
கால அளவு முறைகள் 60 வினாடி | 1 நாழிகை |
30 நாழிகை | 1 பகல் (அ ) 1 இரவு |
60 வினாடி | 1 நாழிகை |
30 நாழிகை | 1 பகல் (அ ) 1 இரவு |
60நாழிகை | 1 நாள் |
7 நாள் | 1 வாரம் |
15 நாள் | 1 பட்சம் |
2 பட்சம் | 1 மாதம் |
2 மாதம் 1 | ருது |
2 அயனம் | 1 வருடம் |
60 வருடம் | 1 வட்டம் |
60 நாழிகை (1 நாள்) | 24 மணிதுளிகள் |
1 நாழிகை | 60 விநாழிகை |
60 விநாழிகை | 24 நிமிடங்கள் |
1 விநாழிகை | 60 தற்பரை |
1 விநாழிகை (60 தற்பரை) | 24 வினாடிகள் |
யுகங்கள் - கிருதயுகம் (1728000 வருடங்கள்)
- திரேதாயுகம் (1296000 வருடங்கள்)
- துலாபாரயுகம் (864000 வருடங்கள்)
- கலியுகம் (432000 வருடங்கள்)
(இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகள் கொண்டதாகும். நாம் வாழும் யுகம் கலியுகம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த யுகத்தில் சுயநலமாக மக்கள் வாழ்ந்து பாவங்கள் பல செய்து துன்படுவார்கள் என்றும் அதனால் சத்தியத்தை நிலைநாட்ட விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து மக்களை கொன்று குவித்து சத்தியத்தையும் , தர்மத்தையும் நிலைநாட்டுவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த யுகத்தை சத்திய யுகம் என்றும் சொல்வர். கலியுகத்தில் தற்போது 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது )
கிரகங்கள்
நட்சத்திரத்தின் மொழி தான் ஜோதிடம் அவை 9 கிரகங்கள் மூலமாக ஜோதிடத்தில் குறிப்பார்கள்
★ சூரியன் (Sun)
★ சந்திரன் (Moon)
★ செவ்வாய் (Mars)
★ புதன் (Mercury)
★ குரு (Jupiter)
★ சுக்கிரன் (Venus)
★ சனி (saturn)
★ ராகு (Ragu - dragon’s Head)
★ கேது(Kethu - dragon’s Tail)
7 கிரகங்களை Telescope உதவியுடன் பார்க்கலாம். ஆனால் ராகு மற்றும் கேதுவை பார்க்க முடியாது என்றால் அவைகள் நிழல் கிரகங்கள். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதை தான் ராசி மண்டலம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து அதற்கு பெயர் இட்டனர். அந்தப் பெயரால் தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றன .
அவைகள் கீழ்வருமாறு காண்க :

இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகங்களின் வேகங்கள் மாறுபடும் அதாவது சந்திரனுக்கு நீள்வட்ட பாதையில் சுற்றி வர 1 மாதம் ஆகும் ஆனால் சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை வருடங்கள், சனிக்கு 30 வருடங்கள் என்று ஒவ்வொரு கிரகங்களுக்கும் வேகம் அளவு மாறுபடும்
வருடங்கள்-60
ஆங்கில மாதம் ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய ஒரு சுற்று ஆகும். இந்த காலம் தான் தமிழில் ஒராண்டாகும். ஒவ்வொரு தமிழ் ஆண்டுகளுக்கும் பெயர் உண்டு. மொத்தம் 60 ஆண்டுகள். இந்த. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்கபடும்.
வருடங்களின் பெயர்கள்:
(சூரியன் வானமண்டலத்தைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமே ஒர் ஆண்டாகும்)