எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Sunday, May 3, 2020

இலக்கினாதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்




ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம் .

1. லக்கினாதிபதி 1ம் வீட்டில் (லக்கினத்திலே) இருந்தால்:
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்னத்திலே இருந்தால் அவர் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கிறார் என்று பொருள்

    • ஜாதகர் சுதந்திர மனப்பான்மையுடனும் தன் விருப்பம் போல் வாழ்பவராகவும் இருப்பர். யாருடைய உபசாரணையும் கேட்க மாட்டார்.
    • நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர்
    • சொத்துக்கள், புகழ், வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வர்.
    • தெய்வ நம்பிக்கையும் கொண்டவராக இருப்பர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நன்கு பழக கூடியவராக இருப்பர்.
    • பணக்காரன் ஆனால் கருமி. சுயநலம் கொண்டவராகஇருப்பர்
2. லக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால்:
    • 2-ம் வீட்டில் அதாவது வாக்குஸ்தானத்தில் லக்கினாதிபதி இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும், சுய சம்பாத்தியம் பெற்று இருப்பார்
    • நல்ல குடும்பத்தில் பிறந்தவராகவும் குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர்.
    • சபையில் அவருக்கென்று தனி மரியாதையை இருக்கும்.
    • தனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவர்.
    • மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்தவராக வாழ்வார்.

3. லக்கினாதிபதி 3ம் வீட்டில் இருந்தால்:
    • லக்கினாதிபதி 3ம் வீட்டில் அதாவது சகோதர ஸ்தானத்தில் இருந்தால் அதீத துணிச்சல் உள்ளவராக இருப்பார்.
    • அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பர். 3-ம் வீடு சிறிய பயணத்தையும் குறிக்கிறது
    • எல்லா நலன்களும் வாழ்வில் அடைவர். அதிர்ஷ்டம் உள்ளவர்.
    • புத்திசாலியாகவும் மரியாதையாக நடக்கும் குணமும் இருக்கும்.
    • சகோதர சகோதரரின் அன்பிற்குரியவராக இருப்பார்.
4. லக்கினாதிபதி 4ம் வீட்டில் இருந்தால்:
    • அழகான தோற்றமும், நற்பண்புகள் உடையவனாகவும் இருப்பான்.
    • நிலங்கள், வீடு வாசல், வண்டி வாகனங்கள் பெற்று விளங்குவார்.
    • குறிப்பாக தாயின் அன்பு மற்றும் தாய் வழி உறவினர்களின் அன்பை பெற்றவனாக இருப்பார்.
    • கல்வியில் சிறந்து விளங்குபவராக இருப்பார்
5. லக்கினாதிபதி 5ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல புத்திர செல்வங்கள் பெற்றவராகவும் அவர்களால் மகிழ்ச்சியும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார்
    • தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்
    • சிலருக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.

6. லக்கினாதிபதி 6ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல கிரங்கங்களின் பார்வைகள் அல்லது சேர்க்கை பெறாமல் இருந்தால் அந்த ஜாதகர் வியாதிகள் நிறைந்தவராக இருப்பர்
    • எதிரிகள், அவதூறு பேசுபவர்களை பெற்று மன அமைதி இல்லாமல் இருப்பர். (கடன் உபாதையும் இருக்கும்).
    • 6ம் வீடு மறைவு ஸ்தானம் ஆகும். எனவே இங்கு லக்கினாதிபதி இருப்பது நல்லது அல்ல.
    • சுபகிரகங்கள் சேர்ந்திருந்தால் எதிரிகளை நாசம் செய்பவர்
7. லக்கினாதிபதி 7ம் வீட்டில் இருந்தால்:
    • காமம் மிகுந்தவராகவும் , ஆசைகள் உடையனவராகவும் இருப்பார்
    • சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண நடக்க வாய்ப்புள்ளது.மேலும் வேறு சிலர் வாழ்க்கையில் கடைசி காலத்தில் சந்நியாச வாழ்க்கையில் நாட்டம் ஏற்படும்
    • சிலருக்கு வாழ்க்கை துணையின் மூலமாய் சொத்துக்கள் சேரும்.



    • மற்றவர்களின் கவரும் குணத்துடன் பொறுப்பை ஏற்காமல் வெளியில் சுற்றுபவனாகவும் இருப்பார் மேலும் சுய கவுரவம் அதிகம்.
      (சுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.)



