திற்கு தடைகள் ஏற்படுத்துவர் .
    • தொழில்கள்: அரசியல், பங்கு தரகர்கள், மத சடங்குகள் செய்பவர்கள், பொழுதுபோக்கு சம்மந்தபட்டதொழில்
6 ம் வீட்டில் இருந்தால்:
    • தந்திர புத்தியுடன் பிறர் பொருளை அபகரிக்கும் குணம் இருக்கும்.
    • உடம்பு மெலிந்தாக காணப்படுவர்கள். நல்ல உடல் அமைப்பு , அந்தஸ்து இல்லாதவராக இருப்பார்கள்
    • சுபலன் எனில் பொறுப்பான பதவிகள் வந்து சேர்வதுடன் நடுநிலையாளர் என்று பெயர் பெற்று பலரின் மதிப்பையும் பெறுவர்
    • அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும்.
    • தொழில்கள்: வக்கீல்கள், ராணுவம், போலீஸ், சாதாரண பணியாளர்கள் (like Labour, Waiter), சுகாதாரம் மற்றும் உணவு தொடர்பான தொழில்கள்
7 ம் வீட்டில் இருந்தால்:
    • 10க்குடையவன் 7ம் வீட்டில் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். ஆனால் ஆண் ஆக இருந்தால் மனைவி மூலம் பொருள் சேரும்
    • சிலருக்கு தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பர்.அதுவே அவருடைய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும்.
    • தொழில் நிமித்தமாக அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புஅமையும்
    • தொழில்கள்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் (Trading, mechant, Foreign business)
8 ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல ஆயுள் உண்டு. புத்திர தோஷம் ஏற்படும்.
    • தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும்.
    • திறமைசாலிகளாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பர்
    • தொழில்கள்: காப்பீடு,ஆராய்ச்சி, இறப்பு தொடர்பான, ஜோதிடம் போன்ற தொழில்கள்
9 ம் வீட்டில் இருந்தால்:
    • தகப்பனார் சொத்துக்கள் விரயம் ஆகும். சுப பலன் எனில் தந்தையின் உதவியும் வழிகாட்டுதலும் நிறைந்திருக்கும்.
    • அரசாங்க ஆதரவு, பெரிய மனிதர்களின் நட்பை பெறுவார்கள் ய்வர்.
    • தானதருமங்களிலும் ஆன்மீக வாழ்விலும் ஈடுபாடு மற்றும் தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பர்
    • பிற்கால வாழ்க்கை சிறப்புடன் இருக்கும்
    • தொழில் : சட்டம் சம்மந்தபட்ட தொழில், பல்கலைக்கழக ஆசிரியர் கற்பித்தல், பயணம், மதத் தொழில்கள் (மத போதகர்), வெளிநாட்டு வேலை
10 ம் வீட்டில் இருந்தால்:
    • உலக விஷ்யங்களை அறிந்தவராக இருப்பார்கள்
    • பெரிய மனிதர்களின் ஆதரவு ,உறவினர்களின் ஆதரவு, உலக விசயங்களில் நல்ல அறிவு இருக்கும்.
    • தொழில்: அரசியல் மற்றும் அரசாங்க வேலைகள், பொதுமக்கள் மற்றும் வெகுஜனங்களுடன் கையாள்வது போன்றதொழில்கள், மேலாளர்கள் (Manager)
11 ம் வீட்டில் இருந்தால்:
    • செய்யும் காரியங்களில் ஒவ்வொன்றிலும் லாபத்தை பெறுவர்
    • முத்த சகோதர சகோதரிகளுக்கு சிரமமும் மாரகமும் ஏற்படலாம்
    • பணத்துடன், மதிப்பும், மரியாதையுடன் மகிழ்வுடன் இருப்பர்
    • நல்ல நோக்குடையவர்களாகவும் பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்
    • தொழில்கள்: வணிகம் மற்றும் வர்த்தகம், விளையாட்டு சம்மந்தபட்ட வேலை (Sports), கணக்காளர்கள் (Accountants)
12 ம் வீட்டில் இருந்தால்:
    • பொருள் நஷ்டம் , புத்திரர்களால் கஷ்டங்கள், அனாவசியமான செலவுகள் , சொத்துக்கள் விரயம் போன்றவை இருக்கும்
    • சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும்
    • தொழில்கள்: வெளிநாட்டில் ரகசியம் செய்யும் வேலைகள் (foreign jobs requiring secrecy), பயணங்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், தொண்டு நிறுவனங்கள்
மேலும் இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும். கிரக நிலை அதாவது உச்சம், நீசம் , பகை நட்பால் பலன்கள் மாறுபடலாம்.அதனால் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.



9ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





ஒன்பதாவது வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
(ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும்.)
1ல் இருந்தால்:

    • பெரியவர்களிடமும், குரு, தெய்வம் ஆகியோரிடம் நம்பிக்கையுடையவராக இருப்பர். மேலும் அவர்களிடத்து பக்தியும் விசுவாசமும் கொண்டவர்களாக இருப்பர்கள்.
    • தெய்வ நம்பிக்கையோடும் தான தருமங்கள் செய்பவராகவும் இருப்பர்கள்.
    • பிதுர் சொத்துகள் கிடைக்கும்.
    • வீடு , வண்டி , சமுதாயத்தில் பெரிய பதவி, சந்தோஷ சௌகரியங்கள் , புத்திர விருத்தியுடன் வாழ்வார்கள்
2 ம் வீட்டில் இருந்தால்:
    • அயல் நாட்டுத் தொடர்பு மூலமாகயும் தகப்பனாரின் மூலமாகவும் பணவரவு இருக்கும்.
    • ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பர். மேலும் அவருடைய சொத்துக்கள் கிடைத்து சிறந்து வாழ்வர்
    • செல்வம் செல்வாக்குடன் பூர்விக சொத்துக்கள் பெற்று உயர்ந்த நிலையுடைய குடும்பத்தை பெற்று இருப்பர்கள்
3 ம் வீட்டில் இருந்தால்:
    • இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவும் அன்பும் உள்ளவனாக இருப்பர்
    • நன்றாக எழுதக்கூடிய திறமை இருக்கும்
    • பிதுர் தோஷம் பெற்றவராகவும் பிதுர் சொத்துக்களை இழப்பார்கள்.
    • இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவை பெற்று இருப்பார்கள்
4 ம் வீட்டில் இருந்தால்:
    • தாய் தகப்பனார் ஆதரவுடன் நல்ல செல்வாக்கு பெற்று வண்டி வாகன வசதியுடன் இருப்பர்
    • மேலும் வண்டி வாகனங்கள் , வீடு மனைகள், பணி ஆட்கள், உறவினர்களின் ஆதரவு பெற்று இருப்பார்கள்
5 ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திரர்கள் சகல செளபாக்கியத்துடன் இருப்பர். புத்திரகளால் பிரபல யோகங்கள் அமைய பெறுவார்கள்
    • தெய்வீக வழிபாட்டினால் குடும்பம் பிரகாசமாக இருக்கும்
    • மொத்தத்தில் அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய வாழ்க்கை வாழ்வர்
    • அரசாங்கத்தில் பெரிய பதவி, சொத்துக்கள், வண்டி வாகனங்கள், பணி ஆட்களுடன் நிறைந்த குடும்பத்துடன் பிரகாசமாக வாழ்வார்கள்
6 ம் வீட்டில் இருந்தால்:
    • சிலருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்கு யோகமுண்டு. அதாவது உத்தியோக சம்மந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுவரும்.
    • தகப்பனார் உடல் நிலை பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும் தந்தையின் சொத்துக்களை போராடி பெறுவர் தந்தையார் சொத்தை மற்றவர் அபகரிப்பார்கள்
    • சிலருக்கு புத்திர தோஷம் ஏற்படும்

