எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Monday, May 4, 2020

6ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





ஆறாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:

    • சதா வியாதிகளும் நோய் நொடிகளுடன் தைரியம் இல்லாதவராகவும் இருப்பர்கள்
    • தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்த குடும்ப வாழ்கை வாழ்வர்
    • எதிரிகளால் பண இழப்புக்கள், தொல்லைகள் ஏற்படும். (சுபலன் என்றால் பரிகாரத்தால் கஷ்டம் ஒரளவு குறையும்
2ம் வீட்டில் இருந்தால்:
    • இந்த இடம் நல்ல இல்லை. பார்வைக் கோளாறுகள், பற்சிதைவுகள், கண் கோளாறு மற்றும் பல நோயினால் அவதிப்படுவர்.
    • வாக்குவன்மை இருக்காது (நல்ல பேச்சு இருக்காது.)
    • அதிகமாக கடன்களை வாங்கி செலவு செய்வர்கள். கல்வி ஊக்கம் இருக்காது.
3ம் வீட்டில் இருந்தால்:
    • சகோதர சகோதரிகள் விரோதிகளாக இருப்பார்கள் குறிப்பாக இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது.
    • காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும்.
    • குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.
4ம் வீட்டில் இருந்தால்:
    • தாயாருடைய உடல் நலம் பாதிப்பு, தாயாருடன் விரோதம், சண்டை மற்றும் முன்னோர் சொத்துக்கள் கடனில் மூழ்கியிருக்கும். துக்கமான வாழ்க்கை வாழ்வர்கள்
    • மோசமான வீட்டில் அல்லது மோசமான சூழலில் வீடு அமையும். (குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது).
5ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திரதோஷம் அல்லது நோயுற்ற புத்திராக்களை உடையவனாக இருப்பர்.
    • நல்ல பார்வைகள் பெற்று இருந்தால் தாயார் மூலம் மாமா வழிச் சொத்துக்கள் கிடைக்கும்.
    • கடன் தொல்லைகள், எல்லோரும் சண்டை செய்பவராகவும் இருப்பர்.
    • கெட்ட எண்ணங்கள் உதயமாகும் மேலும் பாபக் கரரியங்கள் செய்யவும் துணிவார்கள்.
    • சிலர் சிறைவாசம் வறுமை ஆகியவற்றை அனுபவித்து பிறரை ஏமாற்றி பிழைப்பை நடத்துவார்கள
6ம் வீட்டில் இருந்தால்:
    • தாய் வழியில் அல்லது தாய் உறவில் அதிகமான சகோதர பந்தங்களை உடையவனாக இருப்பர் தாய் மாமா புகழ் பெற்றவராக இருப்பார்.
    • சுபகிரகங்கள் பார்வை ஏற்படின் எதிரி மூலம் சம்பாத்தியம், வெற்றி, நன்மைகள் உண்டாகும்
    • ராஜ தண்டனை, சிறைவாசம், வறுமை ஆகிய அனுபவிக்க நேரிடும்
7ம் வீட்டில் இருந்தால்:
    • இல்லற வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை துணை மற்றும் அவர்களின் வழியில் ஆதரவு இருக்காது
    • மேலும் சிலருக்கு திருமண வாழ்க்கை விவாகரத்து வரை கொண்டுவிடும். மனதில் அமைதி இல்லாத வாழ்க்கை வாழ்வர்
    • விரோதங்கள், வியாதி, ரத்தம் கெடுதல், சரும நோய்கள், குடும்பத்தில் சந்தோஷம் குறைவு போன்றவற்றால் மன அமைதி இன்றி இருப்பார்கள்
    • சுப பலன் பெற்று இருந்தால் தாய்வழி மாமா அல்லது தந்தை வழி திருமணம் நடைப்பெறும்
8ம் வீட்டில் இருந்தால்:
    • குறைந்த ஆயுள் உடையவனாக இருப்பார்கள் (இதற்கு விதிவிலக்கும் உண்டு)
    • தீய பார்வைகள் பெற்றிருந்தால் அளவற்ற கடன்களால் அல்லது தீராத மர்ம நோய்களால் அவதிப் படுபவராக இருப்பார்கள்.
    • மற்றவர்களை கஷ்டப்படுத்தி அதில் இன்பம் காண்பவராக இருப்பார்கள்
    • குடும்பத்தில் உள்ள பொருட்களை விற்று குடும்பம் நடத்தவேண்டி சூழ்நிலை அமையும்
9ம் வீட்டில் இருந்தால்:
    • தந்தை வழி சொத்து நாசமாகும் மற்றும் பெரியவர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
    • பிறர் ஏமாற்றி விடுவார்கள். பாபகாரியங்கள் செய்ய அஞ்சமாட்டார்கள்.
    • வாழ்க்கை வறுமை மற்றும் பாவச் செயல்கள் நிறைந்ததாக இருக்கும்.
    • நல்ல கிரகத்தின் பார்வை பெற்று இருந்தால் தந்தை நீதித்துறையில் பணியாற்றுபவராக இருப்பர் மேலும் தாய் வழி உறவுகள் நல்ல நிலைமையில் இருப்பார்கள்.
10ம் வீட்டில் இருந்தால்:
    • தவறான பாதையில் சம்பாத்தியம் செய்வார்கள்.
    • வம்பு பேசுவது, விண்ணாக ஊர் சுற்றுவது குடும்பத்தை நடத்துவார்கள்
    • சோம்பேறி என்றும் அயோக்கியன் மக்கள் மனதில் அயோக்கியன் என்றும் பெயர் எடுப்பார்கள்.
    • சிலர் போலிச் சாமியார்களாக இருப்பார்கள். கீழ்த்தரமான வேலைகளைச் செய்து கீழான வாழ்க்கை வாழ நேரிடும்.
    • சுபகிரகம் பார்வை ஏற்படின் அனைத்திலும் வெற்றி, லாபம் ஆடவர்கள்
11ம் வீட்டில் இருந்தால்:
    • மூத்த சகோதர்கள் வியாதியுடன் கடனும் இருப்பார்கள் ஆனால் சுப பார்வை ஓர் சேர்க்கை பெற்று இருந்தால் மூத்த சகோதரன் நீதித்துறையில் பணிபுரிவார் அல்லது அதற்கு ஈடான புகழுடன் வாழ்வார்.
    • கடன்கள் அதிகமாகி கஷ்டங்கள் அனுபவிப்பார்கள்
    • சில பேருக்கு விரோதிகள் மூலம் லாபம் இருக்கும்.
    • தீய பார்வைகள் பெற்றிருந்தால் ஏழ்மை மற்றும் மோசமான சூழலில் வாழ நேரிடும்.
12ம் வீட்டில் இருந்தால்:
    • அனாவசியமான செலவு, (ஆண் அல்லது பெண்) குறியில் நோய் என்று வாழ்க்கை அவலமாகவும், கடினமாகவும் இருக்கும்.
    • அகல போசனை, சயன சுக குறைவுகள் ஏற்படும்
    • வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும்.



5ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





ஐந்தாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:'

    • சுப பலனாக இருந்தால் குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும் அந்த குழந்தைகள் நல்ல பெயர் பெற்று நலமுடன் வாழ்வர்
    • தெய்வ அனுக்கிரகம், தலைமைப் பதவி , சிலருக்கு அரசங்க பதவி, நிறைய வேலை ஆட்கள் பெற்று சிறப்புடன் வாழ்வர்.
    • தீய கிரங்கங்களின் சேர்கை, பார்வை இருந்தால் எதிர்மறையான பலன்கள் மற்றும் துர்தேவதைகளை வசியம் செய்பவராக இருப்பர்.
2ம் வீட்டில் இருந்தால்:
    • சுப பலன் பெற்று இருந்தால் அழகான மனனவி மற்றும் அன்பான குழந்தைகளால் தனம் சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை அமைய பெற்று இருப்பர்
    • கல்வியில் தேர்ச்சி நல்ல அறிவுடன் , அரசு மரியாதையுடன் இருப்பர்
    • 5, 2 யுடையவரின் திசா புத்தியில் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைத்து சிறப்புடன் வாழ்வர் .
    • தீய கிரங்கங்களின் சேர்கை, பார்வை இருந்தால் எதிர்மறையான பலன்கள் மற்றும் தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவர் மேலும் அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர். ரேஸ் , லாட்டரியில் பணத்தை கோட்டை விட்டு மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாவர்.
3ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திர சந்தன தோஷம் கொண்டவர்களாக இருப்பார்கள்
    • புராண தெய்வீக வழிபாடுகள், சாஸ்த்திரங்களில் பற்று உடையவராக இருப்பார்கள். மேலும் தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர்.
    • அசுப பலன் பெற்று இருந்தால் குழந்தைகளின் இழப்பு, தொழிலில் பிரச்சனை , சகோதர சகோதிரி பிரிவு ஏற்ப வாய்ப்பு உள்ளது .
    • ஆனால் சுப பலனாக இருந்தால் புத்திர பாக்கியமும் , நல்ல சகோதர சகோதிரிகளையும் பெற்றவர்
4ம் வீட்டில் இருந்தால்:
    • 5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம்வீடு எனவே 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். எனவே இது அவ்வளவு நல்லது அல்ல. புத்திரதோஷம் ஏற்படும்.
      (5ம் லக்கினமாக கொண்டால் அந்த 5ம் வீட்டுக்கு 12ம் வீடு 4ம் வீடு ஆகும் )
    • சுப பலன் இருந்தால் புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பர் மேலும் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்
    • சுபகிரங்கள் சேர்க்கை ஏற்பட்டால் ராஜயோகம் கிடைக்கும். சிலருக்கு அரசுக்கு ஆலோசகராக அல்லது அது சம்பந்தப்பட்ட தொழில் செய்பவராக இருப்பர்
5ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திரர்கள் உயர் பதவிகளில் மற்றும் கல்வி கேள்விகளில் ஞானத்தோடு இருப்பர். அதிகமான ஆண் குழந்தைகள் இருக்கும்
    • மேலும் இந்த ஜாதகர் படித்த அறிவாளிகளின் சமூகத்திலும் சுற்றத்திலும் வாழ்க்கை நடத்துவர்
    • மேலும் செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில்
    • ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர்.
    • அசுபலன் பெற்று இருந்தால் எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவர்.குழந்தைகள் இறக்கும் அபாயமும் உண்டு.
6ம் வீட்டில் இருந்தால்:
    • மறைவு ஸ்தானம் எனவே நல்லதுல்ல. குழந்தை பாக்கியம் குறைவு (புத்திரதோஷம்). சிலருக்கு தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க நிலை ஏற்படும்
    • மேலும் சிலருக்கு பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். பிள்ளைகளால் லாபமோ நன்மையோ அடையமுடியாது
    • பெரியோரிடத்தில் விரோதம் வழக்குகள் அடிக்கடி தோன்றி மறையும்
    • தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.
7ம் வீட்டில் இருந்தால்:
    • 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிப்பதால் காதல் திருமணம்செய்து கொள்வர். என்று சொல்லலாம். (மேலும் 5க்குடையவன் 7லிலும் , 7க்குடையவன் 5லிலும் இருந்தால் கட்டாயம் காதல் திருமணம் தான் என்று சொல்லமுடியும்)