8. லக்கினாதிபதி 8ம் வீட்டில் இருந்தால்:
    • ஆயுள் நிறைந்தவராக இருப்பார்.
    • சிரமத்துடனும் மற்றும் வறுமையுடனும் குடும்பத்தை நடத்துபவராக இருப்பார் (8-ம் இடம் மறைவு ஸ்தானம் )
    • சிலருக்கு நன்னடத்தை குறைந்தும் மற்றும் . சூதாட்ட எண்ணமும் இருக்கும்
    • சிலருக்கு குழந்தைப்பேறு பிரச்சனை, உடல் அங்கங்களில் குறைபாடு போன்றவை அமைந்திருக்கும்
9. லக்கினாதிபதி 9ம் வீட்டில் இருந்தால்:
    • பெரியவர்களை மரியாதையுடன் நடத்தும் குணமும் அவர்களின் ஆசிகளையும் நிறைய பெற்றிருப்பர். நன்மையில் நம்பிக்கை உடையவராக இருப்பார்.
    • தகப்பனர் மற்றும் பித்துருக்களின் அன்பையும், ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் பெற்றவராகவும் அதிஷ்டம் உடையவராகவும் இருப்பர். (திரிகோண வீடு )
    • சத்தியத்துடன் நேர்வழியில் நடப்பவராகவும், தருமத்தைச் செய்பவராகவும், தெய்வவழிபாடும் நிறைந்தவராகவும் பலருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பர்.
10. லக்கினாதிபதி 10ம் வீட்டில் இருந்தால்:
    • குடும்பப் பொறுப்பை அறிந்து நடப்பவராகவும், ஜீவன் பலம் உடையவராகவும் இருப்பர்.
    • மேலும் தெய்வபக்தி உள்ளவராகவும், புண்ணிய காரியத்தில் பற்றுள்ளவராகவும் நற்பெயறும் கீர்த்தியும் உள்ளவராகவும் இருப்பர்
    • உத்தியோகத்திலும் , தொழிலும் பல வெற்றிகளை குவிப்பார். (பத்தாம் அதிபதி லக்கினாதிபதிக்கும் சம்மந்தப்பட்ட தொழில் செய்தல் சிறப்பாக இருக்கும்)
    • அரசாங்கத்தில் நற்பெயரும், செல்வாக்கும் அதிகாரமும் உயர்பதவிகளும் பெற்று இருப்பர்
    • உற்றார் உறவினரிடம் பெயர் பெற்றவராகவும் இருப்பர்
11. லக்கினாதிபதி 11ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல இடமாகியதால் மொத்தத்தில் நிம்மதியான வாழ்கை அமையும்.
    • மூத்த சகோதரர்களின் ஆதரவு நிறைந்து இருக்கும்
    • லாபமான தொழிலைச் செய்பவராகவும் நீண்ட ஆயுளை உடையவராகவும் இருப்பர்
    • வாழ்க்கையில் இவர் ஓர் நல்ல நிலைக்கு வருவார். நிம்மதியான வாழ்கை அமையும்.
12. லக்கினாதிபதி 12ம் வீட்டில் இருந்தால்:
    • வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். (மறைவு ஸ்தானம் )
    • சிலருக்கு அடிக்கடி இட மாற்றம் சந்தர்ப்பம் ஏற்படும் .
    • சோம்பேரி என்றும் திறமையற்றவர் என்றும் மற்றவர்களால் அழைக்கப்படுவர்.
    • சில சமயத்தில் அவப்பெயரும், நிந்தனைகளும் வந்து சேரும்.
    • சுப கிரக சேர்க்கை மற்றும் பார்வை ஏற்பட்டால் ஜாதகருக்கு பலன் நேர்மாறாக இருக்கும்
லக்கினாதிபதி 6, 8, 12-ம் வீட்டைத்தவிர மற்ற வீடுகளில் இருந்தால் சுபப் பலனைத் தருவார்கள். உதாரணத்திற்கு ஒருவர் கும்ப லக்கினம் எனில் சனி பொதுவாக கெட்ட கிரகம் தான். ஆனால் அவருக்கு அவர் லக்கினாதிபதி. எனவே சனி இவருக்கு நம்மைத்தான் செய்வார். சனி கட்டாயம் கெடக்கூடாது.

2 comments:

  1. நன்றாக உள்ளது... தொடரவும்

    ReplyDelete

Thanks