7 ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல வாழ்க்கை துணை அமையும் . ஆண் ஆக இருந்தால் குடும்பத்திற்கு அடக்கமான லக்ஷ்மிகரம் பொருந்திய நல்ல தெய்வபக்தியுள்ள மனைவி அமைவார்கள் மேலும் அந்நியத்தில் வாழ்க்கை துணை அமையும்
    • புத்திர சந்தானங்களால் சௌரியங்கள் நிறைந்தது இருக்கும்
    • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
    • தந்தையின்சொத்துக்களாலும், பிற்காலத்தில் தன் பிள்ளைகளின் சம்பாத்தியத்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய பெறுவர் .
    • வெளிநாடு சென்று, பெரும் பொருள் ஈட்டி செளகரியமாக வாழ்வார்கள்.
8 ம் வீட்டில் இருந்தால்:
    • தந்தைக்கு கண்டம் தந்தையாரின் உடல் நிலை பாதிக்ககூடும். சில அங்கஹீனமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • தந்தையின்சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும்.
9 ம் வீட்டில் இருந்தால்:
    • தகப்பனார் நீண்ட ஆயுளுடன் இருப்பார் மேலும் தகப்பனாரின் சொத்துகள் கிடைக்கும்.
    • தான, தருமங்களும், தெய்வீக வழிபாடுகளும் நிறைந்து குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்
10 ம் வீட்டில் இருந்தால்:
    • அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பர் மேலும் சிலருக்கு அமைச்சர் பதவி போன்ற சிறப்பான பதவிகளும் கிடைக்கும்
    • தந்தையாரின் சொத்துக்கள் விருத்தி ஆகும்.
    • பெரியவர்களிடத்தில் மரியாதையாக இருப்பர்
    • செல்வாக்குடைய குடும்பம்,தான தர்மம் செய்யும் குணம் , சொத்து சுகத்துடன் சிறப்பாக வாழ்வார்கள்
11 ம் வீட்டில் இருந்தால்:
    • தகப்பனாரால் லாபம் கிடைக்கும்.
    • குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து இருக்கும். மேலும் தெய்வகாரியங்கள் வீட்டில் நடைபெறும்
    • அயல் நாட்டுத் தொடர்பு மூலம் லாபம் அமையும்
    • செல்வாக்கும், அதிகாரமுமுள்ளபல நண்பர்களை உடையவனாக இருப்பர் .
12 ம் வீட்டில் இருந்தால்:
    • தந்தையாருக்கு கெடுதல் மற்றும் வெளிநாட்டு பயணம் உண்டு
    • பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க நேறிடும்.
மேலும் இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும். கிரக நிலை அதாவது உச்சம், நீசம் , பகை நட்பால் பலன்கள் மாறுபடலாம்.அதனால் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.



8ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





எட்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்

1ம் வீட்டில் இருந்தால்:

    • துரதிஷ்டசாலியாகவும், .உடல் மிகவும் பலகீனமாகவும் கடன் வறுமை வியாதிகளுடன் இருப்பர். சுப பார்வை பெற்றால் நீண்ட ஆயுள் உண்டு.
    • அசுப பலன் பெற்றால் தீர்க்கமான வறுமை வியாதி, மரண விபத்து உண்டாகும்.
2ம் வீட்டில் இருந்தால்:
    • பலவிதமான தொந்தரவுகள் மற்றும் கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருக்கும்.
    • குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருக்கும்.
    • செல்வத்தை எந்த நோக்கும் இன்றி செலவுகள் செய்வார்கள். கல்வியில் ஊக்கம் இருக்காது.
    • வாக்கில் நாணயம் இருக்காது. துர்வார்த்தை உபயோகிப்பர்
3 ம் வீட்டில் இருந்தால்
    • காது சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கும்
    • சகோதரர்களுடன் மனஸ்தாபங்களும், சண்டையும் ஏற்படும்.
    • தைரியம் குறைந்து ஒருவித பயம் மனதில் இருக்கும்
    • பெரியவர்கள் சேர்த்த சொத்துக்கள் பல விதங்களில் நாசம் ஆகும்
4 ம் வீட்டில் இருந்தால்:
    • மனதின் நிம்மதி இல்லாமல் . பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளுடன் வாழ்ககை இருக்கும் .
    • தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு, தாயார் மற்றும் தாய் வழி சொந்தங்களின் ஆதரவு இன்மை ஆகியவை இருக்கும்
    • குடும்பத்தில் சதா சண்டை சச்சரவுகள் இருக்கும். சிரம்மாக குடும்பத்தை நடத்த வேண்டியது வரும்.
    • பூர்விக சொத்துக்கள் மற்றும் சம்பாத்தித்த சொத்துக்கள், பொருட்கள் நஷ்டமாகும்
    • வீடு இடிந்து விழுதல், வண்டி வாகனங்களால் எதிர்பாராத விபத்துகள் அதனால் சுகஹீனம் ஏற்படும்
    • சுப கிரகங்கள் பாரத்தால் கஷ்டம் குறையும்
5 ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திரர்களால் தொல்லைகளும் மன அமைதியின்மை, சதா சஞ்சலம் கலக்கம் ஏற்படும்
    • உடல் உபாதைகள், பந்துமித்ரர்களின் விரோதங்கள் ஏற்படும்
    • மேலும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் மன நோய்கள் வர வாய்ப்பு உள்ளது . சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.
6 ம் வீட்டில் இருந்தால்:
    • இது நல்ல இடம் இல்லை . அந்த திசை புத்திக்காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து . கெளரவமும் பாதிக்கும் சூழ்நிலை அமையும்
    • சிலர் பகைவர்களை வெல்ல கூடியவனாகவும் இருப்பர் .
    • உடல் மெலிந்து கெட்ட எண்ணங்கள் கொண்டவராகவும், தந்திரமாக பகைவர்களை வெல்லக் கூடிய சக்தியை பெற்றவராகவும், புத்திர பாக்கியம் அற்று, தத்து புத்திரர்களை வளர்பவர்களாவும், அற்ப ஆயுள் உடன் இருப்பார்கள்
7 ம் வீட்டில் இருந்தால்:
    • வாழ்க்கை துணை அன்புடன் வைத்துக் கொள்ளாமல் அவமானம், வறுமை உடைய வாழ்க்கை வாழ்வார்கள்
    • ஆயுள் தீர்க்கம் உண்டு. ஆனால் வாழ்க்கை துணை அற்ப ஆயுள் உடன் இருப்பார்கள்
    • வாழ்க்கை துணைக்கு உடல் பாதிப்பு அல்லது வாழ்க்கை துணையுடன் உறவு பாதிப்பு போன்ற பிரச்சைகள் வர வாய்ப்பு உள்ளது
8 ம் வீட்டில் இருந்தால்:
    • தீர்க்கமான ஆயுள் உடன் சஞ்சலமான வாழ்க்கை அமையும்
    • இந்த தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும் அல்லது தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து கொண்ட இருக்கும்
    • சிலருக்கு விரும்பத்தகாத நிகழ்வுகளால் அவமானமும் அலைச்சலும் அடைவர்
    • லாப நஷ்டம், நல்லது கெட்டது அறியாது எண்ணிய மாத்திரத்தில் எதையாவது செய்து அவமானம், அலைச்சல் அடைவார்கள். பிறர் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்
9 ம் வீட்டில் இருந்தால்:
    • பலருக்கு தந்தை அனுகூலமாக இருக்கமாட்டார் மேலும் தந்தை சொத்துக்கள் நாசமாகும்
    • புத்திரர்களால் கடன், பந்து மித்திரகளால் விரோதம் அப்பிராய பேதம் ஏற்படும்
10 ம் வீட்டில் இருந்தால்:
    • தொழிலில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது சிலர் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பர்.
    • அரசாங்கத்திலும், பெரியார் மத்தியுலும் கெட்ட பெயர் எடுப்பார்கள்
    • சுப கிரகங்கள் சம்மந்த பட்டு இருந்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். தீர்க்க ஆயுளுடன் வாழ்க்கை நல்லபடியாக சமாளிப்பார்கள்
11 ம் வீட்டில் இருந்தால்:
    • மூத்த சகோதரக்கு கண்டமும் ஆயுள்அற்பமும் இருக்கும்
    • புத்திரர்களால் லாபம் உண்டு மேலும் நேர்முகவழி இல்லாமல் பலவித வழிகளில் லாபத்தை பெற முயலுவார்கள்
12 ம் வீட்டில் இருந்தால் :
    • புத்திர தோஷம் உண்டு.
    • ஊர் சுற்றும் குணத்துடன் எப்பொழுதும் மன அமைதி இல்லாமலும், தகாத வழிகளில் செல்வத்தை இழந்து சுக போகங்களை அனுபவித்து வாழ்க்கையை வீணாக கழிப்பார்கள்
    • சிலருக்கு வம்பு வழக்குகள் ஏற்படும். கையில் உள்ள பணத்தை இழக்க நேரிடும்
மேலும் இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும். கிரக நிலை அதாவது உச்சம், நீசம் , பகை நட்பால் பலன்கள் மாறுபடலாம்.அதனால் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.



7ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





ஏழாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:

    • நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.
    • பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவும், எதிர் பால் இனத்தினர் (ஆண்என்றால் பெண்ணும், பெண் என்றால் ஆணும் ) அன்பாக பேசுதல், புணருதல் ஆகிய யோக பாக்கியங்களுடன் வாழ்வார்கள்
    • தனது தொழிலையோ ஜீவனத்தியோ சரியாக செய்ய மாட்டார்கள்
    • கலையில் ஊக்கம் உண்டு. வாழ்க்கை துணையால் லாபங்கள் உண்டு
2ம் வீட்டில் இருந்தால்:
    • வாழ்க்கை துணை மூலம் சொத்துக்கள், பண வரவு இருக்கும் .
    • 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ அவர்கள் அண்ணாக இருந்தால் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.
3ம் வீட்டில் இருந்தால்:
    • களத்திரதோஷம் உண்டு. கணவன் அல்லது மனைவிக்கு மாரகம் ஏற்பட்டு மறு விவாகம் செய்துக்கொள்ளவும் கூடும். அதைப்போல் அதிகமாக காமப் பற்று இருக்காது.
    • இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.
4ம் வீட்டில் இருந்தால்:
    • மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். மேலும் நன்கு படித்து இருப்பார்கள்
    • எதிர்பார்க்கும் இன்பத்தை அடைவார்கள். மேலும் அவர்களின் வாழ்க்கை துணை குடும்பத்தை பொறுப்பை ஏற்கும் அம்சங்களை பெற்று இருப்பார்கள்
5ம் வீட்டில் இருந்தால்:
    • பொதுவாக களத்திர தோஷம் பெற்றவர் ஆவர்கள் .
    • சுப பார்வை பெற்றால் காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு. நல்ல வசதியான இடத்திலிருந்து வாழ்க்கை துணை அமைவர்கள் (களத்திர தோஷம் நிவர்த்தியாகும்).
    • பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் காதல் மணம் முடிப்பர் ஆனால் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது.
    • கலையில் ஆர்வம் இருக்கும்
6ம் வீட்டில் இருந்தால்:
    • 7-ம் வீட்டிற்கு 6-ம் வீடு 12ம் வீடு ஆகும் .எனவே இதுவும் மறைவு ஸ்தானம் ஆகும் எனவே அவ்வளவு நல்லதல்ல;
    • திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது.
    • 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது எனவே சிலர் தாய்மாமன் மகன் அல்லது மகளை மணப்பர். மேலும் வாழ்க்கை துணை வியாதிகள் கொண்டவராக இருப்பர்
7ம் வீட்டில் இருந்தால்:
    • வாழ்க்கை துணை நல்ல விதமாக அமையும்
    • வாழ்க்கை துணையிடம் அடிமை வாழ்வு வாழ நேரிடும். மேலும் அவரது வாழ்க்கை துணை செல்வாக்கு அதிகமாக பெற்று இருப்பர்
    • சுபமாக இருந்தால் கெளரவத்துடன் வசதியான வாழ்க்கையும் அசுபமாக இருந்தால் வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை இல்லாமல் சுகமில்லாத வாழ்கை வாழ்வார்கள்
8ம் வீட்டில் இருந்தால்:
    • மறைவு ஸ்தானம் எனவே பொதுவாக திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது
    • 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து அவர் 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து வாழக்கை துணை அமையும்.
    • பொதுவாக பொறுப்பற்ற, வீணான ஆசைகளுடைய வருமான குறைந்த வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள்
9 ம் வீட்டில் இருந்தால்:
    • பெரியவர்களின் ஆசியுடன் பூர்வ புண்ணியத்துடன் சிறு வயதிலே திருமணம் நல்ல விதமாக அமையும்
    • தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையும் மேலும் குடும்பம் ஒற்றுமையுடன் கெளவத்துடனும் இருக்கும்.
    • சிலருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் வரக்கூடும்
10ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கை துணையால் வசதியும் பெருகும்
    • சிலர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர்.
    • இளம் வயதில் திருமணம் , நல்ல வாழ்க்கை துணை, சொத்துக்கள் அமையும். (ஆயினும் சிலருக்கு களத்திர தோஷம் ஏற்படும்).
11ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல செல்வத்துடன் சொத்துகளுடனும், நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும்
    • சிலருக்கு அவர்களின் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமைய பெறுவர். சந்தோஷமான வாழ்க்கை அமையும்
12ம் வீட்டில் அமர்ந்தால்:
    • மறைவு ஸ்தானம் எனவே பொதுவாக வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது

      (7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும்.)
மேலும் இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும். கிரக நிலை அதாவது உச்சம், நீசம் , பகை நட்பால் பலன்கள் மாறுபடலாம்.அதனால் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.



6ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





ஆறாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:

    • சதா வியாதிகளும் நோய் நொடிகளுடன் தைரியம் இல்லாதவராகவும் இருப்பர்கள்
    • தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்த குடும்ப வாழ்கை வாழ்வர்
    • எதிரிகளால் பண இழப்புக்கள், தொல்லைகள் ஏற்படும். (சுபலன் என்றால் பரிகாரத்தால் கஷ்டம் ஒரளவு குறையும்
2ம் வீட்டில் இருந்தால்:
    • இந்த இடம் நல்ல இல்லை. பார்வைக் கோளாறுகள், பற்சிதைவுகள், கண் கோளாறு மற்றும் பல நோயினால் அவதிப்படுவர்.
    • வாக்குவன்மை இருக்காது (நல்ல பேச்சு இருக்காது.)
    • அதிகமாக கடன்களை வாங்கி செலவு செய்வர்கள். கல்வி ஊக்கம் இருக்காது.
3ம் வீட்டில் இருந்தால்:
    • சகோதர சகோதரிகள் விரோதிகளாக இருப்பார்கள் குறிப்பாக இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது.
    • காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும்.
    • குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.
4ம் வீட்டில் இருந்தால்:
    • தாயாருடைய உடல் நலம் பாதிப்பு, தாயாருடன் விரோதம், சண்டை மற்றும் முன்னோர் சொத்துக்கள் கடனில் மூழ்கியிருக்கும். துக்கமான வாழ்க்கை வாழ்வர்கள்
    • மோசமான வீட்டில் அல்லது மோசமான சூழலில் வீடு அமையும். (குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது).
5ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திரதோஷம் அல்லது நோயுற்ற புத்திராக்களை உடையவனாக இருப்பர்.
    • நல்ல பார்வைகள் பெற்று இருந்தால் தாயார் மூலம் மாமா வழிச் சொத்துக்கள் கிடைக்கும்.
    • கடன் தொல்லைகள், எல்லோரும் சண்டை செய்பவராகவும் இருப்பர்.
    • கெட்ட எண்ணங்கள் உதயமாகும் மேலும் பாபக் கரரியங்கள் செய்யவும் துணிவார்கள்.
    • சிலர் சிறைவாசம் வறுமை ஆகியவற்றை அனுபவித்து பிறரை ஏமாற்றி பிழைப்பை நடத்துவார்கள
6ம் வீட்டில் இருந்தால்:
    • தாய் வழியில் அல்லது தாய் உறவில் அதிகமான சகோதர பந்தங்களை உடையவனாக இருப்பர் தாய் மாமா புகழ் பெற்றவராக இருப்பார்.
    • சுபகிரகங்கள் பார்வை ஏற்படின் எதிரி மூலம் சம்பாத்தியம், வெற்றி, நன்மைகள் உண்டாகும்
    • ராஜ தண்டனை, சிறைவாசம், வறுமை ஆகிய அனுபவிக்க நேரிடும்
7ம் வீட்டில் இருந்தால்:
    • இல்லற வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை துணை மற்றும் அவர்களின் வழியில் ஆதரவு இருக்காது