    • அதிக நல்ல குழந்தைகளை உடையவராக இருப்பர் அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவராக இருப்பர்
    • தாராள மனத்துடன் சுற்றத்தார்கள், நண்பர்கள் மூலம் நற்பெயர் பெறுவார்கள் ஆனால் வாழ்க்கை துணையின் குடும்பத்தரால் மன அமைதி இல்லாமல் இருப்பார்கள்
    • அசுப பலன் பெற்று இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்
8ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திர சந்தான தோஷம் ஏற்பட்டு மேலும் சிரமமாக குடும்பத்தை நடத்துவார்
    • அதிர்ஷ்டக்குறைவானவர் என்று சொல்லாம்.
    • மூதாதையர் சொத்துக்கள் கிடைப்பதில் சிரமமும் அப்படியே கிடைத்தாலும் அந்த சொத்தை கடனுக்காக இழக்க நேரிடும்.
    • நல்ல வருமானம் இருக்காது. சிலருக்கு புத்திரர்கள் இருந்தாலும் கஷ்டம் வறுமையில் வாடுவார்கள்
9ம் வீட்டில் இருந்தால்:
    • இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார்
    • கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும்.
    • பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர்.
    • சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பர்
    • அசுப பலன் பெற்றால் அதிஷ்டமில்லாதவர்கள் எனலாம்
10ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திர சந்தான விருத்தி உண்டு.
    • அரசு பதவி ,ராஜயோகம்,ஏராளமான சொத்துக்கள் சேரும். அரசு மரியாதை கிடைக்கும்.
    • குடும்ப உறவுகளில் அவருக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கும்.
    • சகல சௌபாக்கித்ததுடன் வாழ்வார்கள்
11-ம் வீடு இருந்தால்:
    • லாபஸ்தானம் எனவே இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர். மேலும் புத்திரர்களால் உதவி கிடைக்கும்
    • குடும்பம் அமைதியும் சந்தோஷத்தையும் அடைந்து பெரிய மனிதர்களின், அரசின் அன்பும் ஆதரவும் பெற்று வாழ்வர்
    • சிலர் அதிக சூழந்தைகளுடன் வாழ்வர்
12ம் வீட்டில் இருந்தால்:
    • ஆண்ணாக இருந்தால் மனைவிக்கு அடிக்கடி கர்ப்ப சிதைவு ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படும்
    • குடும்பம் அமைதி, சந்தோஷமும் இல்லாமல் இருக்கும்.
    • எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். மன அமைதியின்றி காலத்தை நடத்த வேண்டிவரும்
    • தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர்.



4ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





நான்காம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:

    • சுப பலன் பெற்று இருந்தால் உயர்ந்த அந்தஸ்துடன் கூடிய பதிவி, பெரிய வீடுகள், வண்டி வாகனங்கள் அமைய பெற்று சுகமாக வாழ்க்கை அமையும்
    • சயன சுகம், போஜன சுகம் போன்றவை பெற்று பலராலும் போற்ற படுவார்கள்.
    • நிதி, நேர்மை, பக்தி, விசுவாசம் குறைந்தே காணப்படும்
    • 4வது அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் உயர்ந்த அந்தஸ்து, பெரிய பதவி பெற்று சிறப்புடன் வாழ்வார்
    • ஆனால் அசுப கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் ஏழ்மை நிலையும், உடல்நலம் இல்லாமலும் இருப்பர்
2ம் வீட்டில் இருந்தால்:
    • தாய் வழிச்சொத்து, ஆதரவையும் ஆகியவை அமைய பெற்று இருப்பர்
    • கிண்டலாகப் பேசும் சுபாவம் கொண்டவராக இருப்பர்.
    • தாய் நோய்வாய்ப் படுவார்
    • குடும்பம் சுகம் சௌகரியம் பெற்று விளங்கும்
3ம் வீட்டில் இருந்தால்:
    • சகோதர சகோதிரிகள் சிறந்து விளங்குவார்கள்
    • தாயார் வியாதிகள் நிரம்பி இருப்பார்
    • வருமானத்தைவிட செலவு அதிகரித்து குடும்பத்தில் கஷ்டங்களும் நஷ்டங்களும் வாழ்க்கை நடத்துபவர்
4ம் வீட்டில் இருந்தால்:
    • தன் சொந்த மதத்தின்மேல் நம்பிக்கை உள்ளவராக இருப்பர்.
    • குடும்பத்தில் மிக்க அக்கரை உள்ளவராக இருப்பர்.
    • நிலபுலங்கள் வீடு வாசல் மாடு கன்றுகள் பால்பாக்கியம் கல்வியில் திறமை கீர்த்தி வண்டி வாகனங்கள் முதலியவற்றுடன் சொத்து சுகங்களைப் பெற்று இருப்பர்
    • பலரும் மரியாதையுடன் கொண்டாடுவார்கள். மேலும் நண்பர்கள், உறவினர்களிடம் நல்ல மரியாதை பெற்று புகழுடன் வாழ்வர்