    • மேலும் சிலருக்கு திருமண வாழ்க்கை விவாகரத்து வரை கொண்டுவிடும். மனதில் அமைதி இல்லாத வாழ்க்கை வாழ்வர்
    • விரோதங்கள், வியாதி, ரத்தம் கெடுதல், சரும நோய்கள், குடும்பத்தில் சந்தோஷம் குறைவு போன்றவற்றால் மன அமைதி இன்றி இருப்பார்கள்
    • சுப பலன் பெற்று இருந்தால் தாய்வழி மாமா அல்லது தந்தை வழி திருமணம் நடைப்பெறும்
8ம் வீட்டில் இருந்தால்:
    • குறைந்த ஆயுள் உடையவனாக இருப்பார்கள் (இதற்கு விதிவிலக்கும் உண்டு)
    • தீய பார்வைகள் பெற்றிருந்தால் அளவற்ற கடன்களால் அல்லது தீராத மர்ம நோய்களால் அவதிப் படுபவராக இருப்பார்கள்.
    • மற்றவர்களை கஷ்டப்படுத்தி அதில் இன்பம் காண்பவராக இருப்பார்கள்
    • குடும்பத்தில் உள்ள பொருட்களை விற்று குடும்பம் நடத்தவேண்டி சூழ்நிலை அமையும்
9ம் வீட்டில் இருந்தால்:
    • தந்தை வழி சொத்து நாசமாகும் மற்றும் பெரியவர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
    • பிறர் ஏமாற்றி விடுவார்கள். பாபகாரியங்கள் செய்ய அஞ்சமாட்டார்கள்.
    • வாழ்க்கை வறுமை மற்றும் பாவச் செயல்கள் நிறைந்ததாக இருக்கும்.
    • நல்ல கிரகத்தின் பார்வை பெற்று இருந்தால் தந்தை நீதித்துறையில் பணியாற்றுபவராக இருப்பர் மேலும் தாய் வழி உறவுகள் நல்ல நிலைமையில் இருப்பார்கள்.
10ம் வீட்டில் இருந்தால்:
    • தவறான பாதையில் சம்பாத்தியம் செய்வார்கள்.
    • வம்பு பேசுவது, விண்ணாக ஊர் சுற்றுவது குடும்பத்தை நடத்துவார்கள்
    • சோம்பேறி என்றும் அயோக்கியன் மக்கள் மனதில் அயோக்கியன் என்றும் பெயர் எடுப்பார்கள்.
    • சிலர் போலிச் சாமியார்களாக இருப்பார்கள். கீழ்த்தரமான வேலைகளைச் செய்து கீழான வாழ்க்கை வாழ நேரிடும்.
    • சுபகிரகம் பார்வை ஏற்படின் அனைத்திலும் வெற்றி, லாபம் ஆடவர்கள்
11ம் வீட்டில் இருந்தால்:
    • மூத்த சகோதர்கள் வியாதியுடன் கடனும் இருப்பார்கள் ஆனால் சுப பார்வை ஓர் சேர்க்கை பெற்று இருந்தால் மூத்த சகோதரன் நீதித்துறையில் பணிபுரிவார் அல்லது அதற்கு ஈடான புகழுடன் வாழ்வார்.
    • கடன்கள் அதிகமாகி கஷ்டங்கள் அனுபவிப்பார்கள்
    • சில பேருக்கு விரோதிகள் மூலம் லாபம் இருக்கும்.
    • தீய பார்வைகள் பெற்றிருந்தால் ஏழ்மை மற்றும் மோசமான சூழலில் வாழ நேரிடும்.
12ம் வீட்டில் இருந்தால்:
    • அனாவசியமான செலவு, (ஆண் அல்லது பெண்) குறியில் நோய் என்று வாழ்க்கை அவலமாகவும், கடினமாகவும் இருக்கும்.
    • அகல போசனை, சயன சுக குறைவுகள் ஏற்படும்
    • வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும்.



5ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





ஐந்தாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:'

    • சுப பலனாக இருந்தால் குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும் அந்த குழந்தைகள் நல்ல பெயர் பெற்று நலமுடன் வாழ்வர்
    • தெய்வ அனுக்கிரகம், தலைமைப் பதவி , சிலருக்கு அரசங்க பதவி, நிறைய வேலை ஆட்கள் பெற்று சிறப்புடன் வாழ்வர்.
    • தீய கிரங்கங்களின் சேர்கை, பார்வை இருந்தால் எதிர்மறையான பலன்கள் மற்றும் துர்தேவதைகளை வசியம் செய்பவராக இருப்பர்.
2ம் வீட்டில் இருந்தால்:
    • சுப பலன் பெற்று இருந்தால் அழகான மனனவி மற்றும் அன்பான குழந்தைகளால் தனம் சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை அமைய பெற்று இருப்பர்
    • கல்வியில் தேர்ச்சி நல்ல அறிவுடன் , அரசு மரியாதையுடன் இருப்பர்
    • 5, 2 யுடையவரின் திசா புத்தியில் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைத்து சிறப்புடன் வாழ்வர் .
    • தீய கிரங்கங்களின் சேர்கை, பார்வை இருந்தால் எதிர்மறையான பலன்கள் மற்றும் தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவர் மேலும் அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர். ரேஸ் , லாட்டரியில் பணத்தை கோட்டை விட்டு மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாவர்.
3ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திர சந்தன தோஷம் கொண்டவர்களாக இருப்பார்கள்
    • புராண தெய்வீக வழிபாடுகள், சாஸ்த்திரங்களில் பற்று உடையவராக இருப்பார்கள். மேலும் தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர்.
    • அசுப பலன் பெற்று இருந்தால் குழந்தைகளின் இழப்பு, தொழிலில் பிரச்சனை , சகோதர சகோதிரி பிரிவு ஏற்ப வாய்ப்பு உள்ளது .
    • ஆனால் சுப பலனாக இருந்தால் புத்திர பாக்கியமும் , நல்ல சகோதர சகோதிரிகளையும் பெற்றவர்
4ம் வீட்டில் இருந்தால்:
    • 5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம்வீடு எனவே 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். எனவே இது அவ்வளவு நல்லது அல்ல. புத்திரதோஷம் ஏற்படும்.
      (5ம் லக்கினமாக கொண்டால் அந்த 5ம் வீட்டுக்கு 12ம் வீடு 4ம் வீடு ஆகும் )
    • சுப பலன் இருந்தால் புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பர் மேலும் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்
    • சுபகிரங்கள் சேர்க்கை ஏற்பட்டால் ராஜயோகம் கிடைக்கும். சிலருக்கு அரசுக்கு ஆலோசகராக அல்லது அது சம்பந்தப்பட்ட தொழில் செய்பவராக இருப்பர்
5ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திரர்கள் உயர் பதவிகளில் மற்றும் கல்வி கேள்விகளில் ஞானத்தோடு இருப்பர். அதிகமான ஆண் குழந்தைகள் இருக்கும்
    • மேலும் இந்த ஜாதகர் படித்த அறிவாளிகளின் சமூகத்திலும் சுற்றத்திலும் வாழ்க்கை நடத்துவர்
    • மேலும் செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில்
    • ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர்.
    • அசுபலன் பெற்று இருந்தால் எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவர்.குழந்தைகள் இறக்கும் அபாயமும் உண்டு.
6ம் வீட்டில் இருந்தால்:
    • மறைவு ஸ்தானம் எனவே நல்லதுல்ல. குழந்தை பாக்கியம் குறைவு (புத்திரதோஷம்). சிலருக்கு தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க நிலை ஏற்படும்
    • மேலும் சிலருக்கு பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். பிள்ளைகளால் லாபமோ நன்மையோ அடையமுடியாது
    • பெரியோரிடத்தில் விரோதம் வழக்குகள் அடிக்கடி தோன்றி மறையும்
    • தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.
7ம் வீட்டில் இருந்தால்:
    • 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிப்பதால் காதல் திருமணம்செய்து கொள்வர். என்று சொல்லலாம். (மேலும் 5க்குடையவன் 7லிலும் , 7க்குடையவன் 5லிலும் இருந்தால் கட்டாயம் காதல் திருமணம் தான் என்று சொல்லமுடியும்)
    • அதிக நல்ல குழந்தைகளை உடையவராக இருப்பர் அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவராக இருப்பர்
    • தாராள மனத்துடன் சுற்றத்தார்கள், நண்பர்கள் மூலம் நற்பெயர் பெறுவார்கள் ஆனால் வாழ்க்கை துணையின் குடும்பத்தரால் மன அமைதி இல்லாமல் இருப்பார்கள்
    • அசுப பலன் பெற்று இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்
8ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திர சந்தான தோஷம் ஏற்பட்டு மேலும் சிரமமாக குடும்பத்தை நடத்துவார்
    • அதிர்ஷ்டக்குறைவானவர் என்று சொல்லாம்.
    • மூதாதையர் சொத்துக்கள் கிடைப்பதில் சிரமமும் அப்படியே கிடைத்தாலும் அந்த சொத்தை கடனுக்காக இழக்க நேரிடும்.
    • நல்ல வருமானம் இருக்காது. சிலருக்கு புத்திரர்கள் இருந்தாலும் கஷ்டம் வறுமையில் வாடுவார்கள்
9ம் வீட்டில் இருந்தால்:
    • இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார்
    • கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும்.
    • பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர்.
    • சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பர்
    • அசுப பலன் பெற்றால் அதிஷ்டமில்லாதவர்கள் எனலாம்
10ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திர சந்தான விருத்தி உண்டு.
    • அரசு பதவி ,ராஜயோகம்,ஏராளமான சொத்துக்கள் சேரும். அரசு மரியாதை கிடைக்கும்.
    • குடும்ப உறவுகளில் அவருக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கும்.
    • சகல சௌபாக்கித்ததுடன் வாழ்வார்கள்
11-ம் வீடு இருந்தால்:
    • லாபஸ்தானம் எனவே இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர். மேலும் புத்திரர்களால் உதவி கிடைக்கும்
    • குடும்பம் அமைதியும் சந்தோஷத்தையும் அடைந்து பெரிய மனிதர்களின், அரசின் அன்பும் ஆதரவும் பெற்று வாழ்வர்
    • சிலர் அதிக சூழந்தைகளுடன் வாழ்வர்
12ம் வீட்டில் இருந்தால்:
    • ஆண்ணாக இருந்தால் மனைவிக்கு அடிக்கடி கர்ப்ப சிதைவு ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படும்
    • குடும்பம் அமைதி, சந்தோஷமும் இல்லாமல் இருக்கும்.
    • எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். மன அமைதியின்றி காலத்தை நடத்த வேண்டிவரும்
    • தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர்.