5ம் வீட்டில் இருந்தால்:
    • தாயார் வசதி உள்ள வீட்டிலிருந்து வந்தவராக இருப்பர்.
    • நல்ல புத்திரங்களை உடையவனகாவும் வண்டி வாகனங்கள் பெற்று , சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடும்
    • மற்றவர்களால் மதிக்கப் படுவராக இருப்பர்.
6ம் வீட்டில் இருந்தால்:
    • முன்கோபியாகவும் . நல்ல எண்ணங்கள் இல்லாதவராக இருப்பர் .
    • இந்த வீட்டில் மறைவு ஸ்தானமாகியல் இந்த வீட்டில் 4ம் அதிபதி இருப்பது நல்லது அல்ல.
    • சுக சௌகர்யங்களை இழந்தது ,தாயிடமும் தாயார் வழிகளிலும் விரோதங்களை பெற்று , பூர்வீக சொத்துக்களை இழந்து சண்டை சச்சரவுயுடன் வாழ்க்கை வாழ்வார்
7ம் வீட்டில் இருந்தால்:
    • வீடு, வாசலுடன் வெளியூரிலலோ அல்லது உள்ளுரிலோ சம்பாத்தியம் செய்வராக இருப்பர்
    • அசுப பலன் பெற்று இருந்தால் தாயார், மாமன் வழியில் வாழ்க்கை துணை அமைந்து வரவும் செலவும் சரிசமமாக இருந்து வரும்
    • சுப பலன் பெற்று இருந்தால் குடும்பத்தில் சநதோஷம், செல்வம், சுகம் நிறைந்த வாழ்க்கை அமையும். வாழ்க்கை துணை போக்கின்படி வாழ்வார்கள் .
8ம் வீட்டில் இருந்தால்:
    • தாயார் ஏழை வீட்டில் பிறந்தவராக, தாய்வழி ஆதரவு குறைந்து இருக்கும்
    • வறுமையும் அவமானங்களும் நிறைந்து வாழ்க்கை அமையும் (இது துஸ்தானம் (அ ) மறைவிடமும் ஆகும். )
    • இத்துடன் செவ்வாயும் கெட்டிருந்தால் ஸ்திர சொத்துக்களுக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
9ம் வீட்டில் இருந்தால்:
    • நிலபுலங்கள் வீடு வாகனங்கள் நிறைந்து தகனப்பாரின் அன்பை பெற்றவராக இருப்பர்
    • தகப்பனார் அன்பை பெற்று இருப்பார்கள்
    • சுக சௌரியங்களுடன் செல்வத்தையும் பெற்று விளங்குவார்கள்
10ம் வீட்டில் இருந்தால்:
    • சிலர் அரசியலில் புகழ் பெற்று அனைவராலும் மதிக்கும் வண்ணம் வாழ்க்கை வாழ்வராக இருப்பர்
    • பூமி சம்பந்தமான பொருள்களால் லாபத்தை பெற்று இருப்பர்
    • பெரியஅந்தஸ்து உள்ளவர்களிடம் தொடர்புமற்றும் செல்வம், செல்வாக்கு, கீர்த்தி பெற்று இருப்பர்
11ம் வீட்டில் இருந்தால்:
    • ஸ்திர சொத்துக்கள் மற்றும் கால் நடைகள் விற்பனையில் முன்னேற்றம் மற்றும் சுகங்கள் நிறைந்தவனாகவும் பூமி வியாபாரங்கள் மூலம் நல்ல லாபங்களுடன் சிறந்த வாழ்க்கையினை பெற்று இருப்பர்.
    • தாயாரால் அனுகூலம் உண்டு என்றாலும் தாயாரின் உடலில் நோய் பாதிப்பு அல்லது மாரகம் ஏற்படும்
12ம் வீட்டில் இருந்தால்:
    • சுகங்கள் அற்றவனாகவும் சொந்தங்கள் ஆதரவு இல்லாமாலும் வறுமை மிகுந்து வாழ்ககை நடத்துவராக இருப்பர்
    • சொத்துக்கள் விரயம், வாழ்க்கையில் கஷ்டம் நஷ்டம் போன்றவையால் சிரம்மான வாழ்க்கை நடத்துவராக இருப்பர்

Sunday, May 3, 2020

3ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





மூன்றாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:

    • இளைய சகோதர சகோதிரி விருத்தி, ஆதரவு ஏற்படும்
    • பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கும்படியான அதிகாரம் யோகம் கிடைக்கும்
    • சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும்.
    • பொன் , வைரம் முதலான நகைகளை பெறுவார்களாக இருப்பர்
      (பொதுவாக லக்கினாதிபதி அதாவது 1க்கு உடையவன் 3ல் இருப்பதை காட்டிலும் 3க்கு உடையவன் 1ல் இருப்பது நல்லது
2ம் வீட்டில் இருந்தால்:
    • சகோதர சகோதரிகளின் ஆதரவில் காலங்களை கழிக்க நேரிடும்
    • மூன்றாம் வீட்டின் அதிபதி கெட்ட கிரகங்களின் பார்வைகள் இல்லாமல் இருந்தால் சகோதர சகோதரிகளின் சொத்து கிடைக்கும்.
    • தைரியம் குறைந்தும் வியாதிகள் உடையவராக இருப்பர்
    • சுப கிரங்களின் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருந்தால் செல்வங்கள் நிறைந்து மகிழ்ச்சியுடனும் இருப்பர்
3ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல நிலையில் இருந்தால் குறிப்பாக இளைய சகோதர சகோதரிகள் நல்ல அந்தஸ்த்தோடு இருப்பார் மேலும் அவர்களின் ஆதரவு பெற்று இருப்பர்
    • ஆடை ஆபரணங்களில் ஆசையுடையவராக இருப்பர் .
    • தெய்விக வழிபாடுகள், சாஸ்திர அறிவுகள் , விசுவாசம் பெற்றவராக இருப்பர்
    • உடல் பலம் நன்றாக இருக்கும்
4ம் வீட்டில் இருந்தால்:
    • குடும்பத்தில் ஒற்றுமை , செல்வம் நிறைந்து சுகமாக இருப்பர்
    • சகோதர சகோதரிகள் நீண்ட ஆயுளுடனும் தாயார் தாய்வழி ஆதரவை பெற்றவர்களாக இருப்பர்
5ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல குழந்தை பாக்கியங்களை , மகிழ்ச்சியான குடும்பத்தையும் ,சகோதர சகோதரிகளின் , பெரிய மனிதர்களின் ஆதரவும், நட்பும் பெற்றவராகவும் சந்தோஷமான குடும்பத்தையும் பெற்று இருப்பர்
    • சாஸ்திரம், தெய்வீக வழிபாட்டில் ஆர்வம் நிரம்பப் பெற்று இருப்பர்
6ம் வீட்டில் இருந்தால்:
    • அவ்வளவு நல்ல வீடு அல்ல. சகோதர சகோதரிகள் பரம எதிரிகளாக இருப்பர்
    • உடல் பலம் இல்லாமல் நோய் உடைய உடல் அமைப்பை பெற்று இருப்பர்
    • சுப கிரக பார்வையோ அல்லது சேர்ககையோ பெற்று சுப பலமானால் எதிரிகளை வெல்வார் மேலும் தாய் வழி மூலம் லாபம், பயம் மற்றும் குழப்பம் பெற்று இருப்பர்
7ம் வீட்டில் இருந்தால்:
    • பெண்களின் மீது ஈர்ப்புடன் , நன்றாக சாப்பிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றி திரிபவனாகவும் இருப்பர்
    • தன்னுடைய சுகங்கள் பற்றி மட்டும் நினைக்கும் குணத்துடன் தைரியத்துடன் இருப்பர்.
    • பெண்களின் மற்றும் வாழ்க்கை துணை வழியே சொத்துக்களை பெற்று சுகமாக சுகத்துடன் இருப்பர்
    • எது ஒரு தொழிலும் இல்லாமல் தைரியத்துடன் மிக சுகமாக வாழ்வார்கள்
8ம் வீட்டில் இருந்தால்:
    • இந்த வீடு மறைவு ஸ்தானம் எனவே சகோதர சகோதரிகள் உடன் சண்டையுடன் உடல் நலமின்றி சிரமத்துடன் குடும்பம் நடத்துபவராக இருப்பர்
    • சிலருக்கு உடல் ஊனம் , கடன்கள் அவமானம், வருமானம் குறைந்தும் இருப்பர் . (சுப பலன் பெற்று இருந்தால் பிற்காலத்தில் அதாவது ஆயுள் காலத்தில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும் )
9ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல தைரியசாலியாகவும் வீர சுபாவமும் பொருந்தி பூர்வ புண்ணியத்தால் வசதிகள் பெற்று வாழ்வர்
    • பக்தி விசுவாசம் நிறைந்தவராக இருப்பர்
10ம் வீட்டில் இருந்தால்:
    • சகோதர சகோதரிகளின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவராக இருப்பர். ஆனால் சுப பலன் இல்லாமல் இருந்தால் எதிர் மறையான நிலை ஏற்படும் .
    • சுப பலன் பெறாவிட்டால் சகோதர சகோதரிகள் பலம் குறைந்து விளங்குவார்கள்
    • தாராளமான மனதுடையவராகவும் சாதாரண வேலை வாழ்க்கை நடத்துப்பவராக இருப்பர்
11ம் வீட்டில் இருந்தால்:
    • சகோதர சகோதரிகளின் அன்பை பெற்றவர்களாகவும் அவர்களால் லாபம் பெற்று இருப்பர்
12ம் வீட்டில் இருந்தால்:
    • இது மறைவு ஸ்தானம் . சகோதர சகோதரிகள் சண்டை சச்சரவும் , அலைச்சலும் , மன அமைதி இன்மையுடன் சொத்துக்கள் விரயம் ஏற்படும்
    • சயன சுக இல்லாமலும், செய்யும் வேலைக்காரணமாகபிற இடங்களின் வசிக்கும் நிலை பெற்றவராக இருப்பர்



2ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்கள்





இரண்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:

    • நன்றான குடும்ப வாழ்க்கை அமையும் சுயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவார்கள்.
    • வாக்குவன்மையுடன், செல்வமும் செல்வாக்குயுடன், அறிவாளியாகவும் நீண்ட ஆயுளுடன், நல்ல கண் பார்வையுடனும் இருப்பர்
2ம் வீட்டில் இருந்தால்:
    • குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும்.
    • பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மொத்தத்தில் கொடுத்துவைத்தவர்.
    • சத்திய வாக்கு வன்மையுடன் கண்டிப்பாக பேசுபவராகவும் இருப்பர் (வாக்குக்கு கட்டுப்பட்டவர்)
3ம் வீட்டில் இருந்தால்:
    • சகோதர் மூலம் வருமானம் கிடைக்கும். (ஆனால் அசுப பலமாகியிருந்தால் சகோதரர்கள் அரிஷ்டம்)
    • அடிமையாகவும், கல்வி ஞானம் குறைந்தவராகவும் (அ) கல்வி பயில முடியாத சூழ்நிலை அமைய பெற்றவர்`
4ம் வீட்டில் இருந்தால்:
    • வீடு வாகனம் மூலம் வருமானம் உண்டு
    • தாயார், மாமக்களின் ஆதரவு பெற்றவராகவும் இருப்பர்
    • நல்ல கல்வி பெற்றவராகவும், வியாபாரத்தில் நாட்டம் உடையவராகவும் இருப்பர்
5ம் வீட்டில் இருந்தால்:
    • திடிர் என்று பண வரவு இருக்கும் லாட்டரி அல்லது ரேஸ் மூலம் பண வரவு இருக்கும்.
    • புத்திரர்களின் மற்றும் பெரிய மனிதர்களின் நட்பையும், ஆதரவையும் பெற்றவர்
    • 5ம் கிரகம் வலுத்து இருந்தால் சந்தன லாபம், செல்வாக்கு, புத்தி கூர்மை, பதவி உண்டாகும் .
6ம் வீட்டில் இருந்தால்:
    • வேலையின் மூலம் பணவரவு இருக்கும்.
    • வியாதி பெற்றவராகவும், தாங்கள் பெற்ற குழந்தைகள் எதிரியாகவும் இருப்பர்
    • கடன் தொல்லைகள் அமைய கஷ்டப்படுவர்
    • ஆனால் சுப பலன் பெற்று இருந்தால் எதிர் மறையான நிலை அமையும்
7ம் வீட்டில் இருந்தால்:
    • வாழ்க்கை தூணையால் வருமானம் உண்டு.
    • சிலருக்கு அந்நிய நாட்டின் மூலமாக வருமானம் இருக்கும்.
    • செல்வத்துடன் இருந்தாலும் பெண்களால் (ஆண்களால் இருந்தால் பெண்கள் விஷயத்திலும்) செலவு ஏற்படும்
8ம் வீட்டில் இருந்தால்:
    • இந்த வீடு மறைவு ஸ்தானம் ஆகியதால் அவ்வளவு நல்ல இடமில்லை. இரண்டுக்கு உரியவன் மறைய கூடாது .
    • வாக்குவன்மையற்றவராகவும், பேச்சில் இனிமை இல்லாத தன்மை உடையவராகவும் இருப்பர்
    • எவருடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்காதவராகவும், வீண் விரயங்களை செய்பவராகவும் இருப்பர்
9ம் வீட்டில் இருந்தால்:
    • தந்தை வழியாக பணம் வரும் அல்லது அந்நிய நாட்டின் மூலமாக பணவரவு இருக்கும்.
    • பெரியவர்களின் ஆசிர்வத்தையும், சொத்து விருத்தி செய்யும் குணதிதியும் உடையவராக இருப்பர்
10ம் வீட்டில் இருந்தால்:
    • தொழில் செய்து பணம் சம்பாதிப்பார்.
    • கல்வியில் திறமை, சாஸ்திர அறிவு, நல்ல தேஜஸ் (உடல் அமைப்பு), செல்வாக்கு , செல்வம் பெற்றவர்கள்
11ம் வீட்டில் இருந்தால்:
    • வாக்கு திறமை பெற்றவராகவும், விசால குணம் பெற்றவராகவும், சகல சௌகர்யங்களை பெற்றவராகவும் இருப்பர்
    • நல்ல பணவரவு இருக்கும். அண்ணன் மூலமாகவும் பணவரவு உதவி இருக்கும்
    • மன அமைதியுடன், சந்தோஷதத்துடன் கூடிய குடும்பம் அமையும்
12ம் வீட்டில் இருந்தால்:
    • பணம் விரையமாகும் (இது நல்ல இடமில்லை - மறைவு ஸ்தானம் ) .
    • விண் பேச்சு பேசுபராகவும் , சதா சுற்றி திரியும் குணமுடையவராகவும் , தன்மதிப்பை தானே கெடுக்கும் குணமுடையவராக இருப்பர்

    • போஜன சயன சுக வாழ்வு இல்லாதவராக இருப்பர்

    • சுப பலமாகியிருந்தால் நல்வழியில் செய்யும் நிலையும் , வரவும் செலவும் உடனுக்குடன் நேரிடுதல் மற்றும் பிற இடங்களில் வாழும் சூழல் அமையும்






இலக்கினாதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்




ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம் .

1. லக்கினாதிபதி 1ம் வீட்டில் (லக்கினத்திலே) இருந்தால்:
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்னத்திலே இருந்தால் அவர் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கிறார் என்று பொருள்

    • ஜாதகர் சுதந்திர மனப்பான்மையுடனும் தன் விருப்பம் போல் வாழ்பவராகவும் இருப்பர். யாருடைய உபசாரணையும் கேட்க மாட்டார்.
    • நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர்
    • சொத்துக்கள், புகழ், வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வர்.
    • தெய்வ நம்பிக்கையும் கொண்டவராக இருப்பர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நன்கு பழக கூடியவராக இருப்பர்.
    • பணக்காரன் ஆனால் கருமி. சுயநலம் கொண்டவராகஇருப்பர்
2. லக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால்:
    • 2-ம் வீட்டில் அதாவது வாக்குஸ்தானத்தில் லக்கினாதிபதி இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும், சுய சம்பாத்தியம் பெற்று இருப்பார்
    • நல்ல குடும்பத்தில் பிறந்தவராகவும் குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர்.
    • சபையில் அவருக்கென்று தனி மரியாதையை இருக்கும்.
    • தனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவர்.
    • மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்தவராக வாழ்வார்.

3. லக்கினாதிபதி 3ம் வீட்டில் இருந்தால்:
    • லக்கினாதிபதி 3ம் வீட்டில் அதாவது சகோதர ஸ்தானத்தில் இருந்தால் அதீத துணிச்சல் உள்ளவராக இருப்பார்.
    • அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பர். 3-ம் வீடு சிறிய பயணத்தையும் குறிக்கிறது
    • எல்லா நலன்களும் வாழ்வில் அடைவர். அதிர்ஷ்டம் உள்ளவர்.
    • புத்திசாலியாகவும் மரியாதையாக நடக்கும் குணமும் இருக்கும்.
    • சகோதர சகோதரரின் அன்பிற்குரியவராக இருப்பார்.
4. லக்கினாதிபதி 4ம் வீட்டில் இருந்தால்:
    • அழகான தோற்றமும், நற்பண்புகள் உடையவனாகவும் இருப்பான்.
    • நிலங்கள், வீடு வாசல், வண்டி வாகனங்கள் பெற்று விளங்குவார்.
    • குறிப்பாக தாயின் அன்பு மற்றும் தாய் வழி உறவினர்களின் அன்பை பெற்றவனாக இருப்பார்.
    • கல்வியில் சிறந்து விளங்குபவராக இருப்பார்
5. லக்கினாதிபதி 5ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல புத்திர செல்வங்கள் பெற்றவராகவும் அவர்களால் மகிழ்ச்சியும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார்
    • தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்
    • சிலருக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.

6. லக்கினாதிபதி 6ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல கிரங்கங்களின் பார்வைகள் அல்லது சேர்க்கை பெறாமல் இருந்தால் அந்த ஜாதகர் வியாதிகள் நிறைந்தவராக இருப்பர்
    • எதிரிகள், அவதூறு பேசுபவர்களை பெற்று மன அமைதி இல்லாமல் இருப்பர். (கடன் உபாதையும் இருக்கும்).
    • 6ம் வீடு மறைவு ஸ்தானம் ஆகும். எனவே இங்கு லக்கினாதிபதி இருப்பது நல்லது அல்ல.
    • சுபகிரகங்கள் சேர்ந்திருந்தால் எதிரிகளை நாசம் செய்பவர்
7. லக்கினாதிபதி 7ம் வீட்டில் இருந்தால்:
    • காமம் மிகுந்தவராகவும் , ஆசைகள் உடையனவராகவும் இருப்பார்
    • சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண நடக்க வாய்ப்புள்ளது.மேலும் வேறு சிலர் வாழ்க்கையில் கடைசி காலத்தில் சந்நியாச வாழ்க்கையில் நாட்டம் ஏற்படும்
    • சிலருக்கு வாழ்க்கை துணையின் மூலமாய் சொத்துக்கள் சேரும்.



    • மற்றவர்களின் கவரும் குணத்துடன் பொறுப்பை ஏற்காமல் வெளியில் சுற்றுபவனாகவும் இருப்பார் மேலும் சுய கவுரவம் அதிகம்.
      (சுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.)



8. லக்கினாதிபதி 8ம் வீட்டில் இருந்தால்:
    • ஆயுள் நிறைந்தவராக இருப்பார்.
    • சிரமத்துடனும் மற்றும் வறுமையுடனும் குடும்பத்தை நடத்துபவராக இருப்பார் (8-ம் இடம் மறைவு ஸ்தானம் )
    • சிலருக்கு நன்னடத்தை குறைந்தும் மற்றும் . சூதாட்ட எண்ணமும் இருக்கும்
    • சிலருக்கு குழந்தைப்பேறு பிரச்சனை, உடல் அங்கங்களில் குறைபாடு போன்றவை அமைந்திருக்கும்
9. லக்கினாதிபதி 9ம் வீட்டில் இருந்தால்:
    • பெரியவர்களை மரியாதையுடன் நடத்தும் குணமும் அவர்களின் ஆசிகளையும் நிறைய பெற்றிருப்பர். நன்மையில் நம்பிக்கை உடையவராக இருப்பார்.
    • தகப்பனர் மற்றும் பித்துருக்களின் அன்பையும், ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் பெற்றவராகவும் அதிஷ்டம் உடையவராகவும் இருப்பர். (திரிகோண வீடு )
    • சத்தியத்துடன் நேர்வழியில் நடப்பவராகவும், தருமத்தைச் செய்பவராகவும், தெய்வவழிபாடும் நிறைந்தவராகவும் பலருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பர்.
10. லக்கினாதிபதி 10ம் வீட்டில் இருந்தால்:
    • குடும்பப் பொறுப்பை அறிந்து நடப்பவராகவும், ஜீவன் பலம் உடையவராகவும் இருப்பர்.
    • மேலும் தெய்வபக்தி உள்ளவராகவும், புண்ணிய காரியத்தில் பற்றுள்ளவராகவும் நற்பெயறும் கீர்த்தியும் உள்ளவராகவும் இருப்பர்
    • உத்தியோகத்திலும் , தொழிலும் பல வெற்றிகளை குவிப்பார். (பத்தாம் அதிபதி லக்கினாதிபதிக்கும் சம்மந்தப்பட்ட தொழில் செய்தல் சிறப்பாக இருக்கும்)
    • அரசாங்கத்தில் நற்பெயரும், செல்வாக்கும் அதிகாரமும் உயர்பதவிகளும் பெற்று இருப்பர்
    • உற்றார் உறவினரிடம் பெயர் பெற்றவராகவும் இருப்பர்
11. லக்கினாதிபதி 11ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல இடமாகியதால் மொத்தத்தில் நிம்மதியான வாழ்கை அமையும்.
    • மூத்த சகோதரர்களின் ஆதரவு நிறைந்து இருக்கும்
    • லாபமான தொழிலைச் செய்பவராகவும் நீண்ட ஆயுளை உடையவராகவும் இருப்பர்
    • வாழ்க்கையில் இவர் ஓர் நல்ல நிலைக்கு வருவார். நிம்மதியான வாழ்கை அமையும்.
12. லக்கினாதிபதி 12ம் வீட்டில் இருந்தால்:
    • வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். (மறைவு ஸ்தானம் )
    • சிலருக்கு அடிக்கடி இட மாற்றம் சந்தர்ப்பம் ஏற்படும் .
    • சோம்பேரி என்றும் திறமையற்றவர் என்றும் மற்றவர்களால் அழைக்கப்படுவர்.
    • சில சமயத்தில் அவப்பெயரும், நிந்தனைகளும் வந்து சேரும்.
    • சுப கிரக சேர்க்கை மற்றும் பார்வை ஏற்பட்டால் ஜாதகருக்கு பலன் நேர்மாறாக இருக்கும்
லக்கினாதிபதி 6, 8, 12-ம் வீட்டைத்தவிர மற்ற வீடுகளில் இருந்தால் சுபப் பலனைத் தருவார்கள். உதாரணத்திற்கு ஒருவர் கும்ப லக்கினம் எனில் சனி பொதுவாக கெட்ட கிரகம் தான். ஆனால் அவருக்கு அவர் லக்கினாதிபதி. எனவே சனி இவருக்கு நம்மைத்தான் செய்வார். சனி கட்டாயம் கெடக்கூடாது.

லக்கின ஸ்தனம் பலன்கள்




லக்கின ஸ்தனம் பலன்கள்


இந்த பாகத்தில் ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம். உதாரணத்திற்கு ஒரு ஜாதகம் எடுத்துக்கொள்வோம். அந்த ஜாதகம் மேஷலக்கினம் எனில்
மேஷம் - லக்கினம் (1ம் இடம்)
ரிஷபம் - 2ம் வீடு,
மிதுனம் - 3ம் வீடு,
கடகம்- 4ம் வீடு,
சிம்மம் - 5ம் வீடு,
கன்னி - 6ம் வீடு,
துலாம் - 7ம் வீடு,
விருச்சிகம் - 8ம் வீடு,
தனுசு - 9ம் வீடு,
மகரம் - 10ம் வீடு,
கும்பம் - 11ம் வீடு,
மீனம் - 12ம் வீடு ஆகும்.
இந்த 12 வீட்டு அதிபதிகள் 12 வீட்டில் இருக்கும் போது பலன் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். மிகவும் அவசியமும் ஆகும்
லக்கினம்:
சரி….ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம் . லக்கினம் மிகவும் முக்கியமாகும். எனவே லக்கினாதிபதி கெட்டு போககூடாது ( கெட்டுபோவது என்றால் லக்கினாதிபதி 6, 8, 12ல் மறைவதும் , கெட்ட கிரகங்கள் பார்வை பெறுதல் ஆகும்)
லக்கினாதிபதி , மற்ற விட்டின் அதிபதிகள் எந்த விட்டில் இருக்கிறார் என்று பர்ர்த்து பலன் சொல்ல வேண்டும்